ப
ழைய வாகன டயர்களைப் பயன்படுத்தி அஸ்திவாரம், கான்கிரீட், செங்கல், சிமெண்டுக்குப் பதில் மண்ணாலான சுவர்கள், பழைய சந்தைகளில் வாங்கிய ஜன்னல்கள், கழிவறைகள் என மறுசுழற்சிப் பொருட்களைக் கொண்டு சுமார் 1,500 சதுர அடி பரப்பளவில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வீட்டைக் கட்டியுள்ளார் பெங்களூருவில் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி. வி. தசரதி.
பழையதான புதியது
பொதுவாக, புது வீடு கட்டுபவர்கள் தங்களுடைய வீட்டில் அனைத்துப் பொருட்களும் புதிதாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். இதனால் வீட்டுக் கதவு, ஜன்னல் போன்ற மரச்சாமான்கள், கழிப்பறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என அனைத்து அலங்காரப் பொருட்களையும் புதியதாக வாங்குவார்கள். செங்கல், மணல், சிமெண்ட் ஆகிய கட்டுமானப் பொருட்களுக்கு ஆகும் செலவைவிட இதுபோன்ற இதர பொருட்களுக்கு ஆகும் செலவு, வீட்டு பட்ஜெட் தொகையை நாம் திட்டமிட்டதைவிடக் கூடுதலாக்கிவிடும்.
ஆனால் இதற்கு மாற்று யோசனையை முன்வைத்ததுடன் அதைத் தன்னுடைய புதிய வீட்டிலும் செயல்படுத்தியுள்ளார் தசரதி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு கட்டிய வீடு கர்நாடக மாநிலத்தில் மட்டுமன்றி நாடு முழுவதுமே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீட்டின் நுழைவாயில், மேல்தளம், சாப்பாட்டு மேசை, நாற்காலி, படிக்கட்டுகள் ஆகியவை பழைய மரப்பொருட்களைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தண்ணீர்க் குழாய், பாத்திரம் கழுவும் தொட்டி, சமையலறை அலமாரி, குளிர்சாதனப் பெட்டி, மைக்ரோ-அவன், காஸ் அடுப்பு, புத்தக அலமாரி, கழிப்பறைப் பொருட்கள் என அனைத்துப் பொருட்களும் பழைய சந்தைகளில் வாங்கியது.
ஜன்னல் வீடு
இந்தப் புதிய வீட்டைக் கட்டுவதற்கு மறுசுழற்சி, மறுபயன்பாடு, மறுபரிசீலனை, குறைவான செலவு ஆகிய நான்கு விஷயங்களைத் தாரக மந்திரமாகக் கடைப்பிடித்துள்ளார் தசரதி. இதற்காக முன்தயாரிப்புப் பணிகளை இணையதள உதவியுடன் மேற்கொண்டுள்ளார். பொதுவாக 1,500 சதுர பரப்பளவில் கட்டப்படும் வீடுகளில் சிமெண்ட், இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
ஆனால், தசரதி சிமெண்ட், இரும்பை குறைவாகப் பயன்படுத்தியுள்ளார். வீட்டின் நான்கு பக்கங்களிலும் வாய்ப்புள்ள இடங்களில் பழைய பெரிய கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளன. நிறைய ஜன்னல்கள், குறைவான கதவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இவரது வீட்டில் எப்போதும் காற்றோட்டம் கிடைக்கிறது.
சிமெண்ட் தளத்துக்குப் பதிலாக மரக்கட்டைகளின் மேல் ஓடுகள் போடப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலத்தில் சுமார் இருபதாயிரம் லிட்டர் அளவுக்கு நீர்த் தொட்டியில் (sump) நீர் சேமிக்கப்படுகிறது. இந்த நீரைச் சமையல் அறைத் தேவைக்கும் கழிப்பறைக்கும் பயன்படுத்தும் வகையில் மாற்றியுள்ளார் அவர். மின்சாரத் தேவைக்காக சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான இடங்களில் சுவர்களை முழுமையாக மர ஜன்னல்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் வருடத்தின் ஒவ்வொரு பருவ நிலையையும் அனுபவிக்க முடியும். அதனால் இந்த வீட்டை இயற்கையோடு இணைந்து வீடு எனலாம். இந்த மொத்த வீட்டையும் ஏழு மாதங்களில் 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடித்துள்ளார்கள்.
இயற்கைக்கு உகந்த, பணத்தைச் சேமிக்க உதவும் இதுபோன்ற வீட்டைக் கட்ட விரும்புபவர்களுக்கும் அவர் ஆலோசனை வழங்குகிறார். ஒவ்வொரு நாளும் புதிய நபர்கள் இவரிடம் ஆலோசனை பெற வருகிறார்கள். இயற்கையோடு இணைந்து வாழ தசரதியின் இல்லமும் ஆலோசனையும் உதவுகின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago