வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவிருக்கிறது. அதனால், மழைக்காலம் தீவிரமடைவதற்கு முன்னர், வீட்டை அதற்காகத் தயார்படுத்திக்கொள்வது அவசியம். மழைக் காலத்துக்கு ஏற்ற வகையில் வீட்டைத் தயார்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகள்:
வீட்டின் கூரையில் தண்ணீர் கசிந்தால், அதைச் சீரமைத்துக்கொள்ளலாம் என்று காத்திருக்காமல், ஆண்டுக்கு இரண்டு முறையாவது கூரையின் நிலைமையைச் சரிபார்த்துக்கொள்வது அவசியம். மாடியின் தரைத்தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலோ தண்ணீர்க் கசிவு பிரச்சினைகள் இருந்தாலோ அதைச் சீர்செய்வது அவசியம்.
ஒருவேளை, வீட்டைக் கட்டி இருபது ஆண்டுகளுக்கு மேலாகியிருந்தால், கட்டுமானக் கலைஞர்களை அழைத்து வீட்டின் தரத்தைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. வீட்டின் கூரைகளில் நீர் புகாமல் (water proofing) இருப்பதற்கான தீர்வுகளைப் பல ‘பெயிண்ட்’ நிறுவனங்கள் இப்போது சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கின்றன.
வீட்டின் வடிகால் அமைப்பை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் ஒருமுறை முழுமையாகச் சரிபார்த்துவிடுவது அவசியம். வீட்டின் வடிகால் குழாய்கள் சேதமாகியிருந்தால் அதை உடனடியாக மாற்றிவிடுவதும் மழைக்காலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்க உதவும். அத்துடன், வீட்டைச் சுற்றிப் போடப்படும் குப்பை வடிகால் தொட்டிகளில் சென்று சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டின் வடிகால் அமைப்பைச் சீராக வைத்துக்கொண்டால் மழைக்காலத்தில் தொற்று நோய்களின் கவலையில்லாமல் இருக்கலாம்.
வீட்டின் வெளிப்புற வேலைகளை முடித்த பிறகு, வீட்டின் உட்கூரைப் பகுதிகளிலும், சுவர்களிலும் விரிசல்களோ, நீர்க் கசிவுகளுக்கான வாய்ப்புகளோ இருக்கின்றனவா என்பதைப் பரிசோதித்துப்பாருங்கள். அப்படி விரிசல் ஏதாவது இருந்தால், அவற்றைச் சீர்செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
கதவுகள், ஜன்னல்களைச் சரியாக மூடமுடிகிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, ஜன்னல்கள், கதவுகளின் தாழ்ப்பாள்கள் சரியாக வேலை பார்க்கவில்லையென்றால் அவற்றை மழைக்காலத்துக்கு முன் சரிசெய்துவிடுவது நல்லது. அத்துடன், வெளிப்புறக் கதவுகளில் நீர் விலக்கிகளை (Rain deflectors) பொருத்துவதும் வீட்டுக்குள் மழை நீர் வருவதைத் தடுக்க உதவும்.
உங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் மரங்களில் பட்டுப்போன கிளைகள் இருந்தால், அவற்றை அகற்றிவிடுங்கள். இதனால், மழைக் காற்றின்போது மரக்கிளைகள் வீட்டின் மீது விழுவதைத் தடுக்கலாம்.
உங்கள் வீட்டின் அடித்தளத்தில் ஏதாவது நிலவறைகள் இருந்தால், அவற்றை ஒருமுறை ஆய்வுசெய்வது அவசியம். அத்துடன், மழைக்கு முன்னர் இந்த அறைகளைப் பாதுகாப்பாக நீர்புகாதபடி அடைத்துவைப்பது அவசியம்.
உங்களது வீடு தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் அமைந்திருந்தால், மணல்மூட்டைகளை வாங்கிவைத்துக்கொள்வது சிறந்தது. இந்த மணல் மூட்டைகளை வைத்து ஓரளவுக்குத் தண்ணீர் வீட்டுக்குள் வராமல் தடுக்க முடியும்.
ஒருவேளை, உங்கள் வீடு தாழ்வான பகுதியில் அமைந்திருந்து, வீட்டின் தரைத்தளத்தில் ஓரடி தண்ணீராவது நிச்சயமாகத் தேங்கும் என்றால், முக்கியமான அறைக்கலன்களை மேல்தளத்துக்கு மாற்றிவிடுவது சிறந்தது.
வீட்டைக் காப்பீடு செய்துவைப்பதுதான் எல்லாப் பராமரிப்புகளைவிடவும் முக்கியமானது. இது மழையினால் ஏற்படும் சேதங்களால் பெரிய அளவில் பாதிக்காமல் இருக்க உதவும். ஒருவேளை, வீட்டை ஏற்கெனவே காப்பீடு செய்திருந்தால், அது காலவதியாகாமல் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago