வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்: மின்னூல்களை எப்படி விற்கலாம்?

By காம்கேர் கே.புவனேஸ்வரி

நீங்கள் எழுத நினைக்கும் கதை, கவிதை, கட்டுரை எதுவாக இருந்தாலும் முதலில் அவற்றை மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற ஏதேனும் ஒரு எடிட்டர் சாஃப்ட்வேரில் தட்டச்சு செய்ய வேண்டும். ஆங்கிலம் தவிர்த்துப் பிற மொழிகளுக்கு யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்ய வேண்டும். யூனிகோட் எழுத்துரு என்பது இன்டர்நெட், மொபைல், ஐபேட், டேப்லெட் என்று அனைத்து மின்னணுக் கருவிகளிலும் படிக்க உதவும் பொதுவான எழுத்துரு.

மின்னூல் வடிவமைப்பு

தட்டச்சு செய்த நூலைப் புத்தக வடிவில் படிப்பதற்கு ஏற்றாற்போல வடிவமைப்பு செய்துகொள்ள வேண்டும். அதாவது புத்தகத் தலைப்பு, அத்தியாயத் தலைப்புகள், பொருத்தமான படங்களைத் தேவையான அளவில் இணைப்பது என்று புத்தகங்களைப் படிக்கும்போது கண்களை உறுத்தாதவாறு வடிவமைக்க வேண்டும்.

இதற்கு இன்டிஸைன், பேஜ்மேக்கர் போன்ற ஏதேனும் வடிவமைப்பு மென்பொருளைப் (Layout software) பயன்படுத்தலாம். எம்.எஸ்.வேர்டிலேயே மிக எளிமையான முறையில் சிறப்பாக வடிவமைக்க முடியும்.

எந்த ஃபார்மேட்டில் எப்படி மாற்ற வேண்டும்?

வடிவமைப்புச் செய்த நூலை File>Save As மூலம் .doc, .docx, .PDF, .html போன்ற ஃபார்மேட்களில் மாற்றவேண்டும்.

ePub, Mobi போன்ற ஃபார்மேட்கள்

pressbooks.com, toepub.com, ebook.online-convert.com போன்ற இணையதளங்கள் மூலம் .doc, .docx, .PDF ஃபார்மேட்களில் உருவாக்கிய மின்னூல்களை ஆண்ட்ராய்ட் மொபைல், டேப்லெட், ஐபோன், ஐபேட், கிண்டில் போன்ற மின்னணுச் சாதனங்களில் படிக்க உதவும் ePub, mobi போன்ற ஃபார்மேட்களில் மாற்றிக்கொள்ள முடியும்.

பரிசோதிக்கும் முறை

முதலில் உங்கள் கம்ப்யூட்டர், மொபைல்போன், டேப்லெட், ஐபேட் போன்ற சாதனங்களில் மின்னூல்களைப் படிக்க உதவும் ஆப்ஸ்களைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

நீங்கள் பயன்படுத்தும் சாதனம் ஆண்ட்ராய்ட் வகை போன்/டேப்லெட்டாக இருந்தால் ePub reader for Android, FBReader, Google Play Books போன்ற ஆப்ஸ்களில் ஏதேனும் ஒன்றையும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்/ஐபேடாக இருந்தால் iBooks for iPad, Kindle for iPad, Google Play Books போன்றவற்றில் ஏதேனும் ஒன்றையும் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். டெஸ்க்டாப்/லேப்டாப்புகளில் Adobe Reader மென்பொருளை இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.

அடுத்து PDF, Mobi, ePub ஃபார்மேட்களில் நீங்கள் உருவாக்கியுள்ள மின்னூல்களை உங்கள் இமெயில் முகவரிக்கே அனுப்பிக்கொள்ளுங்கள். உங்கள் மொபைல்/ஐபேட்/டேப்லெட் போன்றவற்றில் இமெயிலைத் திறந்து பார்த்தால், உங்கள் சாதனத்தில் எந்த ஆப்பை இன்ஸ்டால் செய்துள்ளீர்களோ அந்த ஆப்பின் ஐகானுடன் அவை வெளிப்படும். அதை கிளிக் செய்தால் உங்கள் சாதனத்தில் உள்ள ஆப்பின் மூலம் நீங்கள் உருவாக்கிய மின்னூல் திறக்கப்படும்.

உதாரணத்துக்கு உங்கள் ஐபோனில் iBooks, Kindle ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், உங்கள் இமெயிலில் உள்ள ePub வகை மின்னூல் iBooks என்ற ஆப்பின் மூலம் திறக்கப்படும். mobi வகை மின்னூல் Kindle என்ற ஆப்பின் மூலம் திறக்கப்படும்.

மின்னூல்கள் விற்பனை

கூகுள் ப்ளே ஸ்டோர் (play.google.com/books/publish) மூலம் நீங்கள் உருவாக்கும் மின்னூல்களை விற்பனை செய்யலாம். ஆனால், அவர்கள் தற்காலிகமாக மின்னூல் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

அமேசான் நிறுவனம் தன் கிண்டில் புக்ஸ்டோரில் தமிழ், மராத்தி, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மின்னூல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசானிலும் உங்கள் புத்தகங்களை விற்பனைக்கு வைக்க முடியும். அமேசானின் Kindle Direct Publishing என்ற வசதியின் மூலம் பதிப்பாளர்கள் மட்டும் என்றில்லாமல், தனிநபர்களும் தங்கள் புத்தகங்களை விற்பனைக்கு வைக்கலாம். இதற்கு https://kdp.amazon.com/ என்ற இணையதளம் உதவுகிறது. புத்தகங்களை அப்லோட் செய்யும் முறை, காப்பிரைட், ராயல்டி விவரங்கள் போன்றவை அந்த வெப்சைட்டில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் விதிமுறைகளுக்கு உங்கள் மின்னூல்களை விற்பனைக்கு வைக்கலாம்.

இதுபோன்ற முன்னணி புத்தக விற்பனை யாளர்களிடம் உங்கள் புத்தகங்களை விற்பனைக்கு வைத்தால், அவை உலக அளவில் சென்றடையும். புத்தகங்களின் விற்பனைக்கு ஏற்பப் பணமும் கிடைக்கும். நீங்களாகவும் மின்னூல் விற்பனை செய்யும் இணையதளத்தைத் தொடங்கி, புத்தக விற்பனையாளராகவும் மாறலாம்.

ஆனால் உங்கள் இணையதளத்தில் பிற எழுத்தாளர்கள், பதிப்பாளர்களின் புத்தகங்களை அவர்கள் அனுமதியுடன் விற்பனைக்கு வைக்கவும், அச்சுப் புத்தகங்களை மின்னூலாக மாற்றவும் உங்களிடம் மென்பொருள் இருக்க வேண்டும். உங்கள் இணையதளத்தைப் பிரபலப்படுத்த விளம்பரம் செய்ய வேண்டும். பெருமுயற்சி செய்தால்தான் மின்னூல் விற்பனையாளராக வெற்றி பெற முடியும்.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்