வ
ண்ணமயமான சுவரொட்டிகளாலும் கார்ட்டூன் கதாபாத்திரங்களின் போஸ்டர்களாலும் வடிவமைக்கப்பட்டு வந்த குழந்தைகளின் அறைகள் தற்போது புதிய பரிமாணங்களில் வடிவமைக்கப்படுகின்றன. குழந்தைகளின் அறையில் தரையில் தொடங்கி, சுவர்கள், அலமாரிகள், கட்டில், கூரை என எல்லா அம்சங்களையும் படைப்பாற்றலுடன் வடிவமைக்க முடியும். அதற்கான ஆலோசனைகள்...
வானவில் வண்ணங்கள்
குழந்தைகள் வண்ணங்களை விரும்புபவர்கள். அவர்களது அறையை வண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைப்பதுதான் சரியாக இருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் சுவர்கள், பச்சை, மஞ்சள் நிற நாற்காலிகள், ஆரஞ்சு நிற மெத்தைகள் என வண்ணங்கள் அனைத்தையும் இணைத்து உங்கள் குழந்தையின் அறையை வடிவமைப்பது சிறந்ததாக இருக்கும்.
சதுரங்கத்தின் வண்ணங்கள்
24chgow_kids room
குழந்தைகள் அறையைச் சதுரங்கத்தின் வண்ணங்களில் இருக்கும் கறுப்பு, வெள்ளைக் கட்டங்களைப் போலவும் வடிவமைக்கலாம். கறுப்பு வெள்ளைக் கோடுகளாலான சுவர்கள், ‘கிராஃபிக்’ கட்டில், எண் அலங்காரம், குஷன் இருக்கைகள் என அறையின் முக்கியமான அம்சங்களைக் கறுப்பு வெள்ளையில் வடிவமைக்கலாம். முழுவதுமாகக் கறுப்பு, வெள்ளையில் இல்லாமல் சில வண்ணங்களையும் சேர்க்கலாம்.
பொம்மைகள்
பொம்மைகளை மிதக்கும் அலமாரிகளில் அடுக்கி வைக்கலாம். இது குழந்தையின் அறையில் பொம்மைகள் காட்சி வைக்கப்பட்டிருப்பதைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும். பொம்மை கார்கள், விலங்குகள் என உங்கள் குழந்தைக்குப் பிடித்த பொம்மைகளை வைத்து இந்தக் காட்சியை அமைக்கலாம்
சுவரொட்டிகள்
ஜியோமெட்ரிக் சுவரொட்டிகளாலும் குழந்தையின் அறையை வடிவமைக்கலாம். இது அறைக்குள் நவீனத்தைக் கொண்டுவரும். உங்கள் குழந்தைகளுக்கு இந்தச் சுவரொட்டிகள் புத்துணர்ச்சியை அளிக்கும். சுவரொட்டிகளுக்குப் பதிலாக வால் டிகேலையும் (Wall Decal) பயன்படுத்தலாம்.
பெட்டிகள்
குழந்தைகளின் பொருட்களை அடுக்கிவைப்பது சவாலான விஷயம். சின்ன சின்ன விளையாட்டுப் பொருட்களை மூடியுடன் இருக்கும் பெட்டிகளில் போட்டு குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் அடுக்கி வைக்கலாம். ‘வால் ஸ்டராப்ஸ்’ எனப்படும் சுவர் பட்டைகளையும் குழந்தைகளின் பொருட்களை அடுக்கிவைக்கப் பயன்படுத்தலாம்.
விளையாட்டுகள்
புதிர் விளையாட்டுகளின் துண்டுகளைத் தொலைத்துவிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்தப் புதிர்த் துண்டுகள் தொலையாமல் இருக்க ஒரு பெட்டியில் புதிர்த் துண்டுகளைப் போட்டு வைக்கும்படி குழந்தைகளிடம் சொல்லலாம். அவர்களிடம் அந்தப் பெட்டியைக் கொடுத்துவிடுவதால் கூடுமானவரை தொலையாமல் பார்த்துக்கொள்வார்கள்.
நவீன இருக்கைகள்
24chgow_kids room3
குழந்தைகளின் அறைகளுக்கு அதிகம் உயரமில்லாத இருக்கைகளைப் பயன்படுத்தலாம். நவீன வடிமைப்பில் கிடைக்கும் ‘கவுச்’ வகை இருக்கைகள், ‘டோகோ’ நாற்காலிகள் போன்றவை குழந்தைகள் அறைக்கு ஏற்றதாக இருக்கும்.
ஊஞ்சல்
குழந்தைகள் அறைக்குள் தூங்கும் நாற்காலிகள் அமைப்பில் இருக்கும் ஊஞ்சல்களை அமைப்பது நல்லது. இந்த ஊஞ்சலை உங்கள் குழந்தையின் ரசனைக்குப் பொருந்தும்படி வடிவமைப்பது முக்கியம்.
புத்தக அலமாரிகள்
குழந்தைகளின் புத்தக அலமாரிகளை அடுக்கி வைப்பதில் சிறிது அக்கறை செலுத்தினால் அது அறைக்குக் கூடுதல் அழகைக் கொடுக்கும். குறிப்பாக, குழந்தைகளின் படக்கதை புத்தகங்களை அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தும் இடங்களில் அலமாரிகளில் அடுக்கி வைக்கலாம். இந்தப் புத்தகங்களைச் சுழலும் அலமாரிகளில் அடுக்கிவைப்பது பொருத்தமாக இருக்கும்.
சாக்கில் எழுதலாம்
குழந்தைகளின் அறையில் பொருட்களின் பெயர்களை எழுதுவதற்கு ‘சாக்’ பெயிண்டைப் பயன்படுத்தலாம். இந்த சாக் பெயிண்டில் எழுதும் பொறுப்பைக் குழந்தைகளிடமே ஒப்படைக்கலாம். அவர்கள் அதை உற்சாகமாகச் செய்வார்கள்.
விளையாடும் இடம்
குழந்தைகள் புதையல் வேட்டை, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடும்போது ஒளிந்துகொள்வதற்காக அறையில் சில இடங்களைப் படைப்பாற்றலுடன் வடிமைப்பது பொருத்தமாக இருக்கும். அறையின் மூலையில் இதற்காகத் தனியாக ஒரு கதவிருக்கும் அலமாரியைப் புதுமையான முறையில் வடிவமைக்கலாம்.
ஏணிகள்
குழந்தைகளுக்கு ஏறி இறங்கி விளையாடுவது விருப்பமான பொழுதுபோக்கு. அவர்களின் அறையின் படுக்கைகளை இரண்டு அடுக்கில் ஏணி இருப்பதைப் போன்று அமைக்கலாம். அப்படியில்லாவிடின் ஏணி மீதேறி அறைக்குச் செல்வதைப் போன்ற ஒரு வடிவமைப்பை அமைக்கலாம். இந்த வடிவமைப்பு குழந்தைகளுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago