வடகிழக்குப் பருவ மழைத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் மழை பரவலாகப் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாகவே மழை பெய்யும்போது பெருக்கெடுத்து ஓடும் மழை நீர், கால்வாய்களில் கலந்து வீணாவது வாடிக்கை.
இந்தச் சூழலில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவருவது பற்றிய தகவல்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. நிலத்தடி நீர் குறைவதால், கிணறுகளிலும் ஆழ்குழாய்க் கிணறுகளிலும் தண்ணீரும் குறைந்துவருகின்றன. இதனால், கோடைக் காலத்தில் தண்ணீருக்காக அலையும் சூழ்நிலையையும் பார்க்கிறோம்.
நிலத்துக்குள் ஊடுருவிச் செல்லும் தண்ணீர்தான் கிணறு, ஆழ்குழாய்க் கிணறு ஆகியவற்றின் மூலம் நமக்குத் தேவையான நீராகக் கிடைக்கிறது.
ஆனால், இன்று என்ன நடக்கிறது? வீட்டைச் சுற்றி பெயருக்குக்கூடத் திறந்தவெளிச் சாலைகள் கிடையாது. மண் சாலைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. ஒரு பக்கம் அடுக்குமாடிக் குடியிருப்புகளில், வீட்டைச் சுற்றி இருக்கிற பகுதியை சிமெண்ட் தளமாகக் கட்டி மூடிவிடுகிறார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளோ தார் சாலை, கல் சாலை, சிமெண்ட் சாலையைப் போட்டு மண் சாலையை நிரந்தரமாக மூடிவிடுகின்றன. திறந்த வெளிகள் குறைந்துகொண்டே போவதால், பெய்யும் மழைநீர் பூமிக்குள் செல்ல முடியாமல் நிலத்தடி நீர் குறையும் போக்கு தொடர்கிறது.
எந்த அளவுக்கு மழைநீரை பூமிக்குள் அனுப்புகிறோமோ, அந்த அளவுக்கு நிலத்தடி நீரும் கிடைக்கும். ஒரு காலத்தில் இரவு நன்றாக மழை பெய்தால் காலையில் மழை பெய்ததற்கான தடமே இருக்காது. மழை நீர் முழுமையாக நிலத்துக்குள் இறங்கியிருக்கும். கிணற்றை எட்டிப் பார்த்தால் தண்ணீர் மேலேறி நிற்கும்.
ஆனால், இன்றோ கான்ங்கிரீட் கட்டமைப்புகள் பெருகிவிட்டதால் மண் பரப்பு குறைந்துவிட்டது. பெய்யும் மழை நீர் மண்ணுக்குள் ஊடுருவிச் செல்ல வழி இல்லாததால் வீணாகப் போகிறது. எனவே, கிணறுகள் வறண்டுகிடக்கின்றன. ஆழ்குழாய் ஆழத்தை அதிகரித்தாலும் அதில் தண்ணீர் வருவது குறைந்துகொண்டேபோகிறது.
இந்த இடத்தில்தான் மழை நீர் சேகரிப்புத் திட்டம் மழை நீரைச் சேமிக்க உதவுகிறது. மகத்தான திட்டமாக மாற வேண்டிய மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஒவ்வொரு கட்டிடத்திலும் காட்சிப் பொருளாகிக்கிடக்கிறது. பொதுமக்கள் முறையாக இதைச் செய்யாமலும் பராமரிக்காமலும் விட்டுவிடுவது தொடர்கிறது. மழை நீரைச் சேமிப்பதன் மூலம் தண்ணீர் தேவையை ஓரளவு தீர்த்துக்கொள்ளலாம்.
மழை நீரை எப்படி முறையாகச் சேமிப்பது?
வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு, தொழிற்சாலை, வணிக வளாகம், கடைகள், தனியார் அலுவலகங்கள் என எந்த இடமாக இருந்தாலும், பெய்யும் மழை மேற்கூரையில்தான் விழும். இரண்டாவதாக வீட்டைச் சுற்றி உள்ள இடங்களில் மழை நீர் விழும். மொட்டைமாடி தண்ணீரைச் சேமிக்க, மொட்டை மாடியிலிருந்து குழாய்கள் மூலமாகக் கீழே கொண்டு வந்துவிடலாம்.
rain-waterjpgஅந்தக் குழாய்களை இணைத்து ஒரு வடிகட்டி தொட்டியை அமைத்து, நீரைச் சேமிக்கும் தொட்டியில் சேமித்து வைக்கலாம். இந்தத் தண்ணீரை உடனடித் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தொட்டி இல்லாவிட்டால் பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரிக்கலாம். இது உடனடி தேவைக்கான மழை நீர் சேமிப்பு.
இன்னொரு வழியும் உள்ளது. நிலத்துக்குள் தண்ணீரைக் கொண்டு சென்று நிலத்தடி நீராகச் சேமிப்பது. தேவையைப் பொறுத்து நீரைச் சேமிக்கலாம். குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கப் பெறாதவர்கள், தண்ணீரைத் தொட்டிக்கு மாற்றி சேமித்துப் பயன்படுத்தலாம். ஓடு வீடு, கூரை வீடுகளில்கூடக் குழாயைப் பாதியாக வெட்டி கூரையின் விளிம்பில் வைத்து ஒரு பக்கமாகத் தண்ணீரைக் கீழே இறக்கி சேமித்து பயன்படுத்தலாம்.
மழைக் காலங்களில் பெய்யும் மழை நீரை உடனடி தேவைக்காகவோ அல்லது நிலத்தடி நீரை சேமிக்கவோ பயன்படுத்தினால் தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்கலாம். இனிமேலாவது வீட்டைச் சுற்றி பெய்யும் மழை நீரை முறையாகச் சேமித்து உடனடித் தேவைக்குப் பயன்படுத்தலாம் அல்லது நிலத்துக்குள் விட்டு நிலத்தடி நீரை உயர்த்த உதவலாம். அதற்கு வீட்டு மாடியைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் தொடங்கி வீட்டைச் சுற்றி பெய்யும் மழை நீர் தெருவுக்கு சென்றுவிடாதபடி செய்வதும் முக்கியம்.
மழை நீரும் வங்கியைப் போன்றதுதான். பிற்காலத் தேவைக்காக மழை நீரைச் சேமிக்கப்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago