ஆடோமியம்:
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல் ஸில் இந்தக் கட்டடம் அமைந்துள்ளது. இது 1958-ம் ஆண்டு பிரஸ்ஸல்ஸ் உலகக் கண்காட்சியை ஒட்டி அமைக்கப்பட்ட கட்டடமாகும். செல்லின் அமைப்பைப் போல அமைக்கப்பட்டு இந்தக் கட்டடத்தில் உள்ள உருளைகள் 59 அடி விட்டம் கொண்டவை. இந்தக் கட்டடத்தின் மொத்த உயரம் 335 அடியாகும். இதில் எட்டு உருளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்குள் கண்காட்சி அரங்கங்களும் பொதுப் பயன்பாட்டு அறைகளும். உள்ளே செல்வதற்கு லிஃப்டும் எஸ்கலேட்டரும் உள்ளன. இவை முழுக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆனது. ஐரோப்பாவின் மிக விநோதமான கட்டடம் என சிஎன்என் தொலைக்காட்சி இதை வருணித்துள்ளது. ஆண்ட்ரே மற்றும் ஜீன் போலாக் ஆகிய இருவரும் வடிவமைத்த இந்தக் கட்டடத்தை பொறியாளார் ஆண்ட்ரே வாட்டர்கேன் கட்டியுள்ளார்.
பார்கோடு கட்டடம்:
நாம் கடையிலிருந்து வாங்கும் சோப்பு, டூத் பேஸ்ட்டுகளில் கவனித்திருக்கிறீர்களா? பார் கோடு இருக்கும். பெரிய கடைகளில் இதை ஸ்கேன் செய்துதான் பில் போடுவார்கள். ரஷ்யாவில் இந்த பார்கோடை அடிப்படையாக வைத்து அழகான கட்டத்தை வடிவமைத்துள்ளனர். ரஷ்யாவில் உள்ள செயின் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் இந்தக் கட்டம் உள்ளது. இதை ஒலக் கோஸென்கொ மற்றும் ட்மிட்ரி மெலன்யேவ் ஆகிய இரு பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது நான்கு மாடிக் கட்டடமாகும். 1800 மீட்டர் அகலம் உடையது. இது வர்த்தக மையத்திற்காக உருவாக்கப்பட்டது. நெவா ஆற்றங்கரை ஓரத்தில், ரஷ்யப் பனிப் பொழிவுக்கு மத்தியில் செம்மண் நிறத்தில் எழுந்துள்ள இந்தக் கட்டடம் பெரும் வசீகரம் கொண்டு காண்பவரை ஈர்த்து வருகிறது.
கூடைக் கட்டடம்
சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பொருட்களை இடுவதற்காக ஒரு கூடை தருவார்கள். அந்தக் கூடையே ஒரு கட்டடமாக எழுந்து உங்கள் கண்கள் முன்னால் நின்றால் எப்படி இருக்கும்? இந்த அதிசயம் அமெரிக்காவில் நிரந்தர அடையாள மாக ஆகியிருக்கிறது. இந்தக் கட்டடம் அமெரிக்காவில் ஒகியோ மாநிலத்தில் நெவார்க் நகரத்தில் அமைந்துள்ளது. The Longaberger Company என்னும் மரக் கூடை மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமையிடம்தான் இந்த விநோதக் கட்டடம். இது ஏழு அடுக்கு கொண்டதாகும். 192 அடி உயரமும் 142 அடி அகலமும் கொண்ட இந்த பில்டிங் இரவில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. கட்டடக் கலைக்கான பல விருதுகளையும் இந்தக் கட்டடம் வாங்கிக் குவித்துள்ளது.
சைபர்டெக்சர் முட்டை
இந்தியாவின் வர்த்தகத் தலைவர் மும்பையில் இந்தக் கட்டடம் அமைந்துள்ளது. 33,000 மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் கட்டடம் அலுவல வளாகமாகப் பயன்பட்டு வருகிறது. இது 13 அடுக்கு மாடிகளைக் கொண்டது. இது தவிர 3 பேஸ் மண்டுகளைக் கொண்டது. இதில் 400 கார்கள் வரை பார்க் செய்ய முடியும். ஸ்டீல், கான்கிரீட், கண்ணாடிகளைக் கொண்டு கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் லா இதன் வடிவமைப்பாளர். அதி நவீன பில்டிங் மேனஜ்மெண்ட் சிஸ்டம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வசதிகள் இதன் கூடுதல் பலமாகும். மனிதப் பிறப்பை அடிப்படையாக வைத்தே முட்டை அமைப்பில் வடிவமைக்கப் பட்டுள்ளதாக இதன் வடிவமைப்பாளர்கள் சொல்கிறார்கள்.
சுற்றும் கோபுரம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயில் இந்தக் கட்டடம் அமைந்துள்ளது. 1378 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டடம் 80 மாடிகளைக் கொண்டது. ஒவ்வொரு மாடியும் நிமிடத்திற்கு 6 மீட்டர் அளவுக்குச் சுற்றும் இயல்பைக் கொண்டது. முழுக் கட்டடமும் சுற்ற 90 நிமிடங்கள் ஆகும். ஒவ்வொரு மாடியும் தனித் தனி இடங்களில் தயாரிக்கப்பட்டு இங்கு வந்து பொருத்தப்பபட்டன. வெறும் 22 மாதங்களில் இந்தப் பிரம்மாண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டடத்திற்கான மின்சாரத் தேவை, கட்டடத்துடன் பொருத்தப்பட்டுள்ள காற்றாலை மற்றும் சோலார் பேனல்கள் மூலம் தீர்க்கப்படுவது இதன் இன்னொரு சிறப்பு. பிரபல இத்தாலிய வடிவமைப்பாளர் டேவிட் ஃபிஸ்ஸர் இதன் வடிவமைப்பாளர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago