நாம் வங்கி சேமிப்பு, தபால் சேமிப்பு போன்று மிதவாதியாக இருந்தால் நம் முதலீட்டுக்குப் பங்கம் வராது. ஆனால், அதைக் கொஞ்சம் தீவிரப்படுத்தினால் லாபம் அதிகமாகக் கிடைக்கும். அதேசமயம் முதலீட்டுக்குப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
நெருப்பு சுடும் என்றால் ‘தொடாதே’என்று அர்த்தம். ஆனால், முதலீட்டுக் கோணத்தில் பார்க்கும்போது, நெருப்பு சுடும் என்றால், ‘கவனமாகக் கையாள வேண்டும்’என்று பொருள். நெருப்பு சுடும் என்பதற்காகச் சமைக்காமல் இருக்கிறோமா? கவனத்தோடு கையாண்டால் நெருப்பு நமக்குத் தோழமையாகி விடுகிறதல்லவா! அப்படித்தான் ஆபத்தான முதலீடுகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வளவு சிரமப்பட்டு முதலீட்டில் ஈடுபடுவது லாபம் பார்க்க மட்டும்தானா? இல்லை. லாபம் முக்கியம்தான் ஆனால், நம் முதலீட்டுக் கோவையில் எல்லாவிதமான முதலீடுகளும் இருக்க வேண்டும்.
அது என்ன முதலீட்டுக் கோவை? போர்ட்ஃபோலியோ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதைத்தான் நாம் முதலீட்டுக் கோவை என்கிறோம். அந்த முதலீட்டுக் கோவையில் எல்லா விதமான முதலீடும் இருக்க வேண்டும். நாம் செய்யும் முதலீட்டில் வங்கி சேமிப்பும் இருக்க வேண்டும், பங்குச் சந்தை முதலீடும் இருக்க வேண்டும்.
வங்கிச் சேமிப்பு என்பது செய்த முதலீட்டுக்குப் பங்கம் இல்லாமல் ஓரளவு லாபத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் நம் லாப இலக்கை நம்மால் அடைய முடியாது. அதுபோன்ற சூழலில் பங்குச் சந்தை போன்ற தீவிரத் தன்மை கொண்ட முதலீடுதான் கைகொடுக்கும். அப்போதுதான் நம் இலக்கை நம்மால் அடைய முடியும்.
சரி, வங்கியில் எவ்வளவு முதலீடு செய்வது? பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்வது?
அதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. அந்தக் கணக்குக்கு முன்னால் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம், மிதவாத முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், தீவிர முதலீட்டில் ஒரு வரம்பு இருக்கிறது. முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது, எவ்வளவு நஷ்டத்தை நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் என்பதுதான்.
அதாவது தீவிரத்தன்மை கொண்ட முதலீட்டில் செய்த மொத்தப் பணமும் கிடைக்காமல் போய்விட்டாலும், நம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்ற நிலையில்தான் நாம் அந்த வகை முதலீட்டைப் பற்றியே யோசிக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, உயிரைக் கொடுத்து உழைக்கும் முதலீடு அது. உயிர் போகும் அபாயம் அதில் இருக்கவே செய்கிறது. அப்போது நாம் நிலைகுலைந்து நின்றுவிடக் கூடாது.
இந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னதாக அதீத வட்டி தருகிறார்கள் என்று ஆசைப்பட்டு, ஒட்டுமொத்த சேமிப்பையும் சீட்டு கம்பெனிகளில் போட்டு ஏமாந்தவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.
அதனால் உங்கள் பிள்ளைகளின் திருமணத்துக்காகவோ கல்விக்காகவோ சேமித்து வைக்கும் பணத்தை எடுத்துப் பங்குச் சந்தைகளில் போடாதீர்கள். உபரியாக இருக்கும் பணத்தைத்தான் அதுபோன்ற முதலீடுகளில் போட வேண்டும். லாபம் பெரிதாகக் கிடைக்கவில்லை என்றாலும் முதலீடு பத்திரமாக இருக்கும் இடங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும்.
இப்படிச் சொல்வதைவிட இவ்வளவு பணத்தை, பணத்துக்குப் பங்கம் வராத முதலீட்டில் போடுங்கள். லாபத்தை அள்ளிக் கொடுக்கும் இடங்களில் இவ்வளவு பணத்தை முதலீடு செய்யுங்கள் என்று சொல்லுங்கள் என்கிறீர்களா?
ஒரு லட்சத்தை வங்கிச் சேமிப்பில் போடுங்கள், ஐந்து லட்சத்தை பங்குச் சந்தையில் போடுங்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் உங்கள் ஒட்டுமொத்த முதலீட்டில் எது எத்தனை சதவீகிதமாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல முடியும்.
அதற்கு ஓர் எளிமையான கணக்கு.
உங்கள் வயது என்னவோ அத்தனை சதவீதத்தைப் பாதுகாப்பான, குறைவான லாபம் தந்தாலும் பரவாயில்லை என்கிற முதலீட்டில் போடுங்கள். மீதமுள்ள சதவீதத்தை ஆபத்தான முதலீட்டில் போடுங்கள்.
உங்கள் வயது நாற்பது என்றால்
நாற்பது சதவீதம் உத்தரவாதம் தரும் முதலீடு. அறுபது சதவீதம் ஆபத்தான லாபம் அதிகம் கிடைக்கும் முதலீடு. இதுதான் கணக்கு. உங்கள் வயது ஏற ஏற உங்கள் பாதுகாப்பான முதலீட்டு அளவும் ஏறிக்கொண்டே செல்லும். இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? அடுத்த வாரம் பேசலாம்.
(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago