க
த்தியானா கிழிச்சதுல்ல
நோய் வெட்டும் சாமிதான்
ஏழைபாழை வாழவைப்பான்
கிழிஞ்ச வாழ்க்கை தைப்பான்
அணைச்சு நிப்பான்
எகிற அல்லுசில்லு எட்டி செதறணும்...
எகிற அல்லுசில்லு எட்டி செதறணும்...
அல்லு சில்லு செதறணும்டா!
- ‘தெனாலி’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா... டூ விட்ட மனசு பழம்விட்டு சேர்ந்தாச்சா..’ என்று மழலை மொழியில் கொஞ்சிய ஷரண்யா ஸ்ரீநிவாஸ், மெட்ராஸ் பாஷையில் மெர்சல் குரலில் நம்மை இந்தப் பாடலில் மிரட்டியிருக்கிறார்.
இரட்டைப் பரிசு
“பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸின் மகள் என்பதை முன்னிறுத்தி நான் வாய்ப்புகளைத் தேடவில்லை. அப்பாவுக்கும் இதில் எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. கல்லூரியில் படிக்கும்போதுதான் இசைத் துறையில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தோன்றியது. கே.எம். மியூஸிக் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே உடன் படித்த கல்யாண் என்பவரின் இசையில் ஒரு பாடலைப் பாடினேன். அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் வெளிவரவில்லை. அதற்காக நான் துவண்டுவிடவில்லை. கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை என இசையின் எல்லா வடிவங்களுடனும் என்னுடைய ஈடுபாட்டை அதிகரித்துக்கொண்டேன். இதற்குக் கைமேல் கிடைத்த பலனாகத்தான் தனுஷ் நடித்த ‘அம்பிகாபதி’ படத்தில் இரண்டு பாடல்களைப் பாடுவதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாய்ப்பளித்தார்” என்கிறார் ஷரண்யா.
அனுபவம்தான் பாட்டு
‘அம்பிகாபதி’ படத்தில் ஒலிக்கும் ‘கலாரசிகா’, ‘கனவே கனவே’போன்ற பாடல்களில் ஷரண்யாவின் குரல் வளத்தோடு சங்கீதத்தில் அவருக்கு இருக்கும் ஆழமான புரிதலையும் உணரலாம். ‘கங்காரு’ படத்தில் தன் தந்தை ஸ்ரீநிவாஸின் இசையிலேயே ஷரண்யா பாடியிருக்கிறார்.
“மெலடியான பாடல்கள்தான் பாடுவேன், வேகமான தாளக்கட்டுடன் கூடிய பாடலைத்தான் பாடுவேன் என்று எந்தத் தீர்மானத்தையும் நான் வைத்துக்கொள்வதில்லை” என்று சொல்லும் ஷரண்யா, ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு அனுபவம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பழைய பாடல்களின் ரசிகை
இளம் தலைமுறையைச் சேர்ந்த பல பாடகர்களுக்கு பழைய பாடல்களே பெரும்பாலும் அறிமுகமாகியிருக்காது. ஆனால் ஷரண்யாவின் ப்ளே லிஸ்ட்டில் ஏகப்பட்ட பழைய பாடல்கள் இருக்கின்றன. பெரும்பாலும் மேடை நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் விருப்பத்துக்கு இணங்க நிறைய பழைய பாடல்களைப் பாடுவார். ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘ஊரு சனம் தூங்கிடுச்சி’ இப்படி ஷரண்யா எப்போதும் முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பழைய பாடல்களின் பட்டியல் நீளமானது.
ஐ - பாட் தில்லானா
பரீட்சார்த்தமான முயற்சிகளை எல்லைகளைக் கடந்து செய்யத் துடிக்கும் ஒரு கட்டற்ற சுதந்திர இசைப் பாடகியும் ஷரண்யாவுக்குள் இருக்கிறார். இதை வெளிப்படுத்தும் விதமாகவே அவ்வப்போது சில தனிப் பாடல்களை சிங்கிள்ஸாக வெளியிட்டுவருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘கோழை’ என்னும் தனிப்பாட்டை அப்பாவின் இசையில் பாடியிருக்கிறார். துபாயில் ஐ - பாட் பயன்படுத்தி கர்னாடக இசை வாசிக்கும் மகேஷ் ராகவனுடன் சேர்ந்து சமீபத்தில் ஒரு சிங்கிள்ஸை வெளி இட்டிருக்கிறார். சுவாதி திருநாளின் தில்லானாவை நவீன இசையமைப்போடு பாடியிருக்கிறார் ஷரண்யா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
37 mins ago
சிறப்புப் பக்கம்
47 mins ago
சிறப்புப் பக்கம்
58 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago