வீட்டுக் கட்டுமானத்தில் முக்கியமானது கான்கிரீட் பணி. செண்ட்ரிங் பணி முடித்துவிட்டால் வீட்டுக் கட்டுமானப் பணி முக்கால்வாசி முடிந்த மாதிரிதான். முன்பெல்லாம் கட்டுமானப் பணிகளில் அடித்தளத்துக்கும் கூரைக்கும்தான் இம்மாதிரி கான்கிரீட் இடுவது வழக்கம். இப்போது பீம் வளர்க்கும் வழக்கம் வந்துள்ளது. அதில் கான்கிரீட் கலவைதான் பயன்படுத்தப்படுகிறது.
அடித்தளக் கட்டுமானம், பீம் கட்டுமானம், கூரை என எந்தப் பணிக்குப் பயன்படுத்தினாலும் பலகை அடைத்துதான் கான்கிரீட் நிரப்பப்படும். இந்தப் பலகை அடைக்கும் முறையில் மரப் பலகைதான் காலம்காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. மரப் பலகை அடைப்பில் சில பாதகங்கள் இருக்கின்றன.
பலகைகளை ஒன்றுடன் ஒன்று இணக்கமாக அடைக்க முடியாது. அதனால் கான்கிரீட் கலவை இடைவெளிகளின் வழியாக வழிந்து செல்ல வாய்ப்புள்ளது. இதனால் இந்த இடைவெளிகளை நாளிதழ் காகிதங்கள் வைத்து அடைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனாலும் கான்கிரீட் ஒழுகுவதைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர அதைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்காக இரும்புப் பலகை கொண்டு வழக்கம் இப்போது உள்ளது.
ஆனால், இந்த இரும்புப் பலகை நீண்டகாலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியாது என்பதால் இது பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கு மாற்றாக பிளாஸ்டிக் பலகைகள் பயன்படுத்தப்படுவதும் இப்போது பரவலாகிவருகிறது. மரப் பலகை அடைக்கும்போது எண்ணெய் கான்கிரீட் ஒட்டாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பலகையில் அதற்கு அவசியம் இல்லை. மேற்பரப்பு சமதளமாக இருக்கும். இதனால் அதற்கு மேல் லேசான பூச்சு போதுமானது.
பிளாஸ்டிக் பலகைகள் மரப் பலகைகளைக் காட்டி,லும் நெருக்கமான பிணைப்பை உண்டாக்கும். எடை குறைவாக உள்ளதால் இவற்றைக் கையாள்வது எளிது. பலகைகளைப் போல் எளிதில் சேதமடையாது. இரும்புப் பலகைகள் போல் துருப்பிடிக்காது. மேலும் பிளாஸ்டிக் பலகைகள் உறுதியான, நேர்த்தியான கூரையைத் தரும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago