இ
ரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பெரும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது. அதன் பிறகு டிசம்பர் மாதம் வந்தாலே அந்த வெள்லப் பயம் இன்றும் சென்னை வாசிகளுக்கு வருகிறது. சென்னை மட்டுமல்லாது சமீபத்தில் பெங்களூரூ, மும்பை ஆகிய நகரஙளும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது. இந்திய நகரங்களைவிட ஜப்பானிய நகரங்கள் அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகின்றன. குறிப்பாக வடக்கு டோக்கியாவில் மழை வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகிவருகிறது.
இந்தப் பேரிடரிலிருந்துத் தப்பிப்பதற்காக புதிய கட்டமப்பை ஜப்பான் உருவாக்கியுள்ளது. அதாவது ஒரு பிரம்மாண்டமான சுரங்க நீர்த்தேக்கத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை மூழ்கும் அளவுக்கான நீர்த்தேக்கம் இது. வடக்கு டோக்கியோவில் வெள்ளம் தேங்கும் நிலப்பகுதிகளிலிருந்து நீரைத் திருப்பி சுரங்க வழிகள் வழியாக இந்த நீர்த்தேக்கத்துக்கு வெள்ள நீர் வந்துவிடும். இரண்டு பில்லியன் டாலர் செலவில் 2006-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகள், பெருநகரங்கள் எப்படி பருவநிலை மாற்றங்களுக்கும், அதீதப் பேரிடர்களுக்கும் தயாராக வேண்டுமென்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
டோக்கியோ நகரத்தில் 2020-ம் ஆண்புதடில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்படவுள்ள நிலையில், ஏற்கனவே புயல்களால் அதிகம் சேதாரத்தைச் சந்தித்த நிலையில் இந்த முன்னேற்பாடுகளை ஜப்பானிய அரசு செய்துள்ளது.
ஜப்பான் முழுக்க கடந்த முப்பது ஆண்டுகளில், மூன்று அங்குலங்களுக்கும் மேலான மழைப்பொழிவு நேர்வுகளின் விகிதம் 70 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே அதிக மழைப்பொழிவு கொண்டதும், மழைக்கென டஜன் கணக்கான வார்த்தைகளையும் கொண்டிருக்கும் ஜப்பான் புவி வெப்பமடைதலால் மேலும் மழை, வெள்ளப் பேரிடர்களுக்கு கூடுதல் இலக்காகியுள்ளது.
டோக்கியோ மாநகரப் பிராந்தியத்தின் அருகேயுள்ள சமுத்திரங்கள் உயர்ந்து வருவதன் காரணமாக 38 மில்லியன் மக்கள் புயல்களால் பாதிக்கப்படும் நிலைமையுள்ளது. பல்லாண்டுகளாக இந்நகரத்தில் பம்ப் செய்யப்படும் நிலத்தடி நீரால் நகரத்தின் பெரும்பகுதி நிலங்கள் 15 அடி தாழ்ந்துள்ளன. பூதம் போன்ற கடலுக்குக் கீழே டோக்கியோவின் பெரும்பகுதியும் அமர்ந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் டோக்கியோவும் அண்டை துறைமுக நகரமான யோஹகாமாவும் அபாயகரமான நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பான் செய்துள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் இவை.
ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுள்ள ஐந்து நீர்த்தேக்கங்கள் வெவ்வேறு திசைகளிலிருந்து சுரங்க வழிகள் இணைய 60 அடி தூண்களுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளன. 250 அடி ஆழமிருக்கும் நீர்த்தேக்கம் வடக்கு டோக்கியோவில் உள்ள நான்கு நதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை சமாளிக்க வல்லவை. அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் நம் நாட்டுக்கு ஜப்பானின் இந்த நடவடிக்கை ஒரு பாடம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago