எந்தச் சமையலறை நல்லது?

By விபின்

ன்றைய நவீன சமையல் அறை வடிவமைப்பில் இருவகை உள்ளன. திறந்தவெளிச் சமையலறை (Open Kitchen), மூடப்பட்ட சமையலறை (Closed Kitchen). இந்த இருவகையில் இரண்டாம் வகைதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், திறந்தவெளிச் சமையலறையும் சமீப காலமாகப் பிரபலமாகிவருகிறது.

மூடப்பட்ட சமையலறை

இது மற்ற அறைகளிலிருந்து சமைலறையைத் தனியே பிரிக்கிறது. சமைப்பதற்கு மட்டுமான ஓர் அறையாக இது இருக்கும். சமையல் பொருட்கள் வைத்துக்கொள்ளும் வகையிலான அலமாரிகள் நிறைந்ததாக இருக்கும் இந்தச் சமையலறை வகை.

பயன்கள்

இது மூடப்பட்ட அமைப்பாக இருப்பதால் உங்களுக்குத் தனியான நேரம் கிடைக்கும். வெளியிருந்து எந்தவிதமான குறுக்கீடும் இருக்காது. இதனால் சுதந்திரமாகச் சமைக்க முடியும்.

சமையலறையைத் தொடர்ந்து சுத்தப்படுத்திக்கொண்டிருக்க வேண்டியதில்லை. சமைத்து முடிந்த பிறகு மொத்தமாகச் சுத்தமாக்கிக்கொள்ளலாம். சமையல் செய்யும் ஓசை, உதாரணமாக மிக்ஸி அரைக்கும் சத்தம், வதக்கும் நெடி எல்லாம் சமையலறையிலிருப்பவர்களை மட்டும்தான் அசெளகர்யத்தைத் தரும். இன்ப அதிர்ச்சி தருவதற்காகப் பண்டம் செய்ய விரும்புவர்களுக்கு இது ஏற்றது.

சங்கடங்கள்

மூடப்பட்ட சமையலறையில் சமைக்கும்போது சமைப்பவர் குடும்பத்திலிருந்து தனித்துவிடப்படுவார்கள். விருந்தினர்களுக்குச் சமைக்கும்போது அவர்களை வரவேற்பறையில் அமரவைத்துவிட்டுச் சமைக்க வேண்டும். அவர்களுடன் உரையாட முடியாது.

திறந்தவெளிச் சமையலறை

இது சமையலறையை மற்ற அறைகளுடன் தொடர்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சாப்பாட்டு மேஜை அமைக்கப்பட்டிருக்கும். அமர்ந்து பேசுவதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். சமைத்துக்கொண்டே குடும்ப உறுப்பினர்களுடனோ விருந்தினர்களுடனோ உரையாட முடியும்.

பயன்கள்

இந்த வகை சமையலறையில் வெளிச்சமும் புறக்காற்றும் அதிகமாக இருக்கும். சமைத்துக்கொண்டே குடும்ப உறுப்பினர்களுடனோ விருந்தினர்களுடனோ உரையாடிக்கொண்டிருக்கலாம். அதனால் சமையல்செய்வதில் அயர்ச்சி தெரியாது.குழந்தைகள் இருப்பின் கவனித்துக்கொள்ள வசதியாக இருக்கும். அதிகம் இடம் இருப்பதால் மைக்ரோ ஓவன் போன்ற சாதனங்களைவைக்க இடம் கிடைக்கும்.

சங்கடங்கள்

வெளிப்படையாக இருப்பதால் சமையலறையில் தனிமை இருக்காது. வெளியாட்கள் இருப்பதால் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். சமையலறையின் சத்தம், நெடி ஆகியவை அறையிலிருப்பவர்களைப் பாதிக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்