உங்கள் வீட்டின் பிற அறைகளைப் போலவே குளியலறைகளுக்கும் அதிகப் பராமரிப்பு தேவை. கூடுதலான தேவை என்றுகூடச் சொல்லலாம். குளியல் தொட்டிகள், கை கழுவும் தொட்டி, கழிப்பறைக் கோப்பை இவை யாவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லையெனில் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துவிடும். நட்சத்திர விடுதிகளில் பளீரிடும் குளியலறைகளைப் போன்று உங்கள் வீட்டிலும் வேண்டுமா? அதற்கு நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. கொஞ்சம் மெனக்கிட்டால் போதும்.
முதலில் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை குளியலறைகளைக் கழுவ வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும். அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. தினமும் செய்தால் மிக நல்லது.
கழிப்பறைக் கோப்பையைக் கடைகளில் கிடைக்கும் பல விதமான சுத்தம்செய்யும் திரவங்கள் கொண்டு சுத்தம் செய்யலாம். 15 அல்லது 20 நிமிடங்கள் ஊற விட்டுக் காம்பு நீண்ட தேய்ப்பன்களைக் கொண்டு சுத்தம் செய்தால் எளிதாய் இருக்கும்.
குளியல் தொட்டிகள் இருந்தால் அவை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் சுத்தம் செய்ய வேண்டும். ஈரத்தன்மை நீடித்திருந்தால் பூஞ்சை ஏற்படும். குளியல் தொட்டி மீது சாய்ந்து நம் உடலோடு இணைப்பதால் பூஞ்சை இருந்தால் நமக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு . ஆகையால் மிதமான சுத்தம்செய்யும் திரவம் கொண்டு சுத்தம்செய்து பின் துணியால் ஈரமில்லாமல் துடைத்து விட வேண்டும். இதே முறையில் ஷவர் குழாய்களையும் சுத்தம் செய்யலாம்.
முகம், கை கழுவுதல், ஷேவிங், பல் துலக்குதல் எனக் கை கழுவும் கோப்பைதான் நம் குளியலறைகளிலேயே அதிகம் பயன்படுத்தப்படுவது ஆகும். ஆதலால் அதனை எப்போதுமே கிருமிகள் அற்று சுத்தமாய் வைத்திருப்பது மிக மிக அவசியம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னும் அல்லது ஒரு நாளுக்கு ஒரு முறையேனும் சுத்தம் செய்ய வேண்டும்.
குளியலறைகளின் பெரும்பான்மை இடத்தை டைல்கள் ஆக்ரமித்துள்ளன. அழுக்கான, சோபை இழந்த டைல்கள் மொத்த பாத்ரூமின்அழகையே பாதித்து விடும். டைல்கள் மீது தெறிக்கும் நீர் மற்றும் சோப் திவலைகளை எளிதில் அகற்றலாம். முக்கால் கப் பேக்கிங் சோடாவுடன் கால் கப் பிளீச் சேர்த்து பழைய பல் துலக்கும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்தால் எல்லா விதமான கறைகளும் நீங்கி டைல்கள் பளீரிடும். இது போன்ற சுத்தப்படுத்தும் வேலைகள் செய்யும் போது கைகளுக்குப் பாதுகாப்பாக நீண்ட உறை அணிந்துகொள்ள வேண்டும்.
ஷவர்களில் அடைப்பு ஏற்பட்டு நீர்வரத்து குறைவது சகஜம். இது போன்ற சமயங்களில் ஷவர் ஹெட்டைக் கழற்றி அன்டைலூட்டட் வொயிட் வினிகரால் நிறைத்த பிளாஸ்டிக் கவரில் அமிழ்த்தி வைக்கவும். (Undiluted white vinegar). இது வன்பொருளகக் கடைகளில் கிடைக்கும். பின்னர் ரப்பர் பேண்டினால் மூடி இரவு முழுக்க ஊற விடவும். அடுத்த நாள் பழைய பல் துலக்கும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்தால் அனைத்து அடைப்பும் நீங்கி நீர் அருவியெனக் கொட்டும்.
குளியலறைகளில் உள்ள குழாய்கள் மீதும் நாம் அக்கறை காட்ட வேண்டும். கடுமையான சுத்தம்செய்யும் திரவம் கொண்டு சுத்தம் செய்தால் குழாய்களின் மெட்டல் கோட்டிங் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. ஆகையால் அரை கப் பேக்கிங் சோடா மற்றும் அரை கப் வொயிட் வினிகர் கலந்த கலவையால் சுத்தம் செய்யலாம். டிரைனேஜ் பைப்களில் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க மாதமொரு முறை வெந்நீர் ஊற்றி விட வேண்டும்.
ஈரக் கால் தடம் தரையின் அழகைக் கெடுத்துவிடும். எனவே உபயோகப்படுத்திய பின் சுத்தமாகக் காய்ந்த துணி கொண்டு துடைத்து விடலாம் அல்லது வைப்பர் மூலம் சுத்தப்படுத்தலாம். குளியலறைகளில் உள்ள கண்ணாடிகளுக்கும் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
அறையில் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் இருந்தாலேயே குளியலறை பளபளக்கும். அந்த நோக்கத்திற்காகப் பொருத்தப்பட்டுள்ள வெளியேற்றும் மின்விசிறி போன்றவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். உள்ளே மின் சாதனங்கள் எதுவும் உபயோகித்தால் தண்ணீர்க் குழாய் அதனருகில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்யப் பயன்படுத்தும் சாதனங்கள், பொருட்கள் யாவையும் குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் சேமித்து வையுங்கள்.
இது போன்று சுத்தம் செய்த பின் நறுமணம் கமழும் வண்ணம் தெளிப்பான்கள் அல்லது வாசனை மெழுவர்த்தி ஏற்றி வைத்தால் குளியலறை, அதி நவீன நட்சத்திர விடுதி போலத் தோற்றத்தைத்தரும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago