குழந்தைகளுக்குப் பாதுகாப்பான வீடுகள்

உங்கள் வீட்டில் குழந்தைகள் உண்டா? அப்படியானால் உங்கள் வீட்டை உருவாக்கும்போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு (தவழும் குழந்தையிலிருந்து பத்து வயது ஆகும்வரைகூட குழந்தை குழந்தைதான். அந்தப் பருவத்தினருக்குப் பொருந்தும்படியான குறிப்புகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்).

படிகளின் தொடக்கத்தில்

மாடிப்படிகளில் ஏறும் பகுதியில் ஒரு மிகச் சிறிய கதவைப் பொருத்தி விடுங்கள். அதைத் தாழிட்டு விட்டால் குழந்தையால் தானாக படியேற முடியாது. படியிலிருந்து விழும் விபத்துகள் தவிர்க்கப்படும்.

சோபாவில் குஷன்

குழந்தைகளுக்கு குஷன்களை எடுத்து விளையாடப் பிடிக்கும். எனவே குஷன்கள் பொருத்தப்பட்ட சோபாக்களையே வாங்குங்கள் - அதாவது தனியாக நீக்க முடியாத குஷன்கள்.

தரைப்பகுதி

குழந்தைகள் அங்குமிங்கும் நாற்காலிகளையும், மேஜைகளையும் இழுக்கும் குணம் கொண்டவர்கள். எனவே எந்தவித தரைப்பரப்பு என்பதும் முக்கியம். வினைல் தரைப்பரப்புகள் ஏற்றவை.

தரை விரிப்பில் கவனம்

தரையில் கம்பளம் விரிக்கிறீர்கள் என்றால் ஒரு விஷயத்தில் முன்னெச்சரிக்கை தேவை. அந்தக் கம்பளம் எங்கேயோ பிய்ந்தோ, நீட்டிக் கொண்டோ இருக்கக் கூடாது. கால் தடுக்கி விழுந்துவிட வாய்ப்பு உண்டு. முக்கியமாகப் படிகளில் கம்பளம் பொருத்தி இருந்தால் அதிகக் கவனம் தேவை.

சுலபத்தில் சுத்தம் செய்யக் கூடிய விரிப்புகள்

குழந்தைகள் இருந்தாலே எதையாவது சிந்திக் கொள்வதும், கொட்டி விடுவதும் சகஜம்தான். எளிதில் கறைகள் நீங்கும்படியான விரிப்புகளையே வாங்கிப் பயன்படுத்துங்கள்.

பெயிண்டிங்

வீட்டின் சுவர்களுக்கு பெயிண்ட் செய்யும்போது அவற்றின்மீது குழந்தைகள் கிறுக்கினால்கூட அதைத் துடைப்பதன் மூலம் அழித்துவிட முடியும் எனும்படியான பெயிண்டை அடிப்பது நல்லது. குழந்தைகளுக்கென்று தனி அறை என்றால் அங்கு இது அதிகமாகவே பொருந்தும்.

அறைக்கலன்கள் கவனம்

பர்னிச்சர் எனப்படும் அறைக்கலன்களை வாங்கும்போது அவற்றின் முனைகள் கூர்மையாக இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வீட்டுக்குள் ஓடும்போது குழந்தைகள் அறைக்கலன்களின் கூர்மையான முனைகளில் இடித்துக் கொண்டு காயம்பட்டுக் கொள்ளக் கூடாது.

தாழ்ப்பாள்கள்

கதவுகளுக்கான தாழ்ப்பாள்களை மிகவும் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட வேண்டாம். அறைக்குள் குழந்தை நுழைந்து உட்புறம் தாழிட்டுக் கொண்டு விட்டால் பிரச்சினை. கதவின் இருபுறத்திலிருந்தும் திறக்கும்படியான வசதி இருக்க வேண்டும். அல்லது மேற்புறம் மட்டுமே தாழ்ப்பாள் இருக்க வேண்டும்.

அவ்வப்போது நீக்கிவிடுங்கள்

குழந்தைகள் என்றாலே குப்பைகள் அதிகம் சேரும்தான். எனவே வேண்டாதவற்றை அவ்வப்போது நீக்கிவிடுங்கள். அவை உடைந்த பொம்மை களாகவும், கிழிக்கப்பட்ட தாள் களாகவும் இருக்கலாம். குழந்தை வரைந்தது என்று பல ‘கலைப் பொக்கிஷங்களை’ பெற்றோர்கள் சேர்த்து வைப்பதுண்டு. இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் வீட்டில் அடைந்து கிடக்கும். சாம்பிளுக்கு ஒன்றை வைத்துக் கொண்டு மீதியைத் தயங்காமல் வெளியேற்றி விடுங்கள். அல்லது அவற்றை யெல்லாம் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டால் போதுமே. உங்கள் குழந்தைக்கு வேண்டாத புத்தகங்களையும், பொம்மைகளையும் யாருக்காவது கொடுத்து விடுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

14 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்