அவசியமா மின் தூக்கி?

By ஜி.எஸ்.எஸ்

மின்தூக்கி (Lift) படிகளின் உதவியின்றி மாடித் தளத்தை அடைய உதவுகிறது. முக்கியமாக முதியவர்களோ, குழந்தைகளோ, உடல் ஊனமுற்றவர்களோ மாடித் தளத்தை அடைய இதன் சேவை அவசியமாகிறது.

வேறொரு கோணத்தில்கூட மின்தூக்கி அவசியம்தான். அது இருந்தால் உங்கள் வீட்டை அதிக விலைக்கு விற்க முடியும். நான்காம் மாடியில் அந்தக் காலத்தில் ஒரு ஃப்ளாட்டை வாங்கிவிட்டு அதற்கு மின்தூக்கி இல்லாத ஒரே காரணத்தினால் மிகக் குறைந்த விலைக்கு அதை விற்க நேர்ந்த ஒரு நபரை எனக்குத் தெரியும்.

உயரமான அடுக்ககங்கள் இருக்கும்போது சிலர் இரண்டு மின்தூக்கிகளைக்கூட வைப்பார்கள். சிலர் மேலும் அதிகப்படியான மின்தூக்கிகளையும் பொருத்துவதுண்டு. “ஆஹா எங்கள் பில்டருக்கு என்ன ஒரு பரந்த மனம்!” என்று நினைத்துவிடக் கூடாது. சட்டத்தின் கட்டாயம் காரணமாகவும் இது சாத்தியமாகிறது.

எவ்வளவு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் அந்த வளாகத்தில் உள்ளன என்பதைப் பொருத்தோ அங்கு எவ்வளவுபேர் வசிக்கிறார்கள் என்பதைப் பொருத்தோ மின்தூக்கியின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்று நீங்கள் நினைத்தால் அது முழுவதும் உண்மை கிடையாது.

பொதுமக்களின் உடல்நலம், நல்வாழ்வு, பாதுகாப்பு ஆகிய கோணங்களில் தேசிய அளவில் கட்டிடங்கள் எழுப்புவதற்குச் சில விதிகள் உள்ளன. தேசியக் கட்டிடக் குறியீடு (National Building Code) என்ற ஆவணம் இதை வரையறுக்கிறது. இதை மீறிச் செயல்பட்டால் அபராதத்திலிருந்து கட்டிட இடிப்பு வரை தண்டனை உண்டு.

பதிமூன்று மீட்டருக்கு மேல் உயரமான கட்டிடம் என்றால் அதில் மின்தூக்கி  நிச்சயம் இருக்க வேண்டும். அது தரைத் தளத்திலிருந்தே இயங்குவதாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஆறு பேராவது அதில் செல்லும்படி கொள்ளவு இருக்க வேண்டும்.

பொதுவாக மூன்று மாடிகளைவிட அதிகம் கொண்ட கட்டிடம் என்றால் தீயணைப்புத் இயக்குநரிடமிருந்து அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். அதிலும் இந்த மின்தூக்கி  குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.

குடியிருப்புப் பகுதிகள் அமைந்த ஃப்ளாட்களைவிட அலுவலகங்கள் அமைந்த ஃப்ளாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் மின்தூக்கிகள் அமைக்கவேண்டும். ஏனென்றால் அவற்றை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை (அலுவலகங்களில் பணிபுரிபவர்களில் எண்ணிக்கை காரணமாக) அதிகமாக இருக்கும்.

எப்போதுமே இரண்டு மின்தூக் கிகளாவது அமைக்குப்படி பொருத்திக் கொள்வது நல்லது. ஒன்றில் ஏதாவது சிக்கல் உண்டானால் மற்றொன்றைப் பயன்படுத்த முடியும். ‘படிகளில் ஏறி, இறங்குவதுதான் உடலுக்கு நல்லது’ என்று கூறுபவர்கள்கூட மின்தூக்கி  விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். குடும்பத்தில் யாருக்காவது உடல் நலமில்லாமல் போனாலும் மின்தூக்கி தேவைப்படும். சொல்லப்போனால் ஒரு ஸ்ட்ரெச்சர் உள்செல்லும் அளவு கொள்ளளவு கொண்டதாக ஒரு மின்தூக்கி இருப்பது நல்லது.

மின்தூக்கியின் எண்ணிக்கை அதிகமாக ஆக பராமரிப்புச் செலவும் அதிகமாகும் என்பது உண்மைதான். எனவே இருதரப்பையும் யோசித்து, சட்டத்தையும் மனதில் கொண்டு மின்தூக்கிகளின் எண்ணிக்கையை அமைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்