வீட்டின் வடிவமைப்பில் குளியலறை, கழிவறை ஆகிய அறைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. கடந்த தலைமுறையினர் குளியலறையுடன் கழிவறை இணைக்கப்படுவதை விரும்பாமல் இருந்தனர். இடமும் நிறைய இருந்தது. ஆகையால் முன்பெல்லாம் வீட்டின் பின்புறம் கழிவறை அமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது வீட்டை அமைப்பதற்கே இடம் குறைவாக இருக்கிறது. அதுவும் பெருநகரங்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம். அதனால் குளியலறையுடன் சேர்த்தே கழுவறையும் பெரும்பாலும் இன்றும் வடிவமைக்கப்படுகிறது.
எந்தக் கோப்பைகள் அமைக்கலாம்?
ஒரு குளியலறையில், இந்தியக் கழிவறைக் கோப்பை (INDIAN WATER CLOSET) அல்லது யூரோப்பியன் கழிவறைக் கோப்பை (EUROPEAN WATER CLOSET), குளிப்பதற்கான நீருக்கான குழாய் அமைப்புகள், வாஷ் பேசின் போன்றவை அமைவது சிறப்பு. பொதுவாகக் கோப்பைகள் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமைக்கப்படாமல் தெற்கு அல்லது வட திசையில் அமைக்கப்படுகிறது.
எந்தவிதமான கழிவறைக் கோப்பை அமைப்பது என்பதில் தேவையைப் பொறுத்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. பொதுவாக இரண்டு குளியலறைகள் அமைக்கப்படும் வீடுகளில் இரண்டு விதமான கோப்பைகளும் ஒவ்வொன்றில் அமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
படுக்கையறையோடு இணைந்த குளியலறைகள் சிறப்பானது. வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் பயன்படுத்தும் வகையில் தனியாக அமைக்கப்படும் குளியலறையில் பெரும்பாலும் இந்தியக் கழிவறைக் கோப்பைகள் அமைக்கப்படுகின்றன.
அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
விடுதிகளில் நீங்கள் குளியலறைகளைப் பயன்படுத்தி இருந்தால் எவ்வளவு குறைவான இடத்தில் அமைக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சமீபத்தில் சென்னையில் நான் பயன்படுத்திய ஒரு விடுதியில் நான்கு அடிக்கு நான்கு அடி அளவில் ஒரு கழிவறைக் கோப்பை, குளிப்பதற்கான ஷவர் அமைப்பு, வாஷ்பேசின் என அனைத்தும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நிச்சயமாக வசதியானதாக இல்லை.
நாம் நம் வீட்டை வடிவமைக்கும்போது குறைந்தபட்சம் 30 முதல் 50 சதுர அடி அளவிலாவது குளியலறையை அமைப்பது நல்லது. அப்போதுதான் நீங்கள் ஈரமான பகுதி (WET AREA), ஈரமற்ற பகுதி (DRY AREA) என்று எளிதாகப் பிரிக்க இயலும். மேலும் சிலர் குளிக்கும் இடத்தில் பயன்படுத்தும் நீர் செல்லத் தனி வழியும் மீதிப் பாகத்துக்கு நீர் செல்லத் தனி வழியும் அமைக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
வெளிச்சகும் காற்றும்
குளியலறையைப் பொறுத்தவரை காற்று வெளிச்சம் வர ஒரே வழி வெண்டிலேட்டர் (VENTILATOR) அமைப்புகள்தான். எனவே இங்கு கட்டாயமாகக் காற்றை வெளித்தள்ளும் மின்விசிறி (EXHAUST FAN) அமைக்கப்படுவது மிகவும் அவசியமாகிறது.
வெண்டிலேட்டர்கள் இரண்டு அடி உயரத்துக்கு மிகாமல் அமைக்கப்படுவது நல்லது. அகலம் இரண்டு அடி முதல் நான்கு அடிவரை அறையின் அளவைப் பொறுத்து நாம் அமைத்துக் கொள்ளலாம்.
வெண்டிலேட்டரில் பொருத்தப்படும் கண்ணாடிகள் சொரசொரப்பான தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும். மேலும் அவை குளியலறையின் மேற்பகுதியைப் பார்ப்பது போன்று அமைக்கப்பட வேண்டும்.
அவை கீழ்நோக்கி இருப்பதாக அமைக்கப்பட்டால் வெளிப்புறத்திலிருந்து உள்ளே பார்வைக்கு தெரியும்படி அமையக்கூடும். மிகவும் எளிமையான இந்த தகவலை அறியமால் மாற்றி அமைக்கப்படும் இடங்களை நீங்கள் கவனித்திருக்கக் கூடும்.
பரண் வேண்டாமே
வீட்டில் போதிய அளவிற்கு மேல் இருக்கும் பொருட்களை அடைத்து வைப்பதற்கென்றே நாம் பல பரண்களை வீட்டில் அமைக்கிறோம். பரண் அமைக்க நாம் தேர்ந்தெடுக்கும் இடங்களில் குளியலறையின் மேற்பகுதியும் ஒன்றாக உள்ளது. இதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மிகவும் குறைவான சதுர அடி அளவில் வீட்டில் அமைக்கப்படும் இடம் குளியலறைதான். ஆனால் அறையின் அளவை நாம் கன அடியாக பார்க்க வேண்டும்.
அதாவது உயரத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். பொதுவாக 10 அடி உயரத்தில் நாம் வீடு அமைக்கிறோம். ஆனால் குளியலறையில் பரண் அமைக்கும்போது அவ்விடங்களில் உயரம் 7 அடியாகக் குறைந்துவிடுகிறது.
குறைந்தது 15 அல்லது 20 நிமிடங்கள் நாம் பயன்படுத்தும் இந்தக் குளியலறையானது மிகவும் குறைந்த உயரத்தில் அமைந்தால் அது மிகுந்த அயற்சியை ஏற்படுத்தும். குளித்து முடித்து வெளியே வரும் ஒருவர் வியர்வை சொட்டச் சொட்ட வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதற்குக் காரணம் இந்தக் குறைந்த அளவுதான்.
சுடுநீர்க்கலன்கள் போன்றவை அமைப்பது பரண் இருக்கும் இடங்களில் மிகவும் கடினமானது. மேலும் பராமரிப்பு வேலைகளும் தொடர்ந்து தொல்லை தரும் விஷயமாக இருக்கக்கூடும். இரண்டு அல்லது மூன்று தளங்கள் கொண்ட வீடாக இருந்தால், பொதுவாகக் குளியலறைக்கு மேல் குளியலறை அமைக்கப்படும்.
அந்தச் சூழலிலும் பராமரிப்புப் பிரச்சினைகளின்போதும் பரண் அமைந்திருப்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, தேவையான நீள அகலம், உயரத்துடன் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும்போது சரியான வெளிச்சமும் காற்றோட்டமும் அந்த இடத்தை உயிர்ப்புடன் வைக்கும்.
கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthil@honeybuilders.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago