வங்கிகள் தாராளம்: அதிகரிக்கும் வீட்டுக் கடன்

By குமார்

பொதுத் துறை வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கிய மதிப்பு முன்பை விட அதிகரித்துள்ளது. முதலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்ற வங்கிகளை விட அதிகம் வீட்டுக் கடன் வழங்கியதில் வளர்ச்சி கண்டுள்ளது. அது 1, 24, 772 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. அதன் வளர்ச்சி விகிதம் 15.6 சதவீதம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கி, 14749 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவைவிட 5 சதவீதம் அதிகரித்து 20 சதவீதமாக உள்ளது. அதுபோல அலகாபாத் வங்கியின் வளர்ச்சி விகிதமும் இந்தக் காலாண்டில் அதிரித்துள்ளது. அதன் வளர்ச்சி விகிதம் 26 சதவிகிதமாகும்.

ஆனால் அதன் கடன் தொகை 4516 கோடி ரூபாய். சில ஆண்டுகளாக வீட்டுக் கடன் பிரிவில் வளர்ச்சி முடங்கியிருந்தது. ஆனால் இப்போது பெருவாரியான மக்கள் குறைந்த விலை வீடுகள் வாங்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அதுதான் இந்தத் திடீர் வளர்ச்சிக்குக் காரணம் என வங்கி அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மேலும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வீட்டு வாடகையும் வரிச் சலுகையும் வீடு வாங்கும் ஆர்வம் அதிகரிக்க ஒரு முக்கியக் காரணம் எனலாம். சென்ற ஆண்டைக் காட்டிலும் வீட்டுக் கடன் விகிதம் கணிசமான அளவு அதிகரித்திருப்படது ஆரோக்கியமான மாற்றம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்