கலைடாஸ்கோப்: ‘மறுவார்த்தை’ - தினம் ஒரு அவதாரம்

By ஆதி

 

ஏ.

ஆர். ரஹ்மான், அவரது தலைமுறையின் வரவுக்குப் பிறகு தமிழ் திரைப்பாடல்களின் ஆயுட்காலம் சொற்பமாகிவிட்டது. ஒரு படத்துக்குத் துருப்புச்சீட்டு போலிருக்கும் பாடல்களின் ஆயுள், அந்தத் திரைப்படத்தின் நினைவுகள் அழியும் காலத்துடன் சேர்ந்தே அழிந்துபோவது சாதாரணமாகிவிட்டது. இந்தப் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் சில பாடல்களே கரையேறி நம் காதுகளில் தேன் பாய்ச்சுகின்றன.

அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வின் ‘மறுவார்த்தை பேசாதே’. கௌதம் மேனன் இயக்கி தனுஷ் நடித்த இப்படத்துக்குப் பூஜை போட்டு, இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், இசையமைப்பாளர் பெயரில்லாமல் வெளியிடப்பட்ட கொஞ்ச காலத்திலேயே இந்தப் பாடல் பலரது செல்போன்களில் பேச ஆரம்பித்தது - ரிங் டோனாகவோ, காலர் டோனாகவோ. பிறகு யூடியூப், ஃபேஸ்புக் எனச் சமூக ஊடகங்களில் ஒரு சுற்று வந்த பிறகு, அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் தர்புகா சிவா என்று அறிவிக்கப்பட்டது. படம் வெளியாகாவிட்டாலும், கடந்த ஆண்டின் மிகப் பெரிய ஹிட் பாடல் என்ற அந்தஸ்தை ‘மறுவார்த்தை பேசாதே’ டிஸ்டிங்ஷனுடன் தட்டிச் சென்றது.

12CHVAN_maruvarthai_pesathe.jpgபுது அவதாரம்

சட்டென்று ஈர்த்துவிடும் மெட்டும் எளிமையான பின்னணி இசையும்தான் இந்த மெலடி பாடல் ஹிட் அடிக்கக் காரணம் என்பது பொதுவான நம்பிக்கை. அதேநேரம் சித் ஸ்ரீராமின் குரலும் தாமரையின் உணர்ச்சிகரமான பாடல் வரிகளும்தான் இந்தப் பாடலை வேறொரு நிலைக்கு எடுத்துச் சென்றன.

இந்தா வந்துவிடும், அந்தா வந்துவிடும் என்று எ.நோ.பா.தோ. படம் வந்த வழியைக் காணோம். படம் வருகிறதோ இல்லையோ ‘மறுவார்த்தை’ பாட்டுக்குப் புதிய புதிய ஆடியோ கவர் வெர்ஷன்களும், வீடியோ கவர் வெர்ஷன்களும் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. உணர்ச்சி ததும்பும் இந்தக் காதல் பாடல் நாளும் ஒரு புது அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கிறது.

தினம் ஒரு வெர்ஷன்

குறுக்கு வழியில் பிரபலமடைய விரும்பும் கத்துக்குட்டிகளின் கைகளில் இருந்தும் ‘மறுவார்த்தை’ தப்பவில்லை. பாடலைப் பின்னணியில் ஒலிக்கவிட்டு ‘பிரீவெட்டிங் ஷூட்’ போலக் காட்சிகளை நகர்த்துவது, ‘காதலர்கள் ஒருவர் வாயை மற்றொருவர் பார்த்துக்கொண்டு இருப்பது’ போன்ற கடுப்பேற்றும் வீடியோக்களும் யூடியூபில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

இவற்றுக்கிடையில் கேரளத்தைச் சேர்ந்த அதீஃப் பாடிய பாடலும் பின்னணிக் காட்சியமைப்பும், ஒரிஜினல் பாடலுக்குச் சிறந்த டிரிபியூட் என்று சொல்லலாம். கௌதம் மேனனின் யூடியூப் சேனலான ‘ஒன்றாக எண்டர்டெய்ன்மென்டே’ இதை வெளியிட்டிருக்கிறது. ‘இந்தியன் ராகா’ யூடியூப் சேனல், இதே பாடலின் கர்னாடக இசை வடிவத்தை வெளியிட்டுள்ளது. ‘தேசி ட்விஸ்ட்’ என்கிற அலைவரிசையில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர்கள் நடித்திருக்கும் வீடியோ கவர் வெர்ஷன், உணர்ச்சிகள் கலந்த சிறிய கதையையும் கொண்ட மோசமில்லை ரகம்.

ENPT -1rightபாடல் பெற்ற புத்துயிர்

இதெல்லாம் இருக்க, ‘மறுவார்த்தை பேசாதே’ பாடலுக்கு மீண்டும் ஒரு முறை உயிர் கொடுத்திருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சிவநேசன் ராம்தாஸ். வெளியாகி பத்தே நாட்களில், 4.5 லட்சம் ஹிட்ஸை தாண்டி பார்க்கப்பட்டிருக்கிறது, அவர் வெளியிட்ட வீடியோ கவர் வெர்ஷன்.

சிவநேசன் ராம்தாஸும் துர்கா தேவி நந்தினியும் தோன்றும் இந்த வீடியோ ஆறே நிமிடங்களில் ஒரு கதையைச் சொல்கிறது. மெட்டுக்குப் பாட்டு என்பதுபோல, ஏற்கெனவே ஹிட்டாகிவிட்ட பாட்டுக்குக் குறும்படப் பாணியில் ஒரு கதையை சிவநேசன் வடிவமைத்திருக்கிறார். நாயகன்-நாயகி இடையிலான பள்ளிக்கால ஈர்ப்பு தொடங்கி, கல்லூரிப் படிப்பு, வெளிநாடு சென்று திரும்புவதுவரையிலான உறவு சொல்லப்படுகிறது.

ஃபாஸ்ட் பார்வர்டு பாணிக் கதையாக இருந்தாலும், கதை முழுக்கச் சின்னச்சின்ன உணர்ச்சிகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ பலருக்கும் பிடித்துப்போவதற்கு அதுவே காரணம். அத்துடன் மூன்று கெட்டப், வெவ்வேறு லொகேஷன் என மெனக்கெட்டிருக்கிறார்கள்.

இப்படி ஆடியோ, வீடியோ கவர்களால் ‘மறுவார்த்தை’ பாடலின் ஆயுள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக அதிகரித்துவரும் எதிர்பார்ப்புகளை நிஜப் படத்தின் காட்சிகள் பூர்த்தி செய்யுமா என்பது தெரியவில்லை. ஆனால், அதற்குப் பிறகும்கூட ‘மறுவார்த்தை’ மறக்கப்பட்டுவிடாது, பேசிக்கொண்டேதான் இருக்கும்.

பார்க்க: https://bit.ly/2IsXaC1

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்