ஒ
ரு கோயிலுக்குக் கருவறை எப்படியோ ஒரு மருத்துவமனைக்கு ஆபரேஷன் தியேட்டரும் அப்படித்தான். அது மருத்துவமனையின் இதயம். வீடுகளைப் போலவோ மருத்துவமனையின் பிற பகுதிகளைப் போலவே இதைக் கட்டிவிட முடியாது. சுவர்களையும் தாண்டிய பல விஷயங்கள் இதன் கட்டுமானத்தில் உள்ளன. மிகவும் மெனக்கெட்டுத் திட்டமிட வேண்டிய பகுதி இது.
ஆபரேஷன் தியேட்டர் எதிலாவது ஜன்னல்களைப் பார்த்திருக்கிறீர்களா? இருக்காது. ஆனால், வேறு பல பகுதிகள் அதோடு இணைந்திருக்க வேண்டும். மருத்துவ ஊழியர்கள் உடைகளை மாற்றுவதற்கான அறை, அறுவை சிகிச்சை முடிந்தவுடன் நோயாளியைக் கண்காணிப்பதற்கான பகுதி, ஸ்டெரைல் (கிருமிகள் நீக்கப்பட்ட) சாதனங்கள் கொண்ட பகுதி.
மருத்துவமனையின் மீதிப் பகுதியிலிருந்து கொஞ்சம் தனிமைப்பட்டிருக்க வேண்டும். காரணம் மருத்துவமனை என்பது பலவித ஆபத்தான கிருமிகள் இருக்கக்கூடிய இடம். இந்தக் கிருமிகள் அறுவை சிகிச்சையின் அறைக்குப் பரவக் கூடாது. அதுவும் உடலின் பகுதிகளை அறுத்துச் செய்யப்படும் அறுவை சிகிச்சையின்போது கிருமிகள் வெகு வேகமாகவும், ஆழமாகவும் நோயாளிகளின் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு உண்டு.
பெரும்பாலும் பெரிய மருத்துவமனைகளில் முதல் தளத்தில் அறுவை சிகிச்சை அறை இருக்கும். இதன் அருகிலேயே மின் தூக்கி (Lift) இருக்கும்.
அறையின் தரைப் பகுதி வழுக்காததாக இருக்க வேண்டும்.
போதிய மின் இணைப்புகள் இருக்க வேண்டும். எக்ஸ்ரேவைக் கணிக்கும் பகுதி இருக்க வேண்டும்.
ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
தண்ணீர் சேவையும் தொடர்ந்து கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
தியேட்டரின் வெப்ப அளவு 18 டிகிரியிலிருந்து 22 டிகிரி சென்டிகிரேட் அளவில் இருக்கும். அறை நிச்சயம் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருக்கும்.
அறுவை சிகிச்சை அறையில் சுவர்களுக்குக் கண்களை உறுத்தாதவகையில் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். லாமினேட் செய்யப்பட்ட பாலியஸ்டர் பெயிண்ட் பூசப்பட வேண்டும். அப்போதுதான் விரிசல் விடாது.
விளக்குகள் மிக முக்கியமானவை. சில சமயம் அறுவை சிகிச்சையின்போது நோயாளிகளின் தோலின் நிறம் மற்றும் திசுக்களின் நிறம் போன்றவை குறித்த கணிப்பு மிக முக்கியம். தவிர மேலே உள்ள ஒளி விளக்குகள் சிறிதும் நிழலை ஏற்படுத்திவிடக் கூடாது.
காற்றோட்டம் என்பது ஆபரேஷன் அறையிலிருந்து அதன் நுழைவாயில் நோக்கியதாக இருக்க வேண்டும். வெளியிலிருந்து உள்ளே வரும் காற்றில் கிருமிகள் இருக்கலாம்.
அறுவை சிகிச்சைக்கான மேஜை அறையின் மையத்தில் இருக்கும். பல்வேறு திசைகளில் இதை உயர்த்தவோ தாழ்த்தவோ முடிய வேண்டும். பல அறுவை சிகிச்சைகளுக்கு மேஜையின் கோணம் மிக முக்கியம்.
மயக்க மருந்துக் கருவி நோயாளியின் தலைப் பகுதியில் இருக்கும். இதிலிருந்து பலவித டியூப்கள் (நோயாளியுடன் இணைப்பதற்காக) காணப்படும். அறுவை சிகிச்சைக் கருவிகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டு ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மேஜையின்மீது வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். நோயாளியின் ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவியும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவியும் நிச்சயம் இருக்கும். பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி நோயாளியின் விரலோடு ஒரு எலாஸ்டிக் பேண்டால் கட்டப்பட்டிருக்கும். நோயாளியின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை இது தொடர்ந்து அளவெடுக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago