வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்: இணையதளச் சுவரை வாடகைக்கு விடலாமா?

By காம்கேர் கே.புவனேஸ்வரி

ஆன்லைனில் உங்கள் அலுவலகத்துக்குப் பெயர் சூட்டி, இடத்தையும் வாங்கிவிட்ட பிறகு, உங்கள் தேவைக்கு ஏற்ப அதை வடிவமைக்க வேண்டும்.

கூகுள் நிறுவனம் உங்கள் இணைய தளத்தில் குறிப்பிட்ட இடத்தை வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதிக்க வழிவகுத்துள்ளது. பத்திரிகைகளில் கால் பக்கம், அரைப் பக்கம், முழுப் பக்கம் என விளம்பரங்களுக்கு அளிக்கப்படும் இடத்துக்கு ஏற்பக் கட்டணமும் வேறுபடும். பத்திரிகைகள் நமக்காக இடம் கொடுத்து, நம் விளம்பரத்தை வெளியிடக் கட்டணம் வாங்கிக்கொள்கிறார்கள்.

அதுபோல நமக்கு ஓர் இணையதளம் இருந்தால், அதில் கூகுள் போன்ற நிறுவனங் களுக்குச் சில பகுதிகளை ஒதுக்கி, அவர்கள் விளம்பரத்தை வெளியிட அனுமதி கொடுத்து, அவர்களிடமிருந்தே வருமானம் பெறமுடியும். இதற்கு ஆட்சென்ஸ், ஆட்வேர்ட், ஆட்சாய்ஸ் என்றெல்லாம் பெயர் உண்டு.

நம் இணையதளத்தில் நாம் ஒதுக்கிக் கொடுக்கும் இடத்தில் கூகுள் விளம்பரங்களை வெளியிடும். அந்த விளம்பரங்களுக்குக் கிடைக்கிற பார்வையாளர்களைப் பொறுத்து நமக்குப் பணம் கொடுப்பார்கள். நம் இணையதளத்தில் கூகுள் விளம்பரப்படுத்திக் கொள்ள வகை செய்ய வேண்டுமானால், நம் இணையதளத்தை அதற்கேற்ப வடிவமைக்க வேண்டும். உள்ளடக்கமும் அதற்கேற்ப இருக்க வேண்டும்.

இப்படித்தான் இருக்க வேண்டும்

இணையதளத்தின் பெயர், அதற்கான இடம் போன்றவற்றைக் கட்டணம் செலுத்தி பெறுவதைப்போல, அதை வடிவமைக்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். நீங்களே இணையதள வடிவமைப்பாளர் என்றால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, நீங்களாகவே வடிவமைத்துக்கொள்ளலாம்.

இணையதளத்தை வடிவமைப்பதற்கும் ஏராளமான நிறுவனங்கள் இருக்கின்றன. இணையதளத்தின் பெயர், வெப்சர்வரில் இடம் போன்றவற்றைக் கொடுக்கிற இணையதள சேவை நிறுவனங்களே வடிவமைக்கும் பணியையும் செய்து தரும். இடற்கென்றே பிரத்யேகமாக இணையதள வடிவமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.

யாருக்கு எது பொருந்தும்?

இணையதளம் அமைக்கும்போது உங்கள் தொழிலுக்கு ஏற்ற மாதிரியான வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் திறமைகளை மட்டும் எடுத்துச் சொல்வதாக இருந்தால் போதும் என்றால் புகைப்படங்கள் அடங்கிய வடிவமைப்பே போதும். திறமையை எடுத்துச் சொன்னால் மட்டும் போதாது, விற்பனையும் செய்ய வேண் டும் என்றால் ஆன்லைன் விற்பனையுடன் இணைந்த இணையதளம், ஆன்லைனில் டிவி நடத்த வேண்டும் என்றால் யு-டியூபுடன் இணைந்த இணையதளம், ஆன்லைன் பத்திரிகை நடத்த வேண்டும் என்றால் பிளாக், ஃப்ளிப் புத்தகங்களுடன் இணைந்த இணையதளம் என்று அமைப்பது நல்லது.

இணையதளத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் பே பால் (Pay Pal), கூகுள் வேலட் (Google Wallet), ஸ்கிரில் (Skrill), பேயானீர் (Payoneer) போன்ற நிறுவனங்கள் மூலம்தான் பணப் பரிவர்த்தனை நடைபெறும். இதற்காகத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

உங்களுக்கான இணையதளத்தை அமைத்து முழுமையாகத் தொழில் செய்ய வேண்டும் என்றால் தொடக்கத்தில் கொஞ்சம் செலவு செய்யத்தான் வேண்டும்.

கூகுளுக்கு வாடகைக்கு இடம் கொடுப்பதாக இருந்தால் இணையதளத்தை வடிவமைக்கும்போதே, அதற்கான இடத்தை யும் ஒதுக்கி அதற்கேற்ப வடிவமைத்தால், இணையதளத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யாமல் கூகுள் விளம்பரங்களை வெளிப் படுத்த அனுமதி கொடுக்கலாம். இணையதள வடிவமைப்பாளர்களிடம் உங்கள் நோக்கத்தைச் சொல்லி வடிவமைத்துக்கொள்ளுங்கள்.

கைகொடுக்கும் மென்பொருள்கள்

வேர்ட் பிரஸ் (Wordpress), ஜூம்லா (Joomla), ட்ரூபால் (Drupal) போன்ற மென்பொருள்கள் மிகச் சுலபமாக இணையதளத்தை வடிவமைக்க உதவுகின்றன. இவை அனைத்தும் ஓபன் சோர்ஸ் (Open Source) மென்பொருள்கள். அதாவது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட ஏராளமான வடிவமைப்பு களை உள்ளடக்கியவை. அவை PHP போன்று ஏதேனும் ஒரு கம்ப்யூட்டர் மொழியில் எழுதப்பட்ட புரோகிராம்களின் சாஃப்ட்வேர் தொகுப்புகள். கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மொழிகளில் புலமை பெற்றவர்கள், ஏற்கெனவே எழுதப்பட்ட புரோகிராம்களில் ஏதேனும் மாற்றம் செய்தும் வடிவமைக்கலாம்.

வடிவமைப்பு சூட்சுமம்

புரோகிராம், சாஃப்ட்வேர்களில் புலமை ஏதும் கிடையாது, வேர்ட், எக்ஸல் போன்ற அடிப்படை சாஃப்ட்வேர்களை மட்டுமே கையாளத் தெரியும் என்பவர்கள் மேலே சொன்ன வெப்டிஸைன் சாஃப்ட்வேர்களை அப்படியே பயன்படுத்தலாம். எம்.எஸ்.வேர்டில் ஒரு டேபிள் வடிவமைப்பதைப்போல, புகைப்படத்தை இணைப்பதைப்போல, வண்ண வண்ண எழுத்துகளை வைத்து லே அவுட் செய்வதைப் போல இந்த சாஃப்ட்வேர்களையும் பயன்படுத்தலாம்.

இதில் உள்ள டிஸைன் பகுதிகள் WYSIWYG (What you see is what you get) முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது நாம் கண்களால் பார்ப்பவை அப்படியே டிஸைன் செய்யும்போதும் கிடைக்கும் என்று பொருள். எல்லாமே எளிதாகக் கையாளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். உங்கள் கற்பனைக்கு ஏற்பப் பயன்படுத்துவதில்தான் சூட்சுமம் உள்ளது.

உங்கள் இணையதளத்தில் கூகுளுக்கு இடம் கொடுத்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் அடுத்த வாரம்.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், தனியார் மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்