சுற்றுச்சுழல் மாடுபடுவதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று கட்டுமானத் துறையின் வளர்ச்சி. மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் மிக முக்கியமானதான வீட்டுத் தேவையை நிறைவேற்றக் கட்டுமானத் துறையின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது. ஆனால் இயற்கை ஆற்றலின் 40 சதவீதமானது கட்டுமானத் துறை மூலம் பாதிக்கப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் கட்டுமானப் பொருள்கள் அனைத்தும் இயற்கையை அழித்து உண்டாக்கப்படுகின்றன. உதாரணமாகச் செங்கற்கள் தயாரிக்கப்படுவதற்கான மண் பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்படுகிறது.
செங்கற்களைச் சுடுவதற்கான விறகுகளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. அதுபோலத்தான் கட்டுமானத்துக்கான ஆற்று மணல். செங்கல்லுக்கு மாற்றான ஒரு முறையைக் கண்டுபிடிப்பதன் மூலம் இவ்வாறு ஆற்றல் வீணாவதைத் தடுக்க முடியும். அல்லது செங்கல்லைக் குறைவாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆற்றல் வீணாவதைக் குறைக்க முடியும். அதுபோல ஒரு மூட்டை சிமெண்ட் தயாரிக்க 90 கிலோ கார்பன் டை ஆக்ஸைடு செலவாகிறது. மேலும் கட்டுமானக் கம்பிகள் தயாரிக்கவும் நிறைய மின்சார ஆற்றல் செலவழிகிறது. ஆக இன்றைக்குள்ள இந்தக் கட்டுமான நுட்பத்தை சுனாமி, வெள்ளம் போல ஒரு பேரிடர் எனலாம் என்கிறார்.
கட்டுமானமே இல்லாமல் வாழ்க்கை சாத்தியமல்ல என்பது நிதர்சனம். ஆனால் இன்றைக்குள்ள இயந்திரத் தன்மையிலான கட்டுமானங்களை விட்டுவிட்டு உயிர்ப்புடனான பழையகால கட்டுமானத் தொழில்நுட்பத்திற்குத் திரும்பலாம். அந்தக் காலத்து வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை. செங்கல்லோ சிமெண்டோ கிடையாது.
அவை இன்றும் உறுதியோடு இருப்பதைக் கிராமங்களில் பார்க்க முடியும். இந்த முறையை நாம் பின்பற்றலாம் என்கிறார் ராமகிருஷ்ணன். பழைய காலக் கட்டிடக் கலையில் உள்ள இன்னொரு சிறப்பான அம்சம் அது நூற்றாண்டு கடந்தும் உயிர்ப்புடன் இருக்கும். அதாவது ஒரு நூறு ஆண்டுகளில் அந்தக் கட்டிடம் செயலிழக்கிறது என்றால் அதன் இடிபாடுகள் மண்ணுடன் மண்ணாகக் கலந்து உயிர்ப்புள்ள மணலாக (Living Soil) மாறுகின்றன. ஆனால் இன்றைக்குள்ள கட்டிடத்தை அதன் முதுமைக்குப் பிறகு இடிக்கும்போது அது இறந்து உயிர்ப்புள்ள மணலாக (Living Soil) மாற ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
பழைய காலக் கட்டிடப் பணிக்கும் இன்றைக்குள்ள கட்டிடப் பணிக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால் முன்னது ஒரு கலையாகப் போற்றப்பட்டது. பின்னது வெறும் இயந்திரத் தொழிலாகப் பார்க்கப்படுவது. கலை என்றதும் மாட மாளிகைகள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் சின்னஞ்சிறு வீடுகளின் கட்டுமானத்தில்கூடச் சின்னச் சின்ன அழகான அம்சங்களை நாம் பார்க்க முடியும்.
ராமகிருஷ்ணன் இம்மாதிரியான கட்டுமானங்கள் அழகானவை மட்டுமல்ல வலிமையானவையும்கூட என்கிறார். மேலும் பழைய காலக் கட்டிடங்கள் கலாச்சார அடையாளங்களாகவும் விளங்குகின்றன என்கிறார். கன்னியாகுமரிப் பகுதியை எடுத்துக்கொண்டால் அந்தக் கட்டிடத்தில் ஒரு தனித்தன்மை இருக்கும். மற்ற பகுதிக் கட்டிடங்களும் தனித்த அடையாளத்துடன் இருக்கும் என உதாரணம் காட்டுகிறார். இன்றைக்குக் கன்னியாகுமரியில் வீடுகட்டினாலும் சரி காஷ்மீரில் வீடு கட்டினாலும் சரி ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
உள்ளூர்க் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவதால் கட்டிடத்துக்கு இந்தத் தனித்தன்மை கிடைக்கிறது. செங்கல்லுக்கு மாற்றாக அழுத்தப்பட்ட செங்கல்லைப் (Compressed Bricks) பயன்படுத்தலாம். மரக் கதவுக்குப் பதிலாக சிமெண்ட் கதவைப் பயன்படுத்தும்போது இயற்கை ஆற்றல் சேமிக்கப்படும் வாய்ப்புள்ளது என்கிறார். மூங்கில் அதிகம் உள்ள இடங்களில் மூங்கிலைப் பயன்படுத்திச் சுவர் எழுப்பலாம். அதாவது மூங்கிலை ஆதாரமாகக் கொண்டு அதன் மேல் மண் பூசிச் சுவர் எழுப்பலாம்.
இன்றைக்குப் பசுமைக் கட்டிடங்கள் எனக் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்படுவை உண்மையான பசுமைக் கட்டிடங்கள் அல்ல.
கண்ணாடியையும் அலுமினியத்தையும் கொண்டு வடிவமைத்துவிட்டு அதைப் பசுமைக் கட்டிடம் என்கிறார்கள். உண்மையில் கண்ணாடி தயாரிக்க அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. இயற்கை ஒளியைப் பயன்படுத்துதல், மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் மேலாண்மை ஆகியவை பசுமைக் கட்டுமானத்துக்கான அம்சங்கள். சில நிறுவனங்கள் சூரிய மின்சக்தி முறையை மட்டும் காட்டிப் பசுமைக் கட்டிடம் எனச் சான்றிதழ் பெற்றுக்கொள்கின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago