சபரிமாலா... தற்போது தமிழகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு பெயர். குடும்பத்தலைவி, ஆசிரியை, பட்டிமன்ற நடுவர், சமூகப் போராளி எனப் பல அடையாளங்களைக்கொண்ட இவர், தற்போது ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தன் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.
திண்டிவனம் ஜக்காம்பேட்டைப் பகுதியில் வசிப்பவர் சபரிமாலா. இவருடைய தந்தை உடற்கல்வி ஆசிரியர், தாய் குடும்பத்தலைவி. சபரிமாலா, மதுரை ஆத்திகுளத்தில் பிறந்து திண்டுக்கல்லில் வளர்ந்தவர். இவருடைய கணவர் ஜெயகாந்தன், திண்டிவனம் அருகே மயிலம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றுகிறார்.
மாநிலத்துக்கு ஒரு பாடத்திட்டமும் கல்விக்கொள்கையும் இருக்கும் நாட்டில் மருத்துவப் படிப்பு நுழைவுக்கான தேர்வை மட்டும் எப்படிப் பொதுவானதாக்க முடியும் என்று இங்கே பலர் கேள்வியெழுப்பிக்கொண்டிருக்க, சபரிமாலாவோ களத்தில் இறங்கிவிட்டார். ‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவான கல்வி முறை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த 6-ம் தேதி அவர் தன் மகன் ஜெயசோழனுடன் தான் பணியாற்றும் வைரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவரை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து 7-ம் தேதி தன் ஆசிரியப் பணியைத் துறப்பதாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மதிவாணனிடம் கடிதம் கொடுத்தார். பின்னர் 8-ம் தேதி தன் வீட்டின் அருகே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். மாலை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி போராட்டத்தைக் கைவிட்டார்.
10chbri_sabarimala (2) சபரிமாலா“இது அமைதிகாக்க வேண்டிய நேரமல்ல. நாம் ஒவ்வொருவரும் ‘நீட்’டுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும். அதற்காக இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்களை ஒருங்கிணைக்க முடிவெடுத்துள்ளேன். இது தொடர்பாக ஆலோசனை செய்துவருகிறேன். என் மகனை என் வீட்டின் அருகே உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கவிருக்கிறேன். என் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஒற்றைக் குரலில் தொடங்கியிருக்கும் இந்தப் போராட்டம் நம் அனைவரின் உரத்த குரலாக மாற வேண்டும். இது தூய்மையான கல்விக்கான போராட்டமாக இருக்க வேண்டும். அனிதாவுக்கு நேர்ந்ததைப் போல இன்னொரு இழப்பு ஏற்படக் கூடாது என்பதே என் நோக்கம்.
என் ராஜினாமாவை அரசு ஏற்காவிட்டாலும் நான் பணிக்குப் போகமாட்டேன். இந்தக் கல்வி முறையை என்னால் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க முடியாது. இந்தப் போராட்டம் நாடகமாகிவிடக் கூடாது. நான் விளம்பரத்துக்காகச் செய்ததாக விமர்சனம் எழக் கூடாது. மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்களைத் தவிர யாரையும் நான் நம்பமாட்டேன்.
பெண்கள் தங்கள் குழந்தைகள் எதற்குப் படித்து, என்னவாகப்போகிறார்கள் என்பதை உணர வேண்டும். அவர்கள் குடும்பத்தைக் கடந்து நாட்டுப்பற்றோடு போராட வெளியேவர வேண்டும்” என்று சொல்லும் சபரிமாலாவின் ஒவ்வொரு சொல்லிலும் கோபமும் துடிப்பும் வெளிப்படுகின்றன.
அநீதிக்கு எதிராக அமைதிகாப்பதைவிடப் பயங்கரம் வேறெதுவும் இல்லை. அது, நம் வீட்டுக் கூரையில் தீ பற்றும்வரை வேடிக்கை பார்ப்பதற்குச் சமம். மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்துப்போடும் அரசின் முடிவை எதிர்த்துத் தன் ஆசிரியப் பணியைத் துறந்திருக்கிறார் சபரிமாலா. அவருடன் போராட்டத்தில் இணையும் குரல்களிலும்தான் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு அடங்கியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago