ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன்: வெற்றித் திட்டமா?

By உமா

வீடு கட்டவும் வாங்கவும் வங்கிகள் அல்லது வீட்டு வசதி நிறுவனங்கள் அளிக்கும் வீட்டுக் கடன் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால், வீட்டை அடமானம் வைத்து மாதாமாதம் வங்கியிடம் இருந்து பணம் பெறும் திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு திட்டம் பொதுத்துறை வங்கிகளில் செயல்பாட்டில் உள்ளது. அந்தத் திட்டத்தின் பெயர் ‘ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் திட்டம்’. இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டு பத்தாண்டுகள் ஆகும் நிலையில், இந்தியாவில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றதா?

திட்டத்தின் நோக்கம்

ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் என்பது வீட்டுக் கடனுக்கு அப்படியே எதிர்மறையான ஒரு கடன் திட்டம். 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கான திட்டம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது இந்தத் திட்டம். வயதான காலத்தில் பணம் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்த கஷ்டப்படும் மூத்த குடிமக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.இந்தத் திட்டம் இந்தியாவில் 2006-07-ம் ஆண்டு அறிமுகமானது.

தன் பெயரில் வீடு இருக்கும் பட்சத்தில் யார் தயவையும் எதிர்பார்க்காமல் வீட்டை அடமானம் வைத்து ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பணத்தை வாங்கி மூத்த குடிமக்கள் செலவு செய்யலாம். குறிப்பாக மூத்த குடிமக்களின் மருத்துவத் தேவைக்கு இந்தத் திட்டம் உதவக்கூடியது. ஆனாலும் எந்தத் தேவைக்கு வேண்டுமானாலும் பணத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். அது அவர்களுடைய விருப்பம்.

மாதந்தோறும் பணம்

தொடக்கத்தில் இந்தத் திட்டத்திற்கான கால அளவு அதிகபட்சம் 15 முதல் 20 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டிருந்தன. ஆனால், வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் வங்கி பணம் அளிக்கும்படி திட்டம் மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன்படி முதலில் 15 முதல் 20 சதவீதத் தொகையை வங்கிகள் வீடு அடமானம் வைக்கும் மூத்த குடிமக்களிடம் வழங்கும்.

பின்னர் கடன்தாரர் விருப்பத்திற்கு ஏற்ப மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வங்கிகள் அவருக்கு வழங்கும். கணவனுக்குப் பிறகு மனைவிக்கும் தொகை கிடைக்கும். அவரது மறைவுக்குப் பிறகு வீட்டை விற்று, வங்கிகள் வழங்கிய பணத்தை எடுத்துக்கொள்ளும். மீதி பணம் இருந்தால் அதை வாரிசுகளிடமோ அல்லது மூத்த குடிமக்கள் விரும்பியபடி வங்கிகள் வழங்கி விடும். இதுதான் ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடனின் திட்டம்.

சலுகைகள்

முன்பு இந்தக் கடன் திட்டத்தில் வங்கிகள் வழங்கும் தொகைக்கு வருமான வரி வசூலிக்கப்பட்டு வந்தது. மூத்த குடிமக்கள் பயன் பெறும் வகையில் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது. தற்போது ரிவர்ஸ் மார்ட்கேஜ் அடிப்படையிலான இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் திட்டமாக (ஆயுட்காலத் திட்டம்) மாற்றப்பட்டுள்ளது.

வீட்டை மீட்கலாமா?

ஒருவேளை ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் திட்டப்படி பெற்றோர்கள் கடன் வாங்கியிருந்ததால், வாரிசுகள் கடனை அடைத்து வீட்டை மீட்க முடியுமா என்ற சந்தேகம் எழலாம். நிச்சயமாக முடியும். சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி, வங்கிகள் அளிக்கும் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வீட்டை வாரிசுதாரர்கள் திருப்பிக் கொள்ள முடியும். உண்மையில் இந்தக் கடன் திட்டத்தின் மூலம் வங்கிகளுக்குப் பெரிய பலன் கிடையாது. ஆனால், சமூக கடமைக்காக மத்திய அரசும் வங்கிகளும் இதைச் செய்து வருகின்றன.

வெற்றித் திட்டமா?

பொதுவாக சொந்த வீட்டை தன் பெயரில் வைத்துள்ள இந்திய மூத்த குடிமக்களை கைவிடும் நிலை கொஞ்சம் குறைவுதான். வீட்டுக்காவது பிள்ளைகள் பெற்றோர்களைக் கவனிக்கும் வாய்ப்புகள் உண்டு. அதையும் மீறி வயதான காலத்தில் கைவிடப்பட்டால் இந்தத் திட்டம் நிச்சயம் மூத்த குடிமக்களுக்குக் கைகொடுக்கக்கூடியது. இப்படி மூத்த குடிமக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் இந்தியாவில் வெற்றி பெற்றிருக்கிறதா என்றால் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்று சொல்லலாம்.

சொந்த வீடு பாசம்

இந்தத் திட்டத்தை அணுகும் மூத்த குடிமக்கள் குறைவு என்றே வங்கியாளர்கள் கூறுகிறார்கள். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில் இந்தியர்கள் சொந்த வீட்டை குடும்ப சொத்தாக கருதுவதுதான். தனக்குப் பின் தன் மகன், அதன்பிறகு பேரன் என வாழையடிவாழையாக தன் குடும்பத்தினர் சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்று மூத்தவர்கள் கருதவும் செய்கிறார்கள். இந்திய கலாச்சாரத்தில் சொந்த வீடு வைத்திருப்பது கவுரவத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுப்பதும் ஒரு காரணம். சொந்த வீட்டை தன் பிள்ளைப் போல பார்த்துக்கொள்ளும் மூத்த குடிமக்கள் இந்தியாவில் அதிகம்.

ஓய்வுக் காலத்தில் வீட்டை அடமானம் வைத்துவிட்டு வாழ்வது ஆபத்தானதாகவும் மூத்த குடிமக்கள் கருதுகிறார்கள். மேலும் சொந்த வீட்டை உணர்வுபூர்வமாக அணுகுவதால் ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் திட்டத்தில் அடமானம் வைத்து பணம் பெற மூத்த குடிமக்கள் தயங்குகிறார்கள். இதுபோன்ற பல காரணங்களால் இந்தத் திட்டம் இந்தியாவில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்று சொல்கிறார்கள் வங்கியாளர்கள்.

சொந்த வீடு பிணைப்பு என்பதுதான் இதுதான் போல!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்