பெண்கள் சொத்து வாங்க ஒரு  வழிகாட்டி

By ரூஃப் அண்ட் ஃப்ளோர்

இன்று இந்தியாவில் பெண்கள் யாரையும் சார்ந்திருக்காமல் சுதந்திரமாக வாழ்க்கை வாழ்வது அதிகரித்து வருகிறது.  இந்த வாழ்க்கை முறை, பெண்களுக்கு பொதுமக்களின் பார்வையில் ஒரு மாற்றம் மற்றும் பெண்களுக்கு தங்கள் முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. அவர்களின் முன்னுரிமைகளில் ஒன்றாக, அவர்களுக்கென ஒரு சொத்தில் முதலீடு செய்வது பிராதனமாக இருக்கிறது.

இந்திய நகர்புறங்களில் வீடு வாங்குபவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருக்கின்றனர். இன்று ஒரு பெண்ணுக்கு தங்களுக்கு பிடித்த சொத்தை வாங்குவது எளிதாக இருந்தாலும், அப்படி வாங்குவதற்கு முன் மனதில் வைத்திருக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன:

பாதுகாப்பான இடம்

ஒரு பெண்ணாக வீட்டை வாங்கும் போது அது பாதுகாப்பான இடத்தில் கண்டுபிடிப்பது அவசியம். வீட்டை வாங்க ஆய்வு செய்யும் போது  ​​நீங்கள் குடியேற விரும்பும் பகுதியின் பின்னணியை ஆராய வேண்டும். அருகிலுள்ள குடியிருப்பாளர்களிடமிருந்து அந்த பகுதியின் பாதுகாப்பைப் பற்றி விசாரிக்க வேண்டும். குற்றப் பிண்ணனி கொண்ட இடங்களாகயிருப்பின் அதில் இருந்து  விலகி இருக்க வேண்டும்.

உங்கள் புதிய வீடு அமைந்திருக்கும் பகுதி நல்ல வெளிச்சத்துடன் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.  இருண்ட பகுதியில் அமைந்திருக்கும் இடங்கள் அல்லது வீடுகளை தவிர்க்கவும்.

சிறந்த பாதுகாப்புக்கு 24 × 7 பாதுகாவாலர் உத்தரவாதம்  அளிக்கப்படும் கேட்டட் கம்யூனிட்டியில் வீடு வாங்குவது சிறந்தது.

வசதிகள்

நீங்கள் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​சூப்பர் மார்க்கெட்கள், மருத்துவமனைகள், மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அருகில் அமைந்திருக்கும் இடத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.

அப்படிப்பட்ட இடங்களில் ஒரு வேளை இரவு நேரங்களில் ஏதேனும் தேவை பட்டால் கூட வெகு தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. பெரும்பாலும் நள்ளிரவு நேரங்களில் சாலைகளில் தனியாக செல்வதை தவிர்ப்பது நல்லது.

போக்குவரத்து வசதி

அடிப்படை வசதிகளுக்கு அருகாமையில் இருப்பதோடு மட்டுமல்லாமல், நகரத்தின் பல்வேறு இடங்களுடன் போக்குவரத்தின் மூலம் நன்கு இணைக்கப்பட்ட பகுதியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். நீங்கள் அன்றாடமோ அல்லது அடிக்கடி பயணிக்கும் பகுதிகளுக்கு பேரூந்து மற்றும் பொது போக்குவரத்து மூலம் நீங்கள் தேர்தெடுக்கும் பகுதியிலிருந்து எளிதில் சென்று வர இயல வேண்டும்.

உங்கள் நகரத்தில் ஒரு மெட்ரோ ரயில் போக்குவரத்து இயக்குகிறதென்றால், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள ஒரு வீட்டை வாங்க முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் புறநகர்ப்பகுதிகளில் வாழ்கிறீர்கள், ஆனால் நகர்புறத்தில் வேலை செய்தால் வெகு விரைவாக குறிப்பாக நள்ளிரவுக்குள் வீட்டிற்கு வந்த சேர வேண்டும். எனவே உங்கள் பகுதி போக்குவரத்து வசதியுடன் நன்கு இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நிதி குறித்த விழிப்புணர்வு

ஒரு வீட்டை வாங்குவதற்கு முன் உங்கள் நிதிகளை ஒழுங்காக சீரமைத்து கொள்ள வேண்டும். நீங்கள் சொத்து வாங்குவதில் உள்ள பல்வேறு செலவினங்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண்ணாக நீங்கள் வீட்டு கடனுக்காக செலுத்தும் வட்டிக்கு வருமான வரியிலிருந்து உங்களுக்கு ரூபாய் 2 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே போல் பெண்கள் வங்கி கடனுக்காக விண்ணப்பிக்கும்போது வங்கிகள் மிகவும் குறைவான வட்டி விகிதத்தில் வீட்டு கடன்கள் வழங்குகின்றன, எனவே அனைத்து வங்கிகளின் கடன் திட்டங்களையும் ஆராய்ந்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வங்கியை தேர்ந்தெடுப்பது அவசியம்.

டெல்லி மற்றும் ஹரியானா போன்ற இடங்களில் பெண்கள் சொத்து வாங்கும் போது முத்திரை தாள் வரியில் 2%  தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. அது போன்று நீங்கள் வசிக்கும் நகரங்களில் பெண்களுக்கென ஏதேனும் தள்ளுபடி அளிகப்படுகிறதா என தெரிந்து கொள்ளவும்.

சொத்து வாங்குவதிலிருக்கும் நடைமுறைகள் மற்றும் செலவீனங்களை நன்கு அறிந்து வைப்பதன் மூலம் உங்கள் நிதி குறித்து நல்ல முடிவுகளை எடுக்கமுடியும்.

திட்டமிடுதல்

ஒரு சொத்தை வாங்கும்போது அது தற்போதைய பயன்பாட்டிற்க்காகவோ, வருங்காலத்திற்காகவோ எப்படியிருந்தாலும் ஒரு சொத்து வாங்குவதென்பது உங்கள் காலம், பணம், முயற்சி உள்ளிட்டவற்றுக்கு கணிசனமான நேரம் செலவிட வேண்டியிருக்கும். எனவே பொறுமையாக இருங்கள், ஒரு முதலீடு பயனுள்ளதாகவும் திருப்திகரமானகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய நன்கு திட்டமிடுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்