அழகான வீட்டைக் கட்டி அதில் குடியேறுபவர் களுக்கு சுவரிலோ, கூரையிலோ ஏற்படும் சிறு விரிசலைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஏதேனும் சிறு விரிசலைப் பார்த்த மாத்திரத்தில் மனம் பதறும்.
சுவர் விரிசலின்றி பார்ப்பதற்குப் பளபளவென இருக்க வேண்டும் என மனம் ஏங்கும். சுவர் அல்லது கூரையின் விரிசலைப் போக்குவதற்கு நவீனத் தொழில்நுட்பம் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளது.
ரூட்டிங் மற்றும் சீலிங்
விரிசலைப் போக்கப்பயன்படும் பொதுவான முறை இதுதான். இதை மிக எளிதாகச் செயல்படுத்த முடியும் என்பதால் பெரும்பாலோரின் தேர்வாக இது உள்ளது. கட்டுமானத் தொழிலில் பெரிய அனுபவம் ஏதுமற்ற சாதாரணத் தொழிலாளி கூட இம்முறையை எளிதாகக் கையாள முடியும் என்பது இதன் சிறப்பு.
இந்த முறையில், விரிசலின் போக்கிலேயே சென்று அதன் அடிப் பாகம் வரை நன்கு கலவையால் நிரப்பி மூடுவதுதான் அடிப்படை உத்தி. ஒரே இடத்தில் சிறு சிறு விரிசல்கள் கூட்டமாகக் காணப்பட்டாலோ தனியான பெரிய விரிசல் என்றாலோ கூட அத்தகைய விரிசல்களைப் பழுது பார்க்க இம்முறையைப் பயன்படுத்தலாம்.
ரெசின் இன்ஜெக்ஷன்
ரெசின் இன்ஜெக்ஷன் முறையில் எபாக்ஸி என்னும் ரெசின் பயன்படுகிறது. எபாக்ஸி என்பது பசை போல ஒட்டும் இயல்பு கொண்டது. விரிசல் ஏற்பட்டுள்ள இடங்களில் இந்த எபாக்ஸி ரெசினைப் பூசி மெழுகினால் விரிசல்கள் அடைபட்டுவிடும்.
விரிசல்களில் எபாக்ஸியை அதற்கான பிரத்யேகக் கருவி மூலம் இன்ஜெக்ட் செய்வது மிகவும் எளிது. மேலும் இதற்காகும் செலவும் மிக அதிகமல்ல. எபாக்ஸி உறுதியாகவும் வேதிப்பொருள்களால் பாதிக்கப்படாமலும் இருக்கும். இதனால் இதை அதிகமாக விரும்புகிறார்கள்.
டார்மண்ட் கிராக் எனச் சொல்லப்படும் அப்படியே நிலைபெற்றிருக்கும் விரிசல்களை இந்த முறையால் போக்கலாம். இந்த முறையில் எபாக்ஸியை இன்ஜெக்சன் முறையில் அழுத்தமாக விரிசலில் செலுத்துவதால் அது விரிசலின் முழு ஆழத்திற்கும் ஊடுருவிச் செல்லும்.
எனவே விரிசலை முழுமையாக எபாக்ஸி இட்டு நிரப்பிவிடுகிறது. விரிசல் விழுந்துள்ள சுவரில் விரிசல் அருகே நீளவாட்டில் துளைகள் போட்டு அந்தத் துளைகள் மூலம் எபாக்ஸி இன்ஜெக்ட் செய்யப்படுகிறது. எனவே அழுத்தத்துடன் வெளிப்படும் எபாக்ஸி விரிசலை நன்கு அடைத்துவிடுகிறது.
ஒவ்வொரு துளையும் எபாக்ஸி செலுத்தப்பட்டவுடன் சீல் வைக்கப்பட்டு அடுத்து துளையில் எபாக்ஸி செலுத்தப்படும்.
ஸ்டிச்சிங்
பொதுவாக ஸ்டிச்சிங் என்றால் நமக்கு நன்கு தெரியும். இந்த முறையும் தையலைத் தான் அடிப்படையாகக் கொண்டது. தையல் இயந்திரத்தால் துணியைத் தைப்பது போல், விரிசலின் குறுக்கே கம்பிகளைக் குறைந்த இடைவெளியில் அமைத்து, கலவையாக எபாக்ஸியைப் போட்டுப் பூசுவது இந்த முறையின் அடிப்படை.
விரிசலின் குறுக்கே கான்கிரீட் கம்பி வைக்கும் அளவிற்குச் சிறிய அளவில் வெட்டி, அதில் வளைவான கம்பியைவைத்து எபாக்ஸி கலவையை நிரப்பி மட்டமாகப் பூசிவிடுவார்கள்.
காக்கிங்
விரிசல்களையும் வெடிப்புகளையும் சரிப்படுத்துவதில் இது பெயர்பெற்ற முறை. சிறிய அளவிலானா வெடிப்புகளுக்கும் விரிசல்களுக்கும் மாத்திரமே இந்த முறையைப் பயன்படுத்த முடியும்.
ஒயிட் சிமெண்ட் போன்ற ஒட்டும் தன்மை கொண்ட கலவையைப் பற்பசையை அழுத்து எடுப்பது போல் அழுத்தி எடுத்து அதை விரிசல்கள் மற்றும் வெடிப்புகளில் பூசி அவற்றைச் சரிப்படுத்தும் முறை இது.
டிரில்லிங் & பிளக்கிங்
குறுகிய பரப்பில் ஆனால் ஆழமான விரிசல்களுக்கு உகந்த முறை இது. இம்முறையில் விரிசல் கண்ட சுவர் அல்லது கூரையில் துளையிட்டு அதில் கலவையை இட்டு நிரப்பி அடைத்துவிடுவார்கள்.
கான்கிரீட் சர்ஃபேசிங்
சுவரின் மேற்பரப்பில் மேம்போக்காக ஏற்பட்டிருக்கும் விரிசல்களை இம்முறையில் விரட்டலாம். விரிசல்கள் விழுந்த இடங்களில் சொரசொரப்பாகச் சுரண்டி எடுத்துவிட்டுப் புதிதாக கான்கிரீட் கலவை கொண்டு மேற்பரப்பை நன்கு பூசிவிடும் முறை இது. இது அதிக செலவு ஏற்படுத்தும் ஒரு வழிமுறை. இது கிட்டத்தட்ட மேற்பரப்பை புதிதாகவே உருவாக்குவது போன்றது.
சேண்ட் பிளாஸ்டிங்
சேண்ட் பிளாஸ்டிங் எனப்படும் வழிமுறை மிக அரிதான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. தொழிற்சாலைகளில் கேஸ்டிங் எனச் சொல்லப்படும் வார்ப்பு இரும்பாலான பொருட்களின் மேற்பூச்சைச் சீர்படுத்த இந்த சேண்ட் பிளாஸ்டிங் முறையைப் பயன்படுத்துவார்கள்.
இரும்பு மணல் துகள்கள் மிகுந்த அழுத்தத்துடன் ஒரு குழாய் வழியே வெளிச் செலுத்தப்படும். எங்கெல்லாம் விரிசல்கள் உள்ளனவோ அங்கெல்லாம் சேண்ட் பிளாஸ்டிங் செய்யும்போது வேகமாக மோதும் இந்தத் துகள்கள் சுவரின் மேற்பரப்பில் சொரசொரப்புத் தன்மையை உருவாக்கும்.
இந்தச் சொரப்பான தன்மையான இடங்களில் கலவை கொண்டு சுத்தமாகப் பூசும்போது விரிசல்கள் நன்கு அடைபடும்.
இவை போன்ற பல வழிமுறைகள் விரிசல்களைப் போக்க உதவுகின்றன. நமது கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கு ஏற்றவகையில் தேவையான வழிமுறைகளை கையாண்டு விரிசல்களை போக்கலாம்.
விரிசல்களைத் தகுந்த தொழில்நுட்ப உதவியுடன் சரிப்படுத்த வேண்டும். எல்லா விரிசல்களும் பெரிய ஆபத்தை உருவாக்கக்கூடியவை அல்ல. ஆனால் எந்த விரிசல்கள் ஆபத்தில்லாதவை எவை ஆபத்தானவை என்பதை தகுந்த கட்டிடப் பொறியாளர் அல்லது நிபுணரின் உதவியுடனேயே தீர்மானிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago