2019-ம் ஆண்டின் வண்ணம்: பவளம்

By கனி

ஒவ்வோர் ஆண்டும் எப்படி இருக்கும் என நாம் எதிர்பார்ப்பதுபோல, வரப்போகும் ஆண்டில் எந்த வண்ணத்துக்கு எதிர்காலம் இருக்கும் எனக் கணிக்கிறார்கள் அத்துறைசார் நிபுணர்கள். அதன்படி 2019-ம் ஆண்டில், அசத்தவிருக்கும் வண்ணமாக ‘பவள’த்தை (Living Coral) தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். வீட்டின் வண்ணத்தைப் புதிதாக மாற்ற நினைப்பவர்கள், புதிய வீட்டுக்குக் குடிபெயர விரும்புபவர்கள் இந்த வண்ணத்தைப் பரிசீலிக்கலாம். இந்தப் பவள வண்ணத்தின் சிறப்புகள்...

வண்ணங்களை நிர்வகிக்கும் பிரபல நிறுவனமான ‘பேன்டோன்’ இந்த ஆண்டின் வண்ணமாகப் ‘பவள’த்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இயற்கைக்கும் தற்போதைய டிஜிட்டல் உலகத்துக்குமான பாலமாக இருப்பதால் பவள வண்ணத்தைத் தேர்ந்தெடுத்ததாக இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நன்னம்பிக்கை, மகிழ்ச்சியைப் பின்தொடர்தல் ஆகியவற்றின் தேவையை உணர்த்தும் வண்ணமாகப் பவளம் இருப்பதால் வரும் புத்தாண்டின் வண்ணமாக இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. “துடிப்பும் கனிவும்” இணைந்த வண்ணம் என்று பவளத்தின் சிறப்பை விளக்கியிருக்கிறது பேன்டோன் நிறுவனம்.

நுட்பத்தை விரும்புபவர்களுக்கான வண்ணம்

2019-ம் ஆண்டின் வண்ணமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பவளம் உலகம் முழுவதும் பிரபலமடையும் என்று தெரிவித்திருக்கிறார்கள் சர்வதேச உள் அலங்கார வடிவமைப்பாளர்கள். சமீப ஆண்டுகளில் இளஞ்சிவப்பு (Pink) வண்ணத்தின் பிரதிபலிப்புகளான ‘பேஸ்டல் பிங்க்’, ‘கலமைன் பிங்க்’, ‘டர்ட்டி பிங்க்’ போன்றவை பிரபலமாக இருந்தன. இந்த வண்ணங்கள் உள்அலங்காரத்தில் சௌந்தர்யத்தையும் அமைதியையும் கொண்டுவந்தன. இந்த வண்ணங்களில் இருந்து பவளம் வித்தியாசமானதாக இருக்கும்.

வலிமையானதாகவும், வரவேற்பு நிறைந்த வண்ணமாகவும் பவளம் தன்னை வெளிப்படுத்திகொள்ளும். பவள வண்ணத்தின் ஆற்றல், இதமானதாகவும் உற்சாகமானதாகவும் இருக்கும். செங்கல் நிறத்தின் மென்மையான தோற்றத்துடன் இந்த வண்ணம் இருக்கும். இந்தப் பவள வண்ணம் ஒரு வாழும் வண்ணமாகவும் மிகவும் பழக்கப்பட்ட வண்ணமாகவும் விளங்கும் என்று தெரிவிக்கிறார்கள் வடிவமைப்பாளர்கள். நுட்பத்தை விரும்புபவர்களுக்கு இந்தப் பவள வண்ணம் ஏற்றதாக இருக்கும்.

அமைதியின் வண்ணம்

வீட்டில் அமைதியான சூழலை நிலைபெறச் செய்வதற்கு இந்தப் பவள வண்ணம் உதவும். இந்த வண்ணத்தை இயற்கையின் பிரதிநிதி வண்ணங்களான பச்சை, மரம் போன்ற வண்ணங்களுடன் இணைக்கும்போது அது கூடுதல் அமைதியை வீட்டுக்குள் கொண்டுவரும். அத்துடன், பவள நிறத்தை நீல நிறத்துடனும் இணைக்கலாம். நீலமும் பவளமும் இயல்பான இணைப்புத் தன்மை இருக்கக்கூடிய வண்ணங்கள். அதேமாதிரி, பவள நிறத்தை நீலப்பச்சை (aquamarine) நிறத்துடனும் இணைக்கலாம். இது இன்னும் கூடுதலான அழகை வீட்டுக்குக் கொடுக்கும்.

எங்கும் பயன்படுத்தலாம்

இந்தப் பவள நிறத்தை வீட்டில் எல்லா இடங்களிலும் பொருட்களிலும் எந்தத் தயக்கமு மின்றிப் பயன்படுத்தலாம் என்று சொல்கின்றனர் வடிவமைப்பாளர்கள். தலையணை, போர்வை, தரைவிரிப்புகள், கைநாற்காலிகள் போன்றவற்றில் இந்த வண்ணத்தைப் பயன்படுத்தலாம். ஓர் அறையின் சுவரில் பயன்படுத்தும்போது, இந்த வண்ணம் அறையின் தன்மையை முழுமையாக மாற்றிவிடும் வலிமைவாய்ந்ததாக இருக்கும்.

இந்த வண்ணம் அறைக்குள் மகிழ்ச்சியை எளிமையாகக் கொண்டுவரும். அறை முழுவதையும் பவள வண்ணத்தால் நிறைக்காமல் அதனுடன் பச்சை வண்ணத்தையும் இணைத்து பயன்படுத்தலாம்.

படுக்கையறை, சமையலறை, குளியலறை, வரவேற்பறை, பால்கனி போன்ற சுவர்களில் பவள வண்ணத்தைப் பயன்படுத்தலாம். இந்தப் பவள நிறத்தை அப்படியே பயன்படுத்தாமல், மங்கல்தன்மையுடன் (matt finish/low gloss finish) பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்