தீபாவளியன்று விசாகப்பட்டினத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் களமிறங்கியதும் ரசிகர்கள் ஒரு கணம் குழம்பிப் போனார்கள். தேவகி (தோனி), சரோஜ் (கோலி), சுஜாதா (ரஹானே) என வீரர்களின் ஜெர்சியில் பெண்களின் பெயர்கள் இருப்பதைப் பார்த்துக் குழப்பினார்கள். என்று குழம்பியவர்களுக்குப் பிறகுதான் தெரிந்தது, அந்தப் பெயர்கள் எல்லாம் தங்கள் அபிமான வீரர்களை ஈன்றெடுத்த அன்னையர்களின் பெயர்கள் என்று! முதன் முறையாகத் தங்களின் அன்னையர்களின் பெயர்கள் பொறித்த ஜெர்சியைப் பயன்படுத்தி, உலக அளவில் புதியதொரு விழிப்புணர்வு விதையை விதைத்திருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள்! ஏன், எதற்காக இந்த மாற்றம்?
குழந்தைகள் தங்களின் முன்னெழுத்தாகத் தந்தையின் பெயரைச் சேர்த்து எழுதுவது நம் கலாச்சாரத்தில் ஊறிய விஷயம். காலம் பூராவும் தந்தைக்குக் கிடைக்கும் இந்த மரியாதை குழந்தைகளை ஈன்றெடுத்து, வளர்த்து ஆளாக்கும் அன்னையருக்குக் கிடைப்பதில்லை. கிரிக்கெட் வீரர்கள் எல்லோருமே தாங்கள் அணியும் ஜெர்சியில் தங்கள் பெயருடன் கடைசியாகத் தந்தையின் பெயர் அல்லது குடும்பப் பெயர்களை இணைத்தே தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். இந்தப் போக்கைக் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்னெடுக்கப்பட்டதுதான் அன்னையர் பெயர் தாங்கிய ஜெர்சியை அணிந்து வந்தது!
அன்னையருக்குக் கொடுத்த இந்த மரியாதை பற்றி இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இப்படிச் சொன்னார்: “நாங்கள் எப்போதுமே தந்தை வழியான குடும்பப் பெயர்களையே எங்கள் பெயருடன் சேர்த்துகொள்கிறோம். நமக்காக எல்லாவற்றையும் செய்யும் அம்மாவைப் பாராட்டும் வகையில் அவருக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்? பொதுவெளியில் அம்மாக்களின் பெயர்களை எங்களுடன் இணைத்திருப்பதை மிகவும் உணர்வுபூர்வமாகக் கருதுகிறோம். ஒவ்வொரு நாளும் அம்மாவைப் பாராட்டும் வகையில் நம் நினைவில் அவர்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியர்களை இந்தத் தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்”.
துக்ககரமான நிகழ்வு எதுவும் நடந்தால் கைப்பட்டையில் கறுப்பு ரிப்பன் கட்டி துக்கத்தை எல்லா நாட்டு கிரிக்கெட் வீரர்களுமே வெளிப்படுத்தி வருகிறார்கள். புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்கள் பிங்க் வண்ண ஜெர்சியை அணிந்து விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கான அதிகாரம் அளித்தல் போன்ற விஷயங்களை முன்னெடுக்கும் விஷயமாக இந்தியாவில் அன்னையரின் பெயர்களைப் பொறித்த ஜெர்சியை அணிந்து, வீரர்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் கிரிக்கெட்டை ஆராதிக்கும் இந்தியா வில் அந்த விளையாட்டு வீரர்கள் மூலம் இது மேற்கொள்ளப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஏதோ ஒரு நாள் நிகழ்வாக இல்லாமல், இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது அன்னையரின் பெருமைகளைப் போற்றும் விதமாக அவர்கள் பெயர் தாங்கிய ஜெர்சியை அணிந்தால், இந்த விழிப்புணர்வு மேலும் பரவும் என்று நம்பலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago