புதிய ராகங்கள்: மெல்லிசையின் அபிமானி!

By வா.ரவிக்குமார்

போட்டிகளில் வெல்பவர்களைவிட அதற்கான முயற்சியில் தங்களை மனப்பூர்வமாக ஈடுபடுத்திக்கொள்பவர்களுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் பிரியங்கா. விஜய் தொலைக்காட்சி நடத்திய சிறந்த குரல் தேடலுக்கான போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தேர்வானவர்களில் ஒருவர். போட்டியின் டைட்டிலை வெல்லாவிட்டாலும், எண்ணற்ற ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது பிரியங்காவின் ஒலிவடிவம். எட்டாவது படிக்கும்போது மேடையில் பாடத் தொடங்கிய பிரியங்கா, குறுகிய காலத்திலேயே பின்னணிப் பாடகியாக உயர்ந்திருக்கிறார்.

பல்லவி

பிரியங்காவின் அப்பா நல்லதம்பி, கீபோர்ட் வாசிப்பவர். அம்மா காஞ்சனா பாடகி. பிரியங்காவுக்குப் பாடுவது என்பது பேச்சைப் போல் மிக இயல்பாக சுடர்விட்டது. எட்டாவது படித்தபோது ஜூனியர் பிரிவில் நடந்த போட்டியிலேயே தனது திறமையை நிரூபிக்கத் தொடங்கினார்.

“சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் `அம்மாவும் பிள்ளைதான்’ பாடலை நான் பாடுவதைக் கேட்ட இயக்குநர் பாலா என்னை அழைத்து அவருக்குப் பிடித்த சில பாடல்களைப் பாடச் சொன்னார். அதன்பிறகு அவரது காரிலேயே அப்பா, அம்மாவுடன் நானும் சென்றேன். எங்கே போகிறோம், யாரைப் பார்க்கப் போகிறோம் எதுவும் தெரியாது. ஒரு ரிகார்டிங் ஸ்டூடியோவிலிருந்த யுவன் ஷங்கர் ராஜாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார் பாலா சார். மிரட்சியோடு இருந்த என்னிடம், ‘சும்மா ஒரு வாய்ஸ் டெஸ்டுக்காகத்தான்... பாடுங்கள்’ என்று உற்சாகத்தோடு என்னைப் பாடவைத்ததுதான் ‘அவன் இவன்’ படத்தில் வரும் ‘ஒரு மலையோரம்’ பாடல்.

அனு பல்லவி

பாட்டு எப்படி எனக்கு விருப்பமானதோ அப்படியேதான் படிப்பும். மருத்துவராக வேண்டும் என்பது என் லட்சியமாகவே இருந்தது. அதற்காகவே என்னை வருத்திக்கொண்டு படித்தேன். தற்போது செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். இறுதியாண்டு படித்துவருகிறேன்.

சரணம்

ஒரு நாள் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஸ்டூடியோவிலிருந்து போன் வந்தது. நிறையமுறை டிராக் பாடியிருக்கிறேன். இரவு 9 மணிக்கு ஒரு டிராக் பாடுவதற்குத் தயாராக இருக்கச் சொன்னார்கள். ஆனால் இது வழக்கமான டிராக் கிடையாது என்பது அங்கே போனதும்தான் தெரிந்தது. ஒரு பய பட்டாம்பூச்சி பறந்தது. ஸ்ரீதேவி மேடம் நடித்த ‘மாம்’ இந்திப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் வெளியானது. என்னிடம் மலையாளம் படத்துக்கான பாடலைத்தான் வாய்ஸ் டிராக்கில் பாடச் சொன்னார்கள். நானும் பாடிவிட்டு வந்தேன். ஏ.ஆர். ரஹ்மான் சார் வெளிநாட்டில் இருந்தது அப்போதுதான் தெரிந்தது. நான் பாடிய வாய்ஸ் டிராக்கை கேட்ட அவர், அதில் சில சில மாற்றங்களைச் சொன்னதோடு, “தமிழ், தெலுங்கு மொழியிலும் அந்தப் பாட்டை அவரையே பாடவைத்துவிடுங்கள்” என்ற நல்ல செய்தியை சொன்னதும் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். இந்தப் பாடலை ஆனந்த் அரவிந்தாக்ஷனுடன் சேர்ந்து பாடியிருப்பேன்” என்கிறார் பிரியங்கா.

`என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்துக்காக இஷான் தேவ் இசையில் பிரியங்கா பாடியிருக்கும் ‘அபிமானியே’ பாடல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் அபிமானம் பெற்ற பாடலாகப் பரவிவருகிறது. மீண்டும் யுவனின் இசையில் `பலூன்’ திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். தனி ஆல்பங்களிலும் பாடிவருகிறார். “பிரியங்காவுக்குப் பிடித்தது பாட்டா, படிப்பா?” என்றால், “இரண்டும்தான். நான் பாட்டுக்கும் அபிமானி. மருத்துவத்துக்கும் அபிமானி” என்றார் அவரது டிரேட்மார்க் புன்னகையுடன்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்