வெறும் சுவர் அல்ல 28: வரவேற்பறை வடிவமைப்பு

By எம்.செந்தில்குமார்

நம் வீட்டின் தோற்றத்தை உடனடியாக உணர்த்தும் இடம் வரவேற்பறைதான். பொதுவாக வீட்டின் கதவைத் திறந்த உடன் இந்த அறை மொத்தமாகப் பார்வைக்குக் கிடைக்கின்றது.

ஒரு வீட்டின் ஒட்டு மொத்தமான குணவார்ப்பை வெளிப்படுத்தும் இடம் இதுதான். உயர்ந்த அலங்காரப் பொருட்கள், விசாலமான ஜன்னல்கள், அதிகமான உயர அமைப்பு, தொங்கும் மின் விளக்குகள் என இந்த இடம் ஜொலிப்பதை நாம் பல வீடுகளில் பார்த்திருக்கலாம்.

உயரமான உத்தரம்

ஒரு வீட்டின் விசாலமான இடமாக அமைவது வரவேற்பறைதான். இரண்டடுக்கு வீடுகளில் (DUPLEX HOUSE) வரவேற்பறை முக்கியக் கவனத்தைப் பெறுகிறது. இரண்டு அடுக்கு வீட்டில் வரவேற்பறையை இரண்டு அடுக்குக்கும் மொத்தமான உயரம் (HIGH CEILING) அமையும் வகையில் அமைப்பது ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தரும்.

வடிவமைப்பில் பிழைகள்

வீட்டில் படுக்கையறைக்கு வெளியே அமைக்கப்படும் குளியலறை/கழிவறை பெரும்பாலும் வரவேற்பறையிலிருந்து பயன்படுத்தப்படுவதாகவே அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைக்கப்படுவதில் தவறில்லை எனினும், அந்த அறைகளின் கதவுகள் நேரடிப் பார்வைக்கு இல்லாத வண்ணம் வடிவமைக்கப்படுவதில் திட்டமிடுதலின் திறன் உள்ளது.

நம் வீட்டு வரைபடம் தயாரிக்கும்போது இந்தத் தகவலை மனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. முதல் தளம், உயர் தளங்களில் அமைக்கப்படும் வரவேற்பறைகளில் அவற்றை ஒட்டி பால்கனி அமைப்பு இருப்பது வெகு சிறப்பு. சலவை இயந்திரம், குளிர்சாதனப்  பெட்டி போன்ற சாதனங்கள் வரவேற்பறையில் வைத்தால் அது இடத்தை அடைக்கும் விதமாக இருக்கும். அதனால் இதைத் தவிர்க்க வேண்டும்.

வரவேற்பறையில் ஒரு முற்பகுதி

பொதுவாக, வீட்டின் முற்பகுதியில் கிரில் கேட் அமைக்கப்பட்டு ஒரு சிறிய இடம் உருவாக்கப்படுவது சிறப்பு. அந்த இடத்தில் காலணிகள் வைப்பதற்கான மேடைகள் அமைக்கலாம். அதன் பிறகு வீட்டின் முக்கியக் கதவு அமைக்கப்படலாம். அப்படி அமைப்பது பல வகைகளில் உபயோகமாக இருக்கும்.

வீட்டுக்கு யாரேனும் வந்து அழைப்பு மணி அழுத்தும்போது நாம் வந்து பார்ப்பதற்கு ஒரு இடைவெளி இருப்பது நல்லது. முக்கிய வாசற்கதவைத் திறந்து நாம் அவர்களை அணுகும்போது, பாதுகாப்புக் காரணங்கள் கருதி சற்று இடைவெளியில் கம்பிக் கதவுகள் அமையப் பெற்றிருப்பது நலம் தரும்.

தொலைக்காட்சி வேண்டுமா?

வீட்டின் வரவேற்பரையில் பொதுவாகத் தொலைக்காட்சி இருப்பது இன்று மிக முக்கியமான சம்பிரதாயமாக மாறி விட்டது என்று சொல்லலாம். மர வேலைப்பாடுகள் கொண்டு மிகப் பிரமாதமாக அமையப் பெறும் SHOWCASE அமைப்பில் மையமாகத் தொலைக்காட்சி இடம் பெற்று, அது போக மீதம் உள்ள இடங்களை மற்ற பொருட்கள் எடுத்துக் கொள்கின்றன.

நாம் நம் தலைமுறை சிறந்து விளங்க அமைக்கும் வீட்டில் எவ்வளவு கவனம் எடுத்துக் கொள்கிறோமோ அதற்கு இணையாக அவர்களின் வாழ்வு சிறக்க நம்மாலான வேறு வாய்ப்புகளையும் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

முற்றம்

பழங்காலத்து வீடுகளில் வரவேற்பறையை ஒட்டிய இடத்தில்தான் முற்றம் அமையப்பெற்றது. இது வீட்டின் அனைத்து இடங்களையும் இணைக்கும் மையப்புள்ளியாக இருந்தது. அதைப் போன்று நம்முடைய வீட்டிலும் இந்தக் காலத்தில் கட்டும் வீடுகளிலும் முற்றம் அமைப்பை ஏற்படுத்த இயலும்.

பெரம்பலூரில் ஒரு நண்பருக்கு நாம் கட்டும் வீட்டில் முற்றம் அமைத்திருக்கிறோம். சிறப்பாக வந்திருக்கிறது என்று சொல்லலாம். நம்முடைய விருப்பத் தேர்வுதான் நம் வீடு. அனைத்தையும் யோசித்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்கலாம்.

வீட்டின் வரவேற்பறை என்பது நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை வரவேற்பது மட்டும் அல்ல. நம்மையும் நம் வீட்டை நோக்கி வரவேற்கும் கூறுகள் அடங்கிய ஓர் இடம் என்பதை நாம் மனத்தில் கொண்டால், அந்த இடத்தை நாம் அலங்கரிக்கும் விதமும் பராமரிக்கும் விதமும் புதிய சிந்தனை வடிவம் பெறும்.

கட்டுரையாளர், கட்டுநர்

தொடர்புக்கு: senthil@honeybuilders.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்