இந்த ஆண்டின் அறைக்கலன்கள்

By கனி

வண்ணங்களைப் போலவே அறைக்கலன்களிலும் இந்த ஆண்டில் பிரபலமாக இருக்கும் போக்குகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. வீட்டுக்குப் புதிதாக அறைக்கலன்கள் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் தற்போது உருவாகியிருக்கும் புதிய போக்குகளைப் பரிசீலிக்கலாம். 2019-ம் ஆண்டில் தாக்கம் செலுத்தவிருக்கும் அறைக்கலன் போக்குகள் இவை:

பலவிதப் பயன்பாடுகளைக் கொண்ட அறைக்கலன்கள் இந்த ஆண்டில் அதிகமாக விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால், சிறிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. அவர்கள் வளைப்பது, மடக்குவது மட்டுமல்லாமல் பலவிதப் பயன்பாடுகளைக் கொண்ட அறைக்கலன்களை வாங்கவே விரும்புகின்றனர். அதனால், இந்த ஆண்டின் முக்கியமான போக்காகப் பலவிதப் பயன்பாடு கொண்ட அறைக்கலன்கள் இருக்கின்றன. சோஃபா, கட்டில்கள் மட்டுமல்லாமல் இப்போது பலவகையான அறைக்கலன்கள் பலவகைப் பயன்பாடுகளுடன் தயாரிக்கப்படுகின்றன. அவை பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் வடிவமைப்பிலும் புதுமையுடன் விளங்குகின்றன.

தனித்துவமான அறைக்கலன்கள்

அறைக்கலன்களை நமக்கேற்ற வகையில் பிரத்யேகமாகத் தயாரிப்பதை நேரம், விலை காரணமாகப் பலரும் கடினமான விஷயமாக நினைப்பார்கள். ஆனால், இப்போது பல அறைக்கலன் நிறுவனங்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வாடிக்கையாளர்களின் பிரத்யேக அறைக்கலன் தேர்வுகளை ஊக்குவிக்குகின்றன. வண்ணங்கள், அமைப்புகள் என உங்கள் ரசனைக்கேற்றபடி அறைக்கலன்களைத் தேர்வுசெய்யலாம். நீங்களே பிரத்யேகமாகத் தேர்வுசெய்யும் அறைக்கலன்களும் இந்த ஆண்டில் பிரபலமாகவிருக்கிறது.

வெல்வெட்டின் ஆதிக்கம்

எண்பதுகளில் பிரபலமாக இருந்த வெல்வெட் சோஃபாக்கள் தற்போது மீண்டும் பிரபலமாகவிருக்கின்றன. சோஃபாக்கள், நாற்காலிகள் மட்டுமல்லாமல் பெரும்பான்மையான அறைக்கலன்களில் இந்த ஆண்டு வெல்வெட்டின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் நீலம், கறுப்பு வண்ண வெல்வெட் கை நாற்காலிகள், சோஃபாக்கள் வரவேற்பறைக்கு ஏற்றவையாக இருக்கும். குஷன்கள், தலையணை உறை போன்றவற்றிலும் வெல்வெட்டைப் பயன்படுத்தலாம்.

வாபி சாபி கலை

உங்கள் வீட்டிலிருக்கும் அறைக்கலன்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த அமைப்புடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜப்பானிய தத்துவமான வாபி சாபி கலை, குறைகளும் வாழ்க்கைக்கு அவசியம் என்று உணர்த்துகிறது. உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை அவை எப்படி இருக்கின்றனவோ அப்படியே ஏற்றுக்கொண்டு அவற்றுடன் ஆழமான இணைப்பை உருவாக்கிக்கொள்வதுதான் இந்தக் கலை. இந்தக் கலையை வீட்டின் அறைக்கலன்களைத் தேர்ந்தெடுப்பதிலும் பயன்படுத்தலாம்.

உங்கள் வரவேற்பறைச் சுவரின் வண்ணத்துக்குப் பொருந்தும் வண்ணத்தில்தான் உங்கள் அறைக்கலன்களை வாங்கவேண்டுமென்ற பொதுவான வடிவமைப்பு விதியைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. வாபி சாபி கலை வலியுறுத்தும்படி அறைக்கலன்களை இயற்கையான அம்சங்களுடனும் வண்ணங்களுடனும் பயன்படுத்தலாம். வெவ்வேறு அளவுகள், வண்ணங்கள், அமைப்புகளில் இருக்கும் நாற்காலிகளையும் வீட்டின் வரவேற்பறையில் பயன்படுத்தலாம்.

சூழலுக்கு முக்கியத்துவம்

சுற்றுச்சூழலைப் பாதிக்காத நிலைத்தன்மை கொண்ட இயற்கைப் பொருட்களில் தயாரிக்கப்படும் அறைக்கலன்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில், கைவினையால் தயாரிக்கப்படும் அறைக்கலன்களும் அலங்காரப் பொருட்களும் இந்த ஆண்டு பிரபலமாக இருக்கப்போகின்றன என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்