வீ
ட்டை அழகாகக் கட்டிவிட்டால் மட்டும் போதுமா வீட்டை அழகாக்க வேண்டாமா? நாம் வண்ண வண்ண ஆடைகள், முகப் பொலிவு க்ரீம் பூசி அழகாக இருக்கிறோம் இல்லையா, வீட்டையும் அதுபோல் அழகாக்க வேண்டும். வீட்டை அழகாகக் காட்டுவதில் அலங்காரங்களுக்கு முக்கிய இடம் உண்டு. சிறிய வீட்டைக்கூட நேர்த்தியான அலங்காரம் மூலம் அழகாகக் காட்டலாம். அதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். அவ்வளவுதான்! வீட்டு அலங்காரத்தில் எந்தெந்த விஷயங்களில் கவனம் தேவை என்பதைப் பார்ப்போம்.
பெரிய அலங்காரப் பொருட்கள் வாங்குவதைவிட வீட்டின் இடவசதிக்கு ஏற்ப எளிய அலங்காரப் பொருட்களைத் தேர்வு செய்வதே நல்லது. எந்த வண்ணத்தைச் சுவருக்குப் பூசுவது என்பதில் கவனம் வேண்டும். வீட்டுக்குள் பூசப்படும் வண்ணம் நன்றாக இருந்தாலே வீட்டுக்கு ஓரளவு கலைநயம் வந்துவிடும். எந்த வண்ணத்தைச் சுவருக்குப் பூசுவது என்பதில் கவனம் வேண்டும். வீட்டுக்குள் பூசப்படும் வண்ணம் நன்றாக இருந்தாலே வீட்டுக்கு ஓரளவு கலைநயம் வந்துவிடும்.
சுவர்களில் தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்களை ஒட்டவைத்து அழகு சேர்க்கலாம். அழகான குஷன்களை வீட்டில் பயன்படுத்தலாம். இவை வீட்டுக்கு ஆடம்பர அந்தஸ்தைத் தரும். அறையின் சுவர் வண்ணங்களுக்கு ஏற்ப குஷன்களைத் தேர்வு இருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும்.
பொருட்கள் வைக்கப்படும் இடத்தைப் பொறுத்தே அழகு வெளிப்படும். எனவே, எந்த இடத்தில் எந்தப் பொருளை வைக்கலாம் என்பதை யோசித்து வைக்கவும். வீட்டுச் சுவரில் குழந்தைகள் படம் மாட்டினால் வீடு அழகாக இருக்கும். பழைய புகைப்படங்கள், இயற்கைக் காட்சிப் படங்கள், பசுமைச் சூழல் புகைப்படங்கள் அறையை அழகாகக் காட்டும்.
அலங்காரச் செடிகளை வீட்டுக்குள்ளும் வைத்து அலங்கரிக்கலாம். பூக்கள் மலரும் செடியாக இருந்தால் அறை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வீட்டை அழகாகக் காட்டுவதில் திரைச்சீலையும் முக்கியம். அறையின் நிறம், அங்குள்ள பொருட்களுக்கு ஏற்ப ஜன்னல், கதவுகளில் தொங்கவிடப்படும் திரைச்சீலைகள் அமைய வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago