அறையின் வடிவமைப்பு ரகசியங்கள்

By கனி

உங்கள் வீட்டு அறையை எப்படி வேண்டுமானாலும் வடிவமைக்கலாம். அதற்கு எந்த விதிமுறையும் இல்லை. உங்கள் ரசனைதான் அறை அலங்காரத்துக்கான அளவுகோல். அந்த ரசனையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ரசனையைக் காலத்துக்கு ஏற்றமாதிரி மாற்றிக்கொள்ளலாம். ஆனால், உங்கள் அறையின் தோற்றத்தை முழுமைப்படுத்தும் சில வடிவமைப்பு அம்சங்கள் இருக்கின்றன. அந்த அம்சங்களில் கவனம் செலுத்தினால், அறையின் தோற்றத்தை முழுமையானதாக மாற்றிவிடலாம்.

கலை வடிவமைப்பு

கலை ரசனையை வெளிப்படுத்தும் பொருட்கள் இல்லாமல் உங்களால் ஓர் அறையை அழகாக்கிவிட முடியாது. உங்கள் அறையில் வெளிப்படும் கலைத் தன்மையில்தான் உங்களுடைய காட்சி அழகியல் வெளிப்படுகிறது. உங்களுக்குப் பிடித்த, உங்கள் ரசனைக்கு ஒத்துப்போகும் கலைப் பொருட்களை வைத்து அறையை அலங்கரியுங்கள். இந்தக் கலைப் பொருட்கள் உங்கள் அறைக்குத் தனித்தன்மையான அழகைக் கொடுக்கும்.

வெளிச்சம்

ஒரு நல்ல அறைக்கும் சிறந்த அறைக்குமான வித்தியாசத்தை விதவிதமான விளக்குகளின் வெளிச்சம்தான் ஏற்படுத்துகிறது. ஒரு சின்ன அறைக்குக்கூட மூன்று விதமான விளக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. இந்த அம்சத்தைப் பெரும்பாலும் நாம் மறந்துவிடுவோம். ஆனால், இந்த விளக்குகளின் வெளிச்சமும் அறை அலங்காரத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்குவகிக்கின்றன.

திரைச்சீலைகள்

திரைச்சீலைகளை வீட்டின் தனிமையை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் பயன்படுத்திய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது திரைச்சீலைகளும் அறையின் அழகைத் தீர்மானிக்கின்றன. உங்கள் அறையின் மற்ற அம்சங்களோடு ஒத்துப்போகுமாறு திரைச்சீலைகளை வாங்க வேண்டும். கோடைக்காலம், குளிர் காலம் என இரண்டுக்கும் ஏற்ற மாதிரி இப்போது தனித்தனியாகத் திரைச்சீலைகள் கிடைக்கின்றன. உங்கள் அறைக்கு மென்மையான தோற்றத்தை அளிக்கக்கூடிய வலிமை திரைச்சீலைகளுக்கு இருக்கின்றன. இப்போது சுருள், வளையங்கள் போன்ற பல வித்தியாசமான தையல் அமைப்பில் வரும் திரைச்சீலைகளை வாங்கலாம்.

புதுமை

ஓர் அறையில் வெளிச்சம், மென்மை இருந்தால் மட்டும் போதாது. சில புதுமையான டெக்ஸ்ச்சர்களைத் தரும் குஷன்களும் தரைவிரிப்புகளும் சுவர் அலங்காரங்களும் செடிகளும் தேவை. அப்போதுதான் அந்த அறைக்கு அழகான தோற்றம் கிடைக்கிறது.

தனித்துவமான ரசனை

அறை வீட்டின் அங்கமாக இருக்கவேண்டுமானால், உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் பொருட்கள் அங்கு நிச்சயமாக இருக்க வேண்டும். அது உங்களுடைய இனிமையான பயணத்தின் நினைவுகளை வெளிப்படுத்தும் பொருட்களாகவோ ஒளிப்படங்களாகவோ இருக்கலாம். ஆனால், உங்கள் அறையில் உங்களுடைய சுவடுகள் ஏதாவது ஒரு விதத்தில் இருக்க வேண்டியது அவசியம். இந்த ஐந்து அம்சங்களையும் சரியாகப் பயன்படுத்தினால், உங்கள் அறையின் தோற்றம் முழுமை அடைந்துவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்