யாராவது விருந்தினர்கள் வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் வரவேற்பு அறையில் இருக்கும் பொருட்களைத்தான் வேகமாக உடனடியாகச் சரி செய்வோம். மற்ற அறைகளின் கதவுகளைத் தாளிட்டோ திரைச் சீலைகளைத் தொங்கவிட்டோ மறைத்து விடலாம்.
உங்களைப் பற்றிய ஒரு பிம்பம் அழுத்தமாகப் பதிய வரவேற்பு அறை மிகவும் உதவும். வரவேற்பு அறை சிறப்பாக இருக்க இதோ சில ஆலோசனைகள்.
முதலில், இதில் கசகசவென்று நெருக்கமாகப் பல பொருட்களை இடம் பெறச் செய்யாதீர்கள்.
வரவேற்பு அறையில் அறைக்கலன்களைச் சுவருக்கு அருகே வைத்தால் அறையில் காலியிடம் கொஞ்சம் அதிகம் இருப்பதாகத் தோற்றம் அளிக்கும்.
பிற அறைகளுக்கு என்ன வண்ணம் தீட்ட வேண்டும் என்பது உங்கள் இஷ்டம். ஆனால், வரவேற்பு அறையின் சுவர்கள் வெள்ளையில் இருந்து சிறிது மாறுபட்ட வண்ணத்தில் இருக்கட்டும். இதன் காரணமாக வரவேற்பு அறை கொஞ்சம் அகலமாகத் தோற்றம் அளிக்கும். மெல்லிய நீலமும் வெள்ளையும் கலந்த நிறத்தில் பெயிண்ட் செய்தால் பார்ப்பதற்கு ஓர் அமைதி கிடைக்கும்.
பெரிய கண்ணாடி ஒன்று அறையில் இடம் பெறலாம். இது கலைத்தன்மை கொண்ட சட்டத்துக்குள் அமைந்திருப்பது நல்லது. அழகோடு அதற்கு அதிக இடம் கொண்ட ஒரு மாய உணர்வையும் ஏற்படுத்தும் தன்மை உண்டு.
வரவேற்பு அறையில் உள்ள சோபா, டிசைன்கள் ஏதுமற்றதாக இருப்பது நல்லது. சுவர்களில் கலை வேலைப்பாடுகள் இருக்கட்டும். இவையும் பளிச்சென்ற கம்பளமும் வரவேற்பு அறைக்குத் தேவைப்படும் எழிலை அளிக்கும். உங்கள் பட்ஜெட் இடம் கொடுக்குமானால் அடர் பருத்தியால் ஆன கம்பளங்களையும் தொன்மையான பட்டுக் கம்பளத்தையும் இடம் பெறச் செய்யுங்கள்.
நல்ல வெளிச்சம் வரவேற்பு அறைக்கு முக்கியம். ஓர் அழகான தரை விளக்கின் மூலம் உங்கள் வரவேற்பு அறை ஒளி பெறலாம். வரவேற்பு அறையின் மூலையில் உயரம் குறைந்த மேஜை ஒன்றில் நவீன மேஜை விளக்கு இடம் பெறட்டும். இவை இரண்டும் மறைமுக ஒளியை அளிக்கும். குறைவான நிழலையே உருவாக்கும்.
குளிர்நாடுகளில் குளிர் காய்வதற்கான கணப்பு வரவேற்பு அறையின் ஒரு பகுதியில் இருக்கும். நம் நாட்டிலும் குளிரான பகுதிகளில் வசிப்பவர்கள் இதை இடம் பெறச் செய்யலாம்.
வரவேற்பு அறைக்குள் மிக அதிகமான சூரிய ஒளி வருகிறது என்றால் தடிமனான இழைகள் கொண்ட திரைச்சீலைகளையோ மறைப்புகளையோ பயன்படுத்துங்கள்.
வரவேற்பு அறை என்பது உங்களது தனித்தன்மையை வெளிக்காட்ட வேண்டும். எனவே, உங்கள் மனதுக்கு மிகவும் பிடித்த கலைப் பொருட்களை அங்கு இடம் பெறச் செய்யலாம்.
சுவர்களில் ஓவியங்களோ வேறு கலைப்படைப்புகளையோ தொங்க விடுவதில் ஒரு சமச்சீர்மை இருக்க வேண்டும். கண்களின் மட்டத்தில் அவற்றை மாட்டி வைத்தால் அது சிறந்த விளைவுகளைத் தரும். இந்தக் கலைப் படைப்புகளின் கீழ்ச் சட்டம் தரையிலிருந்து மூன்றடி மேலாக இருக்க வேண்டும்.
சுவர் ஓவியங்களுக்கு அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஃபோகஸ் விளக்குகளைப் பொருத்தலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 mins ago
சிறப்புப் பக்கம்
22 mins ago
சிறப்புப் பக்கம்
54 mins ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago