ந
வீன வீட்டில் பல ஸ்மார்ட் சாதனங்கள் வந்துவிட்டன என்பதை நாம் அறிவோம். ஸ்மார்ட் பூட்டு, ஸ்மார்ட் விளக்கு, ஸ்மார்ட் அடுப்பு, ஸ்மார்ட் குளியலறை என விதவிதமான ஸ்மார்ட் கருவிகள் நமது வேலைகளைச் சுலபமாக்க வந்துள்ளன. சில ஸ்மார்ட் கருவிகளை நம்மால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. அதாவது அப்படி ஒரு ஸ்மார்ட் கருவி அல்லது சாத்தியம்தானா என்பதை நாம் நினைத்தே பார்த்திருக்க மாட்டோம். அப்படியான சாதனம்தான் ஸ்மார்ட் வார்ட்ரோப் (Wardrobe).
பாரம்பரியம் மிக்க பழைய வீடுகளில் துணிமணிகளை அடுக்கிவைக்க கலை வேலைப்பாடுகள் கொண்ட மர பீரோவைப் பயன்படுத்திவந்தார்கள். தங்கள் அந்தஸ்துக்கேற்ற வகையில் அந்த பீரோக்களைப் பாதுகாப்பாகவும் கலையம்சத்துடன் உருவாக்கிக்கொண்டார்கள். தங்களுக்கு ஏற்ற மாதிரி அதில் ஆளுயரக் கண்ணாடியைப் பொருத்துவது போன்ற அலங்காரத்தையும் செய்துகொண்டார்கள்.
அதன் பின்னர், இரும்பின் பயன்பாடு அதிகமானபோது ஸ்டீல் பீரோக்கள் அதிகம் பயன்பட்டன. இப்போது இத்தகைய மர பீரோக்களும், ஸ்டீல் பீரோக்களும் ஓரளவு பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், வார்ட்ரோப்கள் எனப்படும் அலமாரிகளும் அதிக அளவில் புழக்கத்துக்கு வந்துள்ளன. அதுவும் நகரங்களில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த வார்ட்ரோப்களே நவீனமானதாகத் தான் இருக்கிறது. இப்போது இவற்றிலும் ஸ்மார்ட் சங்கதிகள் வந்துசேர்ந்துள்ளன.
பொதுவாக, இத்தகைய வார்ட்ரோப் அலமாரிகளில் துணிமணிகள் தாம் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும். உடைகள் மீது நமக்குள்ள பெரும் மோகம் காரணமாக அநேகத் துணிமணிகளை வாங்கி அடுக்கிவிடுகிறோம். எக்கச்சக்கமான உடைகள் நமது வார்ட்ரோபில் நிறைந்துவழியும். அவற்றை அடுக்கிவைத்து முறையாகப் பராமரிப்பவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவே.
பலர் கைக்கு எட்டும் உடையை எடுத்து உடுத்துவார்கள். அலமாரியின் அடியிலோ உள் பகுதியிலோ அகப்பட்ட உடைகள் எப்போதாவது தான் எடுக்கப்படும்.. இப்படியான பழக்கத்தால் பல உடைகளை மீண்டும் மீண்டும் அணிவோம். அதே நேரத்தில் பல உடைகள் அப்படியே வார்ட்ரோபில் தங்கிவிடும். அவற்றை எப்போதாவது தான் பயன்படுத்தியிருப்போம். இது ஒரு சிக்கல் தான். இதைச் சமாளிக்க அதிகப் பொறுமை தேவை. ஆனால், இத்தகைய சிக்கலை எளிதில் களைய உதவுகிறது இந்த ஸ்மார்ட் வார்ட்ரோப்.
எல்லாவகையான ஸ்மார்ட் சாதங்களைப் போலவே இந்த ஸ்மார்ட் வார்ட்ரோபும் வைபை போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஆகவே இதை நாம் நமது ஸ்மார்ட் போன் செயலி மூலம் இயக்கிக்கொள்ள முடியும். ஸ்மார்ட் வார்ட்ரோபில், அடுக்கிவைக்கப்பட்டுள்ள துணிமணிகளின் மொத்த விவரமும் நமது ஸ்மார்ட் போன் செயலிவழியே கணக்குக்கு வந்துவிடும்.. மேலும், இதிலுள்ள ஸ்மார்ட் திரையிலும் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்படும்.
இதனால் என்ன பயன் என்றால் நாம் ஓர் உடையை எத்தனை முறை அணிந்தோம் அடிக்கடி எந்த உடையை அணிகிறோம் போன்ற பல தகவல்களை இவை நமக்கு அளிக்கும். இந்த தகவல்களால் ஒரே உடையை மறுபடியும் மறுபடியும் அணிவதையும் ஒரு உடையை அணியாமலே அப்படியே விட்டுவைப்பதையும் இது தடுத்துவிடுகிறது. ஒரு சீரான சுழற்சி முறையில் எல்லா உடைகளையும் சராசரியாகப் பயன்படுத்துவதால் உடைகளின் பராமரிப்பும் எளிதாகும்.
இது மாத்திரமல்லாமல், ஒரு நாளின் முக்கியத்துவத்துக்கு ஏற்ற வகையில் எந்த உடையை அணியலாம் என்ற ஆலோசனையும்கூட நமக்குக் கிடைக்குமாம். அதாவது ஏதேனும் விழாக்கள் என்றால் அதற்கு உகந்த உடை எது என்பதையும், அதே போல் அந்த நாளின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற உடையையும் அது பரிந்துரைக்குமாம்.
உதாரணமாக ஒரு திருமண நாளுக்கு ஏற்ற உடை எது என்பதையும் அதேபோல் மழை நாளில் எந்த உடையை அணியலாம் வெயில் நாளில் எந்த உடையை அணியலாம் என்பதையும் இது நமக்கு அதன் பாஷையில் சொல்லும். இத்துடன் ஓர் உடை மிகப் பழையதாகிவிட்டால் அதைக்கூட உணர்த்திவிடுமாம். ஆகவே அந்த உடையை யாருக்காவது அளிப்பது குறித்தோ அல்லது அதைக் கழித்துக்கட்டுவது குறித்தோ நீங்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம்.
புதிய உடை ஒன்று வாங்கும்போது அதன் விவரத்தை இந்த ஸ்மார்ட் வார்ட்ரோபில் உள்ளீடு செய்துவிட்டால் போதும். அதன் பின்னர் அது தொடர்பான விவரங்களை அது தானாகப் பராமரித்துக்கொள்ளும். இந்த விவரங்களின் அடிப்படையில் தான் ஸ்மார்ட் வார்ட்ரோப் பரிந்துரைகளையும் அளிக்கும்.
இந்த ஸ்மார்ட் வார்ட்ரோப் மொத்தம் நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. முதலில் நமது ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட், இதில் தான் நாம் ஸ்மார்ட் வார்ட்ரோபுக்கான செயலியைத் தரவிறக்கி நாம் பயன்படுத்த வேண்டும். அடுத்த முக்கியமான பகுதி என்றால் ஆர்எஃப்ஐடி ரீடர், ரேடியோ ஃப்ரிகுவன்ஸி ஐடெண்டிபிகேஷன் தொழில்நுட்பம் கொண்ட ரீடர். இது. நமது உடைகள் குறித்த விவரங்களை உள்ளீடு செய்ய இது தான் உதவும்.
புதிய உடைகளில் இருக்கும் பார்கோடு போன்ற சங்கேதக் குறியீடுகளை உள்வாங்கும் இந்த ரீடர் அதன் வழியே உடைகள் குறித்த விவரத்தைப் பதிந்துகொள்ளும். உடைகளின் நிறம் வகை போன்றவற்றை நாம் டைப்செய்து உதவ வேண்டும். உடைகளின் டேக்கைப் படிக்கும் இந்த ரீடம் மேலதிகத் தகவல்களை நம்மிடமிருந்து மொபைல் செயலி வழியே பெற்றுக்கொள்ளும்.
கேட்க எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், இதெல்லாம் நம்முடைய பட்ஜெட்டுக்கு உகந்ததா என்று கேட்டால் இப்போதைக்கு இல்லை என்பதுதான் பதில். ஏனெனில், குறைந்தது இரண்டு லட்ச ரூபாயாவது செலவழித்தால் தான் இத்தகைய ஸ்மார்ட் வார்ட்ரோப்களை வாங்க முடியும்.
ஆனால். உங்களால் பணம் தாராளமாகச் செலவழிக்க முடியும் என்றால் தாராளமாக ஸ்மார்ட் வார்ட்ரோபை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம். எவ்வளவு நாளுக்குத்தான் தூசி படிந்த பழைய பீரோக்களையே பயன்படுத்திக்கொண்டிருக்க முடியும். நவீனத்தை நோக்கி நகர்வது நல்லதொரு மாற்றம்தானே?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago