கட்டிடங்களின் கதை 07: சர்ச்சைக் கட்டிடம்

By ரேணுகா

சீனாவைச் சேர்ந்த பெய் என்ற சிறுவன் கோடைக்கால விடுமுறையில் சுஹோ தோட்டங்களுக்குச் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தான். 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்தத் தோட்டத்தில் முழுமை பெறாமல் இருந்த பாறைகளாலான குடில்கள், கல் பாலம், செயற்கை நீர் வீழ்ச்சி ஆகியவை பெய்யின் நினைவில் அழமாகப் பதிந்துவிட்டன.

அந்த முழுமை பெறாத பாறைகளின் நேர்த்தியான வடிவமைப்பு பெய்க்குக் கட்டிடக்கலை மீதான ஆர்வத்தை அந்தச் சிறுவனுக்கு உண்டாக்கியது.

இந்த உந்துதல்தான் அவரைத் தற்போது உலகின் முக்கியமான வடிவமைப்பாளராக மாற்றியுள்ளது. பாரம்பரிய, நவீனக் கட்டிடக்கலைக்கு வித்திட்ட சீன வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான எம்.ஐ.பெய்க்குத் தற்போது நூறு வயது.

சீனாவில் உள்ள பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பெய். தாய்க்குச் செல்லபிள்ளை. அவருக்கு உடன் பிறந்தவர்கள் மட்டும் ஐந்து பேர். சிறுவயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் கொண்ட பெய் சுயமாகவே புல்லாங்குழலை வாசிக்கக் கற்றுக்கொண்டார். பெய்க்குப் பதிமூன்று வயதிருக்கும்போது அவருடைய அம்மா புற்றுநோயால் இறந்துவிட்டார்.

பின்னர் உறவினர்களின் அரவணைப்பில் பெய் உட்பட அனைத்துக் குழந்தைகளும் வளர்ந்தனர். பெய்யுடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவுக்குக் குடிபெயர முடிவுசெய்தார். அப்போது வளரிளம் பருவத்தில் இருந்த பெய்க்குக் கட்டிடக்கலை படிக்க விருப்பம் அதைவிட முக்கியமாக ஹாலிவுட் சினிமா ஆர்வம் இருந்தது. இதன் காரணமாகவே தன் அப்பாவுடன் அமெரிக்காவுக்குக் குடியேறினார் பெய்.

முடிவை மாற்றிய புத்தகம்

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்றார் பெய். தன்னுடைய கல்லூரிக் காலத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் கழித்தார். அதேநேரம் நவீனக் கட்டிட வடிவமைப்பிலும், கட்டிடங்களை ஓவியங்களாக வரைவதிலும் தன்னுடைய திறனை வளர்த்துக்கொண்டார். ஒருகட்டத்தில் கட்டிட வடிவமைப்பியலை விட்டு பொறியியல் துறையைத் தேர்ந்தெடுக்க விருப்பினார் பெய்.

இதற்காக மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்ணப்பித்தார். ஆனால், அங்கிருந்த பேராசிரியர்கள் அவரைக் கட்டிடக்கலையைத் தொடரும்படி அறிவுறுத்தினார்கள். இதையெடுத்து அங்கிருந்த நூலகத்துக்குச் சென்ற பெய்

சுவிஸ், பிரெஞ்சுக் கட்டிட கலைஞரான லே காபுசியா எழுதிய மூன்று புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினார். அதில் அவர் சாதாரணப் பொருட்ககளைப் பயன்படுத்திக் கட்டிடங்களை வடிவமைத்த விதம் பெய்க்கு ஆச்சரியமாக இருந்தது. அதேபோல் அமெரிக்காவின் நவீனக் கட்டிடக் கலைஞரான பிராங்க் லாய்டு கட்டிட வடிவமைப்பியல் முறையாலும் அவர் ஈர்க்கப்பட்டார்.

தன்னுடைய இளங்கலைக் கட்டிட வடிவமைப்பியல் படிப்பை 1940-ம் ஆண்டு முடித்தார் பெய். அதன் பிறகு மீண்டும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் தன்னுடைய பொறியியல் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். சிறிதுகாலம் ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்த பெய் 1942-ம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்பு படை ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார்.

அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. ஆயுதங்களை வடிவமைக்கு பணி அவருக்குக் கொடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டு பாதுகாப்புப் படையில் பணியாற்றி பெய் பின்னர் அதிலிருந்து விலகி முழுநேரக் கட்டிட வடிவமைப்பாளராக மாறினார். அவரின் முதல் கட்டுமானம் அமெரிக்காவில் உள்ள நேஷ்னல் சென்டர் பார் ஆட்மாஸ்பியர் ஆராய்ச்சி மையம்தான்.

Pei Cobb Freed & Partners என்னும் நிறுவனத்தை 1955-ம் ஆண்டு நிறுவினார் பெய். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் 1975-ம் ஆண்டு ஹாங்காங்கில் உள்ள சீன வங்கியின் தலைமையகத்தை வடிவமைத்தார். ஜப்பான், கத்தார், பிரேசில், டென்மார்க், இஸ்தான்புல், பாஸ்டன், இந்தியாவில் உள்ள மும்பை எனப் பல்வேறு நாடுகளில் பெய் நிறுவனத்தின் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புகழும் சர்ச்சையும்

1989-ம் ஆண்டு பாரிஸ் நகரில் இவர் வடிவமைத்த லு கிராந்த் லூவ்ர் (Le Grand Louvre) அருங்காட்சியகத்தின் கண்ணாடிகளால் ஆன நுழைவாயில் பெய்க்கு மிகப் பெரிய புகழைச் சேர்த்தது. கூடவே, சர்ச்சைகளையும் கொண்டுவந்தது.

பிரமிட் வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த லூவ்ர் நுழைவாயில் பாரிஸ் அருங்காட்சியகத்துக்குச் செல்லும் சுரங்கப் பாதையின் மேற்பரப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதையை பாரிஸ் நகரின் அடையளங்களில் ஒன்றாக லு கிராந்த் லூவ்ர் உள்ளது.

11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 71 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் முழுவதுமாகக் கண்ணாடிகளாலானது. இந்த முக்கோணக் கண்ணாடிக் கூரையில் மொத்தம் 673 கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் 603 கண்ணாடிகள் டெய்மன் வடிவிலானவை.

மீதமுள்ள கண்ணாடிகள் முக்கோண வடிவக் கண்ணாடிகளாக வடிவமைக்கப்பட்டன. இந்த மிகப் பெரிய கண்ணாடி பிரமிட் அருகே சிறிய பிரமிட்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முக்கோண வடிவக் கண்ணாடி பிரமிட்யில் ‘666’ கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும், இந்த எண் சாத்தானுடையது என்றும் அக்காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

kattidam-3jpg

அருங்காட்சியகத்தை மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதமாக இந்தக் கண்ணாடி பிரமிட் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் நேரடியாகச் சுரங்கப்பாதையில் விழும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ப

ிரெஞ்சு, ஆசிய பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்ணாடிக் பிரமிடுக்குக் கீழ் அலுவலகங்கள், கடைகள், அரங்கம், சுற்றுலா பயணிகளின் பேருந்துப் பணிமனை ஆகியவை உள்ளன. லு கிராந்த் லூவ்ர் பார்வையிட மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 45 லட்சம் பார்வையாளர்கள் வருகிறார்கள்.

விருதுகளுக்குச் சொந்தமானவர்

ஜியாமண்ட்ரிக், பல்வேறு வடிவங்களைப் பயண்படுத்திக் கட்டிடங்களை வடிவமைப்பதில் வல்லவரான பெய் தன்னுடைய நூறு வயதில் கட்டிட வடிவமைப்பியல் பணியில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். கட்டிடக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசுக்கு இணையான பிரிட்ஸ்கர் விருது 1983-ம் ஆண்டு பெய்க்கு வழங்கிக் கவுரவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: renugadevi.l@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்