வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்: நீங்களும் பதிப்பாளராகலாம்!

By காம்கேர் கே.புவனேஸ்வரி

உங்களின் கதைகளையும் கவிதைகளையும் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று ஆசையா? தொழில்நுட்ப உதவியோடு மின் புத்தகங்கள் வெளியிடுவது மிகவும் சுலபம்.

மின் புத்தகங்கள் என்பது கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன், ஐபேட், டேப்லெட் என்று அனைத்து மின்னணுக் கருவிகளிலும் படிக்கக்கூடிய புத்தகங்கள். இவை தவிர, மின்னூல்களைப் படிப்பதற்குப் பிரத்யேகமாக கிண்டில், நூக், கோபோ போன்ற மின்னணுக் கருவிகளும் உள்ளன.

ஸ்மார்ட் போன், டேப்லெட், ஐபேட்களில் மின்னூல்களைப் படிக்கும்போது சில பக்கங்களைப் படிப்பதற்குள் கண்கள் வலிக்க ஆரம்பித்துவிடும். மின்னூல் களைப் படிக்க உதவும் மின்னணுக் கருவிகள் E-ink திரை கொண்டவை. அந்தத் திரைகளில் படிக்கும்போது கண்கள் வலிக்காது.

மின்னணுக் கருவிகளில் படிக்கக்கூடிய ஃபைல் ஃபார்மேட்கள்

மின்னணுக் கருவிகளில் படிப்பதற்கு pdf தவிர epub, mobi என்ற ஃபைல் ஃபார்மேட்கள் உள்ளன. எழுத்தின் அளவை அதிகரிக்கலாம், குறைக்கலாம். அப்படி மாற்றும்போது படிப்பதற்குப் பயன்படுத்தும் கருவியின் திரையின் அளவுக்கேற்ப பக்க அளவுகள் தாமாகவே மாறிவிடும். அதாவது ஐபோனில் படிக்கும்போது ஒரு பக்கத்தில் 20 வரிகள் இருந்தால், ஐபேடில் 40 வரிகள் இருக்கும்.

epub ஃபைல் ஃபார்மேட்

மின்னூல்களைப் படிக்க உதவும் நூக், கோபோ, சோனி மின்னூல் ரீடர் கருவிகள் epub ஃபைல் ஃபார்மேட்டை ஆதரிக்கின்றன. ஆன்ட்ராய்ட் போனில் fbreader ஆப்களையும், ஆப்பிள் கருவிகளில் iBooks ஆப்களையும் தரவிறக்கம் செய்துகொண்டு epub ஃபைல் பார்மேட்டில் உள்ள மின்னூல்களைப் படிக்கலாம்.

mobi ஃபைல் ஃபார்மேட்

அமேசான் நிறுவனம் மின்னூல்களைப் படிப்பதற்காகவே உருவாக்கிய கிண்டில் கருவிகள் Mobi என்ற ஃபைல் ஃபார்மேட்டை ஆதரிக்கின்றன. ஆன்ட்ராய்ட், ஆப்பிள் கருவிகளில் கிண்டில் ஆப்களைத் தரவிறக்கம் செய்து கொண்டு Mobi ஃபைல் ஃபார்மேட்டில் உள்ள மின்னூல்களைப் படிக்கலாம்.

PDF ஃபைல் ஃபார்மேட்

A4 அளவில் உள்ள PDF ஃபைல் ஃபார்மேட்டில் இருக்கும் மின்னூல்கள் டெஸ்க்டாப் / லேப்டாப்புகளிலும், பிரவுசர் சாஃப்ட்வேர்களிலும் படிக்க வசதியாக இருக்கும். மாறாகப் பழைய கிண்டில், நூக் போன்ற மின்னூல் ரீடர் கருவிகளில் படிப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏனெனில் எழுத்துகள் சிறியதாகத் தெரியும். பெரிதாக்கி, அப்படியும் இப்படியும் நகர்த்திப் படிப்பது மிகவும் கடினமான செயல்.

சிறிய திரைகளில் PDF ஃபைல்களைப் படிப்பதற்கு A6 அளவிலான PDF ஃபைல்களே பொருத்தமாக இருக்கும். ஃபைல்களை உருவாக்கும்போது அகலம் 9 CM, உயரம் 12 CM, எழுத்தின் அளவு 10 என வைத்து A6 PDF ஃபைல்களை உருவாக்கலாம். அந்த ஃபைல்களைச் சிறிய திரைகொண்ட மின்கருவிகளில் படிக்கலாம்.

மின்னூல் படித்தும் காட்டும்

# ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் போன்ற மின்கருவிகளில் மின்னூல்களைப் படிக்க iBooks for iPad, Kindle for iPad, Google Play Books என்ற ஆப்களைப் பயன்படுத்தலாம்.

# சாம்சங், ஹெச்.டி.சி போன்ற ஆண்டிராய்டு மொபைல் போன், டேப்லெட்டு களில் மின்னூல்களைப் படிக்க ePub reader for Android, FBReader, Google Play Books போன்ற ஆப்கள் உதவுகின்றன.

# குரோம் பிரவுசரில் படிக்க Readium.org, ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் படிக்க epubread.com போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

# Google Play Books மூலம் டெஸ்க்டாப் / லேப்டாப் மற்றும் அனைத்து மின்கருவிகளிலும் மின்னூல்களைப் படிக்கலாம். ஆண்டிராய்டு மின்கருவிகள் மின்னூல்களைப் படித்தும் காட்டும்.

மின்னூல் வெளியிட ஆசையா?

பிளாகில் நீங்கள் எழுதுகிற தகவல்கள் ஏராளமான வாசகர்களைச் சென்றடைய, உங்கள் பிளாகைத் தவிரப் பார்வையாளர்கள் அதிகம் உள்ள பிற வெப்சைட்களிலும் எழுதிவந்தால், உங்கள் எழுத்துகளுக்கு வாசகர்கள் அதிகம் கிடைப்பார்கள். பிரதிலிபி போன்ற வெப்சைட்கள் மற்றவர்களின் கதை, கவிதை, கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன.

youblishers, pressbooks, pratilipi, freetamilebooks, போன்ற பல வெப்சைட்கள் உங்கள் படைப்புகளை மின் புத்தகமாக வெளியிட உதவுகிறார்கள். மேலும் தங்களுடைய வெப்சைட்டிலும் பட்டியலிடுகிறார்கள். அவற்றை உங்கள் வெப்சைட், பிளாகில் லிங்காகக் கொடுத்துக்கொள்ளலாம். தற்சமயம் இவர்கள் உங்கள் படைப்புகளை மின் புத்தகமாக வெளியிடக் கட்டணம் வசூலிப்பதில்லை (எதிர்காலத்தில் மாறலாம்). உங்களுக்கும் வருமானம் ஏதும் வராது. வாசகர்களுக்கும் முற்றிலும் இலவசம். அதனால் என்ன, எழுத்தாளராக இருந்த உங்களைப் பதிப்பாளராக உயர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறார்கள்.

‘புத்தகம் எழுதி சம்பாதிக்கவே முடியாதா?’ முடியும். மின் புத்தகம் வெளியிட்டு, வருமானம் ஈட்டவும் வழியுண்டு. மின் புத்தகம் எப்படித் தயாரிப்பது, எப்படி, எங்கு விற்பனை செய்வது, எப்படி வருமானம் கிடைக்கும் என்பதை எல்லாம் அடுத்த வாரம் பார்ப்போம்.

அமேசான் கிண்டிலில் தமிழ்ப் புத்தகங்கள்

# அண்மையில் அமேசான் நிறுவனம் தன் கிண்டில் புக்ஸ்டோரில் தமிழ், மராத்தி, குஜராத்தி, மலையாளம் மொழிகளில் மின்னூல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நான்கு மொழிகளிலும் பல்வேறு துறை சார்ந்த ஆயிரக்கணக்கான மின்னூல்களைக் கொண்டு வந்துள்ளது.

# இவற்றை கிண்டில் இ-ரீடர், ஸ்மார்ட்போன்களில் கிண்டில் அப்ளிகேஷனைத் (App) தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

# அமேசான் நிறுவனத்தில் நீங்களும் புத்தகம் எழுதி விற்பனைக்கு வைக்கலாம்.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்