டெல்லி அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் அந்நாட்டைச் சேர்ந்த நான்கு பெண் தூதர்கள் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கவச வாகனங்களில் பயணிப்பதற்குப் பதிலாக ஆட்டோவில் பயணம் செய்து வருகின்றனர். அமெரிக்கத் தூதர்களான ஆன் எல் மேசன், ரூத் ஹோம்பெர்க், ஷரீன் ஜே கிட்டர்மேன், ஜெனிபர் பைவாட்டர்ஸ் ஆகிய நால்வரும் தனித்தனியே ஆட்டோ வைத்துள்ளனர். விருப்பத்திற்கு ஏற்ப சகல வசதிகளுடன் ஆட்டோக்களை வடிவமைத்துக்கொண்டு அவர்களே ஓட்டியும் செல்கின்றனர். இப்படிப் பயணம் செய்வது சுதந்திர உணர்வைத் தருவதாகவும், பொதுமக்களோடு உரையாடுவதற்கு ஆட்டோ பயணங்கள் வாய்ப்பளிப்பதாகவும் சொல்கின்றனர். கவனத்தை ஈர்த்திருக்கும் இந்தப் பெண் தூதர்களுக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!
இது தடையல்ல, கட்டுப்பாடு
டெல்லி ஜும்மா மசூதிக்குப் பெண்கள் தனியாகவோ குழுக்களாகவோ நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. “மசூதி வளாகத்தில் சில சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. பெண்கள் தனியாக வந்து தங்கள் ஆண் நண்பர்களுக்காகக் காத்திருக்கிறார்கள். அதனால், கட்டுப்பாடு விதிக்கப்பட்டது” என ஜும்மா மசூதியின் ஷாகி இமாம் சையது அகமது புகாரி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு நாடெங்கும் உள்ள பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டது. முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் ஜும்மா மசூதியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகி உள்ளது!
» ‘காந்தாரா’ பாடலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
» விஜய் சேதுபதியை போற்றும் நடிகர்கள் வருவார்கள் - கமல்ஹாசன் பேச்சு
அழகிப்போட்டி நிறுவனத்தையே வாங்கிய திருநங்கை
ஆனி ஜகபாங் என்பவர், தாய்லாந்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். திருநங்கையான இவர் திருநங்கைகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர். கடந்த 71 ஆண்டுகளாக பிரபஞ்ச அழகிப் போட்டிகளை நடத்தும் நிறுவனத்தை இவர் 165 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். திருநங்கை ஒருவர் இந்நிறுவனத்தை சொந்தமாக்கிக் கொள்வது இதுவே முதல் முறை. “இந்தச் செய்தி உலக அளவில் தாய்லாந்தின் நற்பெயரைக் கொண்டுச்செல்லும்” என நம்பிக்கை தெரிவித்திருக்கும் அவர் அடுத்த ஆண்டு முதல் திருமணமான பெண்களும் தாய்மார்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
- ரா.கார்த்திகா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago