ஏழைகள் ஒதுங்க ஒரு புதுமைக் கூரை

By எல்.ரேணுகா தேவி

 

செ

ன்னை போன்ற நகரங்களில் கண்ணைக் கவரும் பிரம்மாண்டக் கட்டிடங்கள் இருக்கும் அதேவேளையில் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகளில் லட்சக்கணக்கான மக்களும் வாழ்ந்துவருகிறார்கள்.

இவ்வாறு குடிசைப் பகுதிகளில் வாழக்கூடிய பெரும்பாலான மக்களின் வீடுகளில் மேற்கூரையாக சிமெண்ட் ஒடுகள், தார்பாய் விரிப்பு அல்லது தகரங்கள் போடப்பட்டு உள்ளன. இதனால் அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் வெயில் காலத்தில் அதிக வெப்பத்தாலும் மழைக்காலத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் ஒழுகுவதாலும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இதுபோன்ற நிலை சென்னையில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் குடிசைப் பகுதிகளில் வசித்து வரும் சுமார் 65 கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்கள் சுகாதாரமான, ஆபத்தில்லாத வீடுகளில் வாழ்வதற்காக புதிய முறையில் கூரைகளை உருவாக்கியுள்ளார் அகமதாபாத்தைச் சேர்ந்த ஹாசிட் கனாத்ரா (Hasit Ganatra).

300 முறை பரிசோதனை

அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து முடித்துள்ளார் கனாத்ரா. தனியார் நிறுவனத்துக்காகக் கிராமப்புறங்களில் சூரிய ஒளி மின்சாரம் நிறுவுவது குறித்து இந்தியாவில் உள்ள பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்தப் பயணத்தின்போது குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளையும் சிமெண்ட் போன்ற மேற்கூரையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என முடிவுசெய்தார்.

இதையடுத்து தன்னுடைய வீட்டின் பின் பகுதியில் காகிதக் கழிவு, காய்கறி கழிவு, பிளாஸ்டிக் கழிவு ஆகியவற்றை கொண்டு புதுமையான மேற்கூரையை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். இரண்டு வருடக் கடும் முயற்சிக்குப் பிறகும் 300-க்கும் மேற்பட்ட பரிசோதனை முயற்சிகளுக்குப் பிறகு அட்டைப் பெட்டிகள், தேங்காய் நார் ஆகியவற்றைக் கொண்டு வித்தியாசமான மேற்கூரையை அவர் தயாரித்துள்ளார். தேவையில்லை என வீசப்படும் அட்டைப் பெட்டிகளுடன் தண்ணீர் சேர்த்து அதைக் கூழாக்கி அதனுடன் தேங்காய் நார் ஆகியவற்றை சேர்த்து உறுதியான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மேற்கூரையை தயாரித்துள்ளார் கனாத்ரா.

“உலகம் முழுவதும் நூறு கோடி மக்கள் பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசித்து வருகிறார்கள். இதற்கு ஒரு மாற்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அட்டைப் பெட்டியாலான மேற்கூரையைத் தயாரித்தேன். ஆரம்பத்தில் என்னுடைய யோசனையைக் கேட்ட பலர் கேலியாகச் சிரித்தனர். ஆனால் இன்றைக்கு அகமதாபாத்தில் மட்டும் எங்களுக்கு ஆறு சிறு தொழிற்சாலைகள் உள்ளன. அதில் 35 பேர் பணிபுரிந்து வருகிறார்கள்” எனச் சொல்கிறார் கனாத்ரா.

விலை குறைவு

செங்கல், மணல் ஆகிய கட்டுமானப் பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே போகிறது. இந்நிலையில் கனாத்ரா தயாரித்துள்ள அட்டைப் பெட்டி சிமெண்ட், ஒடுகளின் விலையைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இந்த அட்டைப் பெட்டி மேற்கூரைகள் வெயில் காலத்தில் வீடுகளுக்குள் வெப்பம் இறங்குவதை குறைக்கிறது. நீர் உட்புகாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மேற்கூரைகள் மழைக்காலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.

குடிசைப் பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம் அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதிகளை அலங்கரிக்கத் தொடங்கி உள்ளது. வரும் 2020-ம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லா இந்தியாவை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காகச் சிறப்பு திட்டத்தை அமைத்து இரண்டு கோடி வீடுகள் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குடிசைப் பகுதி மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு பதிலாக அவர்கள் இருப்பிடங்களில் தரமான மேற்கூரைகள் அமைத்து அவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் கானத்ரா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

31 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்