கைக்கு அடக்கமான விலையில் புளு-ரே பிளேயரும் ஸ்பீக்கர்களும் கிடைப்பதால், பெரும்பாலான வீடுகளில் இன்று ஹோம் தியேட்டர் உள்ளது. இன்றைய LED-டிவிகளும் எல்.சி,டி. டிவிகளும் ப்ளாஸ்மா டிவிகளும் திரையரங்கைவிட மேலான தரத்தில் வீடியோவை நமக்கு எளிதில் அளித்துவிடுகின்றன. ஆனால், ஒலியைப் பொறுத்தவரை திரையங்குகளே இன்றும் உயர்ந்த தரத்திலான ஒலியை அளிக்கின்றன.
விலைமதிப்புமிக்க ஸ்பீக்கர்களை வீட்டினுள் நிறுவினாலும், திரையரங்குகளின் ஒலித் தரம் எட்ட முடியாத ஒன்றாகவே உள்ளது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியக் காரணங்கள் என வீட்டின் அமைப்பையும் எதிரொலியையும் எதிர்முழக்கத்தையும் சொல்லலாம். ஒலியின் வகைகளும் அவை பரவும் தன்மைக்குறித்தும் அடிப்படைப் புரிதல் இருந்தால், இந்த மூன்றையும் எளிதில் சரிசெய்து, ஹோம் தியேட்டரின் ஒலியின் தரத்தை வெகுவாக உயர்த்தலாம்.
ஹோம் தியேட்டரைப் பொறுத்தவரை ஒலியானது, ஸ்பீக்கரிலிருக்கு வெளிவந்து அறை முழுவதும் பரவுகிறது. அறையில் பரவும் ஒலியில் சிறு பகுதி நேரடியாக நமது செவியை அடைகிறது. மற்றவை அறையின் சுவர்களுக்கும் தளங்களுக்கும் இடையே முட்டி மோதி எதிரொலிக்கிறது. சில நொடிகளில் அந்த எதிரொலி நம் செவியை அடைகிறது.
நம் செவியை நேரடியாக அடையும் ஒலியே தூய ஒலி. அறையின் சுவரிலும் தளங்களிலும் முட்டி எதிரொலிக்கும் ஒலியானது, சில நொடிகளில் தூய ஒலியில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கும். இந்த எதிரொலியின் அளவே ஒலியின் தரத்தைத் தீர்மானிக்கிறது. இந்த எதிரொலியும் எதிர்முழக்கமும்தாம் திரையரங்குகளுக்கும் வீடுகளுக்கும் இடையேயிலான முக்கிய வித்தியாசங்கள்.
வீட்டின் எதிரொலி
திரையரங்குகளின் வடிவும் அமைப்பும் ஒலி பரவும் தன்மைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். அதன் கட்டுமானப் பொருட்கள் ஒலியின் எதிரொலியைக் கருத்தில் கொண்டு தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக அங்கே தூய ஒலியின் அளவு அதிகமாகவும் எதிரொலியின் அளவு குறைவாகவும் இருக்கும்.
வீட்டைப் பொறுத்தவரை பெரும்பாலும் அதன் வடிவம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்கும். வீட்டின் சுவர்கள் எந்த வளைவுமற்று நேர்கோட்டில் இருக்கும். மேற்கூரையின் உயரம் பத்து அடிக்கு உட்பட்டதாக இருக்கும். கட்டுமானத்துக்கு சிமெண்ட் கற்கள்தாம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
சிமெண்ட் கற்கள், ஒலியை அதிக அளவு எதிரொலிக்கும் தன்மைகொண்டது. இதனுடன் நேர் கோட்டில் அமைந்த சுவர்கள், சதுர வடிவ அறை அமைப்பு குறைந்த உயரம் கொண்ட மேற்கூரை போன்றவை இணையும்போது தூய ஒலி என்ற ஒன்று முற்றிலும் இல்லாமல் போய்விடும். இத்தகைய அறையில் ஒலிக்கும் எந்த ஒலியும் நமது செவியை அடையும்போது மோசமான எதிரொலியாக மாறியிருக்கும். எவ்வளவு விலை உயர்ந்த ஸ்பீக்கராக இருந்தாலும், அதிலிருந்து வெளிப்படும் ‘ஒலி’க்கும் இந்த நிலைதான்.
அக்கோஸ்டிக் (Acoustic) ட்ரீட்மெண்ட்?
வீட்டில் உள்ள அறையின் வடிவை மாற்றவோ மேற்தளத்தின் உயரத்தை அதிகரிக்க முடியாது என்றாலும், அக்கோஸ்டிக் ட்ரீட்மெண்ட் மூலம் ஒலியின் எதிரொலியை நீக்கி, தூய ஒலியின் அளவை வெகுவாக அதிகரிக்கலாம். திரையரங்குகள், ஒலிப்பதிவு ஸ்டுடியோ, ஆடியோ உபகரணங்கள் விற்பனை நிலையம் போன்றவற்றில் வெளிப்படும் உன்னதமான ஒலியின் தரத்துக்கு இதுவே காரணம்.
‘அக்கோஸ்டிக் ட்ரீட்மெண்ட் எல்லாம் செலவு அதிகம் ஆகும் விஷயம்’ என்று நீங்கள் நினைக்கலாம். ஒருவகையில் அது உண்மைதான். உயர்தரமான அக்கோஸ்டிக் ட்ரீட்மெண்ட் செய்யச் சதுர அடிக்கு 500 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை ஆகும். பத்துக்கு பத்து அடி அறை என்றால் கூட, குறைந்தது 2,50,000 ரூபாய் ஆகும். குறைந்த செலவில் ஒலியின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.
செலவை எப்படிக் குறைப்பது?
பொதுவாக, அக்கோஸ்டிக் ட்ரீட்மெண்ட் ‘டிவி’க்குப் பின் இருக்கும் சுவருக்குத் தேவையில்லை. அறையின் மூன்று பக்கச் சுவர்களுக்கும் மேற்கூரைக்கும் மட்டும் செய்தால் போதும். ‘அக்கோஸ்டிக் ட்ரீட்மெண்ட்’ செய்யப் பயன்படுத்தும் பொருட்கள் விலை அதிகம் என்பதால், செயற்கைக் கூரைக்குப் பயன்படுத்தும் ஜிப்ஸம் டைல்ஸையும் ராக் வுல்லையும் கொண்டு ‘அக்கோஸ்டிக் ட்ரீட்மெண்ட்’ செய்து செலவைக் குறைக்கலாம்.
இந்த ஜிப்சம் டைல்ஸின் என்.ஆர்.சி அளவு 0.7-க்கு மேல் கண்டிப்பாக இருக்க வேண்டும். சுவரின் மீது ஒரு அங்குல அளவுக்கு ‘ராக் வுல்’ பஞ்சை வைத்து, அதன் மேல் இந்த ஜிப்ஸம் டைல்ஸ் கொண்டு மூடுவதன் மூலம் ஒலியின் தரத்தை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்த்தலாம்.
மேற்கூரைக்கும் டிவிக்கு எதிர்புறமும் உள்ள சுவருக்கும் முழுமையாக அக்கோஸ்டி ட்ரீட்மெண்ட் செய்ய வேண்டும். பக்கவாட்டுச் சுவர் ஒவ்வொன்றுக்கும் 2 x (6 அடி x 4 அடி) ‘அக்கோஸ்டி ட்ரீட்மெண்ட்’ செய்தால் போதும். இந்த முறையில் மேற்தளத்துக்குச் சதுர அடிக்கு 120 ரூபாயும், பக்கவாட்டு சுவருக்குச் சதுர அடிக்கு 180 ரூபாயும் செலவு ஆகும். அதாவது 10 x 10 அடி அறைக்கு மொத்தம் 48,000 ரூபாய் செலவு ஆகும். இதனுடன் அந்த அறையில் சோபாவையும் தடிமனான தரை விரிப்பையும் பயன்படுத்தினால், ஒலியின் தரம் மேலும் அதிகரிக்கும்.
உன்னத அனுபவம்
இசையும் திரைப்படங்களும் மனிதனோடு தோழமை கொண்டு இரு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஒரு நல்ல திரைப்படம் மனதை நெகிழவைக்கும், உருகவைக்கும், மகிழவைக்கும். அக்கோஸ்டிக் ட்ரீட்மெண்ட் செய்யப்பட்ட ஹோம் தியேட்டரில் பார்க்கும் அனுபவமோ கூடுதல் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளிக்கும். ஏனென்றால், அந்த அறையில் ஒலியின் தரம் திரையரங்கை ஒத்த ஒன்று என்பதைவிட மிஞ்சிய ஒன்றே என்றே சொல்லலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago