கண்ணாடிகள் உள் அலங்கார வடிவமைப்பாளரின் மந்திரக் கோல்கள். வீட்டிலுள்ள அறைகளைப் பெரிதாகவும் புதுப்பொலிவுடனும் நேர்த்தியுடனும் மாற்றக்கூடிய வல்லமை அவற்றுக்கு உண்டு. எல்லா அறைகளுக்கும் ஒரே வடிவத்திலான கண்ணாடிகளைப் பொருத்துவது சரியானதாக இருக்காது.
சாப்பாட்டு அறை, நுழைவாயில், படுக்கையறை, குளியலறை எந்த இடத்தில் எந்த மாதிரியான கண்ணாடிகளைப் பொருத்தலாம் என்பதைத் தெரிந்துகொண்டால், அது வீட்டின் தோற்றத்தையே புத்தும்புதிதாக மாற்றிவிடும். இப்படிக் கண்ணாடிகளால் உள் அலங்கார வடிவமைப்பதற்கு அதிக செலவும் இடமும் தேவைப்படாது. உங்கள் வீட்டில் இந்த மாற்றத்தை எளிமையாக நீங்களே செய்துவிடலாம்.
படுக்கை அறை: தரையில் சாய்த்துவைக்கும் கண்ணாடி
படுக்கை அறையில் வைப்பதற்கு, முழு நீள அளவில் தரையில் சாய்த்துவைக்கும் கண்ணாடி ஏற்றதாக இருக்கும். இந்தக் கண்ணாடியைப் படுக்கைக்கு எதிராக வைக்காமல் படுக்கைக்கு அருகில் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். இந்தக் கண்ணாடி உங்கள் அறைக்கு நவீனத் தோற்றத்தைக் கொடுக்கும். கண்ணாடி கீழே விழாமல் இருப்பதற்காக அதைச் சுவரில் ஆணியடித்துக் கட்டிவைக்கலாம்.
நுழைவாயில் பெரிய வட்டக் கண்ணாடி
பெரும்பாலான வீடுகளில் நுழைவாயில்கள் குறைவான வெளிச்சத்துடனே அமைக்கப்படுகின்றன. இந்தக் குறையைப் போக்குவதற்குக் கண்ணாடிகள் உதவும். நுழைவாயில் அருகே அமைக்கப்படும் மேசையின் மேல் வட்ட வடிவலான ஒரு கண்ணாடியைப் பொருத்தலாம். இந்த இடத்தில் வட்ட வடிவலான கண்ணாடியைப் பொருத்துவது நுழைவாயில் பெரிதாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும்.
குளியலறை: பெரிய கண்ணாடி
குளியலறைக்குப் பெரிய அளவிலான எளிமையான சட்டகம் இருக்கும் கண்ணாடி பொருத்தமானதாக இருக்கும். குளியலறையில் பெரிய கண்ணாடி இருப்பதை பொதுவாகப் பலரும் விரும்புவார்கள். சட்டகத்துடன் கூடிய கண்ணாடி குளியலறையின் தோற்றத்தை அழகாக்குவதற்கு உதவும்.
சாப்பாட்டு அறை: பாரம்பரியக் கண்ணாடி
சாப்பாட்டு மேசை இருக்கும் அறையில் கண்ணாடி பொருத்துவது அந்த அறைக்குப் பெரிதான தோற்றத்தைக் கொடுக்கும். அதே நேரம், பெரிய கண்ணாடிக்கு முன் அமர்ந்து சாப்பிடுவது சிலருக்குப் பிடிக்காமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால், பாரம்பரியச் சட்டகம் இருக்கக்கூடிய கண்ணாடியைப் பொருத்தும்போது அது பெரிய உறுத்தலாகத் தெரியாது. அத்துடன் ஜன்னல் சாளரங்கள் போல சட்டகச் சாளரங்கள் இருக்கக்கூடிய கண்ணாடியைச் சாப்பாட்டு அறையில் பொருத்துவதும் பொருத்தமாக இருக்கும்.
இந்தச் சாளரக் கண்ணாடியை ஜன்னலுக்குப் பக்கவாட்டில் அமைப்பது ஏற்றதாக இருக்கும். இது சாப்பிடுபவர்களுக்கு மற்றொரு ஜன்னல் அறையில் இருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இது பெரிய அறையில் இருப்பதைப் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கும்.
அலுவலக அறை: சூரியக் கண்ணாடி
வீட்டில் இருக்கும் உங்கள் அலுவலக அறைக்குப் பெரும்பாலும் கண்ணாடியின் தேவை இருக்காது. ஆனால், உங்களுக்குக் கண்ணாடி தேவை என்று நினைத்தால், சூரிய வடிவிலான கண்ணாடி அலுவலக அறைக்குப் பொருத்தமானதாக இருக்கும். இந்தக் கண்ணாடி அறைக்கு நவீனத் தோற்றத்தைக் கொடுக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago