உங்கள் இன்வெர்ட்டர் நலமா?

By வீ.சக்திவேல்

மி

ன்வெட்டு இருக்காது என்றுதான் அரசால் கூறமுடியும். மின்தடை வராது என்று யாராலும் கூற முடியாது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்றால் மின்வெட்டு என்பது மின்வாரியத்தால் குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் என்று கூறி அந்த நேரங்களில் மட்டும் மின்சாரத்தை நிறுத்துவது மின்வெட்டு.

எந்தத் தகவலும் சொல்லாமல் பத்து நிமிடங்களிலிருந்து எத்தனை மணிநேரம் என்று கணக்கில்லாமல் மின்சாரம் இல்லாமல் இருக்கும். அது மின்தடை என்ற சொல்லால் பயன்படுத்தப்படுகிறது. இதற்குப் பல காரணிகள் உள்ளன. மின்தயாரிப்பில் ஏற்படும் பழுதுகள், தயாரிப்புக்கும் நுகர்வுக்கும் உள்ள வேறுபாட்டைச் சரிசெய்தல், சம்பந்தப்பட்ட மின்வாரியத்தால் மின்விநியோகத்தில் உள்ள பழுதுகளைச் சரிபார்த்தல் எனப் பல காரணங்களால் மின்தடை ஏற்படலாம்.

எத்தனை காரணங்களைக் கூறினாலும் இந்த வெயில் காலத்தில் பத்து நிமிடங்கள்கூட மின் விசிறி இல்லாமல் இருப்பது நரகத்தை எட்டிப் பார்த்து வருவதைப் போலிருக்கும். இன்வெர்ட்டர் நாம் வைத்திருந்தாலும் இவ்வளவு நாட்களாக மின்தடை இல்லாததால் அதைப் பற்றி மறந்து அதைப் பராமரிக்காமல் விட்டிருப்போம். ஏழு அல்லது எட்டு மணி நேரம் இயங்க வேண்டிய இன்வெர்ட்டர் தற்போது சிறிது நேரமே இயங்குவதற்குக் காரணம் நாம் அதைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டதுதான்.

பேட்டரியைப் பார்க்க வேண்டும்

இதுநாள்வரை மின்தட்டுப்பாடு இல்லாததால் நாம் பயன்படுத்தும் இன்வெர்ட்டர் பேட்டரி இயங்காமல் இருந்துள்ளதால் அதன் செயல்பாட்டின் தரம் குறைந்து போயிருக்கும். சில நேரம் இன்வெர்ட்டரிலிருந்து மின்சாரம் சுத்தமாக வரவில்லையென்றால் அருகிலுள்ள பேட்டரி சர்வீஸ் சென்டர் ஏதாவது ஒன்றில் பேட்டரியைக் கொடுத்து சார்ஜ் செய்து தரச் சொல்லாம். அப்படிச் செய்தால் சில பேட்டரிகள் வழக்கம் போல நன்கு இயங்கத் தொடங்கும். அது அந்த பேட்டரின் நிலையைப் பொறுத்தது.

நமது இன்வெர்ட்டரின் பயன்பாட்டு அளவு முன்பைவிட மிகவும் குறைவாக இயங்குகிறது என்றால் முதலில் அதை வாங்கி எத்தனை நாட்கள் ஆனது என்று பார்க்க வேண்டும். அந்த பேட்டரி நிறுவனம் கொடுத்திருந்த உத்தரவாத உழைப்புக் கால அளவு முடிந்திருந்தால் நாம் நமது பேட்டரியை மாற்ற வேண்டும். புது பேட்டரி வாங்கும் போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பேட்டரிக்கு ஒரு விலை போட்டு அவர்களே எடுத்துக்கொள்வார்கள்.

நமது பேட்டரியின் உத்தரவாத காலம் முடிவடையவில்லை, ஆனால், பயன்பாட்டு நேரம் குறைந்துள்ளது என்றால் நாம் அதைச் சரியாக பராமரிக்கவில்லை என்பதே முக்கிய காரணமாகும். பேட்டரி, அது புதிதாக இருந்தாலும் சரி, உத்தரவாதகாலம் முடியாத பேட்டரியாக இருந்தாலும் சரி, அதைச் சரியாகப் பராமரிக்கும்பட்சத்தில் அதன் பயன்பாடு அந்த பேட்டரி நிறுவனம் கொடுத்த உத்தரவாதகாலம்வரை சரியாகவே செயல்படும்.

இணைப்புகளில் கவனம்

முதலில் நமது பேட்டரிக்குத் தேவையான டிஸ்டில்டு வாட்டர் குறைந்துள்ளதா என இரு மாதங்களுக்கு ஒருமுறை பார்த்து அதை ஊற்ற வேண்டும். டிஸ்டில்டு தண்ணீர் எப்போது தேவையோ அப்போது வாங்கி உடனே பயன்படுத்த வேண்டும். வாங்கி நான்கு ஐந்து மாதம் வைத்திருந்து பயன்படுத்த வேண்டாம். தேவைக்கேற்ப வாங்கிப் பயன்படுத்தவும். டிஸ்டில்டு தண்ணீரை ஊற்றும்போது மிகவும் கவனமாக ஊற்ற வேண்டும்.

காரணம் நாம் ஊற்றும் தண்ணீர் உள்ளே உள்ள ஆசிட்டுடன் கலந்துவிடும் என்பதால், அதை ஊற்றும் போது நிறைந்து கீழே சிந்தாதவாறு ஊற்ற வேண்டும். அவ்வாறு சிந்தினால் அந்த இடம் ஆசிட்டால் அரிக்கப்பட்டுவிடும். கைகளில் படாதவாறு புனல் வைத்து டிஸ்டில்டு தண்ணீரை பேட்டரியில் நிரப்பலாம். அது நிறைந்து கீழே சிந்தாதவாறு ஊற்ற வேண்டும்.

சில பேட்டரிகளில் அதன் இணைப்புகளில் (ப்ளஸ் மற்றும் மைனஸ்) சில நேரங்களில் சற்றுப் பச்சை கலந்த சுண்ணாம்பு போன்று ஒருவித மாவு போன்று தோன்றும். அதைச் சரிசெய்ய முதலில் தங்களின் பேட்டரியை மின் இணைப்பிலிருந்து துண்டித்துவிடுங்கள். பிறகு துவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் சோடா மாவை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்திய பல் துலக்கும் பிரஷ் ஒன்றை எடுத்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அந்த பிரஷை தண்ணீரில் நனைத்து பிறகு சோடா மாவில் சற்று பிரஷை வைத்து தொட்டு பேட்டரியில் உள்ள இணைப்பைத் துடைக்க வேண்டும். சில முறை இப்படிச் செய்யும்போது அந்த மாவு போன்ற துகள்கள் அகன்றுவிடும்.

இரண்டு இணைப்புகளையும் துடைத்து முழுவதுமாக அந்த மாவை அகற்றி எடுத்துவிடுங்கள். பிறகு துணியை வைத்து அதை நன்றாக ஈரமில்லாமல் அந்த இரண்டு இணைப்பு முனைகளையும் துடைத்துவிடுங்கள். இணைப்புகளைத் துடைக்கும்போது சற்றுக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே அதில் மின்சாரம் இருப்பதால் இரண்டு முனைகளையும் கவனிக்காமல் ஒரே நேரத்தில் தொட்டால் ஷாக் அடிக்க வாய்ப்புள்ளது என்பதால் கவனமாகக் கையாள வேண்டும்.

அந்த இரண்டு முனைகளும் காய்ந்த பின்பு அதில் தேங்காய் எண்ணெய்யை இன்னொரு பிரஷ் கொண்டு தடவி விட வேண்டும். தேங்காய் எண்ணெய் தடவினால் சில காலத்துக்கு அந்த மாவு போன்ற பொருள் அம்முனைகளில் வராது. தயவுசெய்து இவையனைத்தையும் பிரஷ் வைத்து மட்டுமே செய்ய வேண்டும். இப்போது அந்த பேட்டரியைத் தங்களின் இன்வெர்ட்டர் மின்இணைப்புடன் இணைத்துவிடலாம்.

மின்தடை இல்லாத போதுகூட வாரத்துக்கு ஒரு நாளில் அரை மணிநேரமோ ஒரு மணிநேரமோ நமது வீட்டின் மின்இணைப்பைத் துண்டித்துவிட்டு இன்வெர்ட்டர் பேட்டரியை இயங்க வைக்க வேண்டும். அப்போது அதன் செயல்பாடு இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

இயந்திரம் என்பது அதன் பராமரிப்பில்தான் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அதைக் கவனிக்காமல் விட்டால் அதன் செயல்பாட்டுத்திறன் குறைந்து நமக்குத்தான் செலவு வைக்கும். எனவே, அது பேட்டரியாக இருந்தாலும் சரி கணினியாக இருந்தாலும் சரி கவனிப்பு என்பது அவசியம் தேவை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்