அக்கம் பக்கம்: டக்கரு திருவிழா

By யுகன்

ளிப்படக் கலைஞரான சௌமியாவின் நிழல் ஸ்டூடியோஸும் மெட்ராஸ் ஃபோட்டோ பிளாக்கர்ஸும் இணைந்து சமீபத்தில் ‘டக்கரு திருவிழா’வை நடத்தினர். வெள்ளம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் போன்றவற்றில் சமூக அக்கறையோடு செயலாற்றிய ஒன்பது பேருக்கு ‘லோக்கல் லைட்ஸ்’ விருது கொடுத்து அடையாளம் காட்டியது இந்த விழா.

அதிகம் பேசப்படாத சிலம்பக் கலைஞர் அப்துல் ரகுமான்; இந்திய பொறியியல் மாணவர்களுக்கு எம்பரி ரிட்டில், யூனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் ஃபுளோரிடா போன்ற பல்கலைக்கழகங்களின் மூலம் பயிற்சிப் பட்டறைகளில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தந்த ஸ்ரீமதி கேசன்; குடிசைப் பகுதி குழந்தைகளுக்குப் பரதநாட்டியத்தைக் கற்றுக் கொடுக்கும் திருநங்கை பொன்னி; ரெயின் டிராப்ஸ் அமைப்பின் மூலமாகப் பல சமூகப் பணிகளைச் செய்துவரும் அரவிந்த் ஜெயபால்; ஒரு பெண்ணுக்குப் பெண் மீதான ஈர்ப்பும் இயல்புதான் என்பதைப் பட்டவர்த்தனமாகத் தெரிவிக்கும் ஆவணப்படத்தை இயக்கிய மாலினி ஜீவரத்தினம்; விவசாயத்தை முன்னிறுத்திக் குறும்படங்களை இயக்கிவரும் எட்டாம் வகுப்பு மாணவர் சூரியநாராயணன் - இவர்கள் அனைவரும் இந்த விழாவில் பெருமைப்படுத்தப்பட்டனர்.

IMG_5646 copy செளமியா

“சென்னையோட பத்து வருஷ வாழ்க்கை நிறையக் கத்துக் கொடுத்திருக்கு. இதுவரை அதிகம் பேசப்படாத மனிதர்களுடன் பயணிப்பது மகிழ்ச்சி. வெவ்வேறு மொழி பேசும் பல ஊரைச் சேர்ந்த எல்லாரும் சங்கமம் ஆகிற இடம் இது. ‘அண்ணே பொன்னியம்மன் கோயில் எங்க இருக்கு?’ன்னு கேட்டா, எவ்ளோ வேலையா இருந்தாலும் ஒரு நிமிஷம் நின்னு பதில் சொல்லிட்டுப் போவாங்க. இந்த அக்கறைதான் சென்னை.

சமூகம் கட்டமைத்த ஆண் பால் பெண் பாலைத் தாண்டி, அன்பால வாழுற சில உறவுகளைப் பத்தித் தொடர்ச்சியா பேசிட்டும் எழுதிட்டும் இருக்கேன். என்னோட ஒவ்வொரு வார்த்தைக்கும் நிறைய அன்பும் அதே நேரத்துல எதிர்ப்புகளும் வருது. அதனாலதானோ என்னவோ நான் இங்க இன்னும் சந்தோஷமா நின்னுட்டு இருக்கேன்.

நம்முடைய காதலைப் புனிதமாகவும், அடுத்தவங்க காதலை அருவருப்பாகவும் நினைக்கிறோம். யாவும் காதலே. பார்வைகள் மாறட்டும். காதல் சுதந்திரத்துக்காக ஓர் இனம் காத்துக் கிடக்கு. அது தன்பால் ஈர்ப்புள்ளவர்களின் இனம்” என்றார் நிகழ்ச்சியில் பேசிய ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்’ குறும்படத்தின் இயக்குநர் மாலினி ஜீவரத்னம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்