த
னக்கென சொந்தமான ஓர் இடம் இருக்க வேண்டும் என்பதற்காக சிறுகச் சிறுகச் சேர்ந்து நீங்கள் மனை வாங்கியிருக்கலாம். முதலீடு நோக்கத்திலும் மனைகளை வாங்கிக் குவித்திருக்கலாம். எந்த நோக்கத்துக்காகவ என்றாலும் மனை வாங்குவது பெரிய விஷயமில்லை. பொதுவாக மனைகளை அங்கீகரிக்க நிறைய வழிகாட்டு நிபந்தனைகள் உள்ளன. அவற்றை மனை வாங்குபவர்களும் தெரிந்துகொள்வது நல்லது.
யாருக்கெல்லாம் அதிகாரம்?
பொதுவாக கிராமப் பகுதிகளில்தான் மனைகள் அதிகளவில் விற்பனையாகின்றன. பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற மனை என்று கூறினால் உஷாராகிவிட வேண்டும். உண்மையில் மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்க கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் இல்லை. உள்ளூர் திட்டக் குழு மற்றும் டிடிசிபி-தான் லேஅவுட்களை அங்கீகரிக்கின்றன. 5 ஏக்கர் பரப்பளவுவரை உள்ளூர் திட்டக்குழுவின் அதிகாரத்துக்குள் வரும். ஐந்து ஏக்கருக்கு மேற்பட்ட லே அவுட்டை அங்கீகரிக்கும் அதிகாரம் டிடிசிபியின் வரம்புக்குள்ளும் வருகிறது.
நிபந்தனைகள்
மனை லேஅவுட்டுக்கு என்னென்ன நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு அங்கீகாரம் அளிக்கிறது எனத் தெரியுமா?.
குறிப்பிட்ட நிலம் புறம்போக்கு இல்லை என்று தடையில்லா சான்று பெறுதல் அவசியம். நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அரசு அறிவிக்கை எண் 4(1)-ன் படியும், நிலச் சீர்திருத்த சட்டம் (1961), நில உச்ச வரம்பு சட்டம் (1978)-ன் கீழ் வராமலும் இருக்கவேண்டும். பருவ மழைக் காலத்தில் மனைப் பகுதியில் வெள்ளம் வந்திருக்கக் கூடாது.
தாசில்தாரிடமிருந்து நில அளவை புத்தகம்/ நகர சர்வே வரைபடம்; பட்டா/ சிட்டா/ நகர சர்வே நில ஆவணங்கள்; கிராம வரைபட நகல்; நிலம் அமைந்திருக்கும் பகுதி வழியாகச் செல்லும் நீர்த்தடம் பற்றிய விவரங்களையெல்லாம் அரசு ஆராயும்.
2,500 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவுள்ள நிலத்துக்கு, திறந்த வெளி ஒதுக்கீடுக்காக 10 சதவீதத்துக்கு மேல் இடம் ஒதுக்க வேண்டும். அதை வரைபடத்திலேயே காட்ட வேண்டியது அவசியம்.
குறிப்பிட்ட நிலத்தின் வழியாக மின்சாரம்/ தொலைபேசி இணைப்பு தடம் இருக்குமானால் அதை மாற்றுவதற்கான அங்கீகாரத்துக்கு 20 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தீர்வையை (ஸ்டாம்ப் பேப்பர்)அளிப்பது முக்கியம்.
என்.ஓ.சி. தேவை
வீட்டு மனை வாங்கும்போது அருகில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தே வாங்க வேண்டும். ஏனென்றால், மனையோ நிலமோ குறிப்பிட்ட இடங்களுக்கு அருகில் இருந்தால், அதற்கெல்லாம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
1. குளமோ, ஏரியோ 15 மீட்டர் தூரத்தில் இருந்தால், பொதுப் பணித் துறை அல்லது தொடர்புடைய துறைகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
2. ரயில்வே இருப்புப் பாதைக்கு 30 மீட்டர் அருகில் இருந்தால், ரயில்வே துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
3. குப்பைக் கிடங்கு அருகில் இருந்தால், உள்ளாட்சித் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
4. மயானப் பூமி/ சுடுகாடுக்கு 90 மீட்டருக்கு அருகில் இருந்தால், சுகாதாரத் துறை அதிகாரியிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும்.
5. கல்குவாரிக்கு 300 மீட்டர் தூரத்துக்குள் இருந்தால், சுரங்கத்துறையிடம் கட்டாயம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும்.
6. விமான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் மனை இருந்தால் விமான நிலைய ஆணையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.
இவை மட்டும் போதாது. 30 ஆண்டுகளுக்கு வில்லங்கமில்லாச் சான்றிதழும் அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையும் தேவைப்படும்.
மலைப் பிரதேச விதிமுறை
கிராம, நகரப் பகுதிகளில் மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற நிபந்தனைகள் இருப்பதைபோல மலைப் பிரதேசங்களில் சிறப்பு நிபந்தனைகள் உள்ளன. மலை பகுதிகளில் மனைப் பிரிவு அமைக்க வேளாண்மை பொறியியல் துறையிலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். மாவட்ட வன அதிகாரியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதும் அவசியம். நிலவியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரிடமிருந்து நிலவியல் தொழில்நுட்ப அறிக்கை வாங்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
30 mins ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago