வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: விளம்பரம் மூலம் வருமானம்

By காம்கேர் கே.புவனேஸ்வரி

கூகுள் நிறுவனத்தின் Adsense, Adword போன்ற வசதிகள் மூலம், இணையத்தில் வருமானம் பெற முடியும்.

நம் வெப்சைட்டில் பிற நிறுவனங்களின் விளம்பரங்களைப் போடுவதற்கு அனுமதி கொடுத்து, அதுக்கு அவர்களிடம் இருந்து கட்டணத்தைப் பெறுவது ஒரு வகையான வியாபார உத்தி. இதுக்கு நாம்தான் மார்கெட்டிங் செய்ய வேண்டும். வெப்சைட்களில் விளம்பரங்கள் ஆங்காங்கே வெளிவந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை இந்த வகையைச் சேர்ந்தவை.

மற்றோர் உத்தி, நம் வெப்சைட்டின் சில பகுதிகளை அப்படியே கூகுளுக்கு வாடகைக்கு விட்டுவிட்டால், அவர்கள் அந்த இடங்களில் விளம்பரங்களை வெளியிட்டுக்கொள்வார்கள். நமக்கு அதுக்கான வாடகையும் கொடுப்பார்கள்.

கூகுள் மூலம் வெளிவரும் விளம்பரங்களில் Ads by Google, AdChoices, AdWords என்ற இணைப்பு வார்த்தைகள் இருப்பதைக் கவனியுங்கள். இதற்கு நீங்கள் மார்க்கெட்டிங் செய்ய வேண்டாம். கூகுள் அவற்றைப் பார்த்துக்கொள்ளும். உங்கள் சார்பில் மார்க்கெட்டிங் செய்து, விளம்பரம் பெற்று, அவற்றை உங்கள் வெப்சைட்டில் வெளியிட்டு, கட்டணமும் கொடுக்கும்.

ஆட்சென்ஸ் (AdSense) என்றால் என்ன?

கூகுள் கல்வி-மருத்துவம்-ஆராய்ச்சி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் போன்றவற்றிடம் விளம்பரங்களை நல்ல விலைக்குப் பெறுகிறது. பிறகு வெப்சைட் வைத்திருப்பவர்களிடம், விளம்பரங்களுக்குத் தேவையான இடத்தை அவர்கள் அனுமதியுடன் எடுத்துக்கொண்டு, அதில் அந்த விளம்பரங்களை வெளியிடுகிறது. இதுக்கு ஆட்சென்ஸ் என்று பெயர்.

நம் வெப்சைட்டில் கூகுள் நிறுவனத்துக்கு இடத்தைக் கொடுத்து, விளம்பரங்களை வெளியிட நாம் அனுமதிக்கலாம். நம் அனுமதி இல்லாமல் கூகுளோ அல்லது வேறு எந்த நிறுவனமோ நம் வெப்சைட்டில் இடத்தை ஆக்கிரமிக்க இயலாது.

நம் வெப்சைட்டின் உள்ளடக்கத்துக்கு ஏற்ப பொருத்தமான விளம்பரங்களை கூகுள் வெளியிடுவதால், நம் வெப்சைட்டுக்கு வருகிற பார்வையாளர்கள் அந்த விளம்பரங்களையும் க்ளிக் செய்து பார்ப்பார்கள்.

ஒரு விளம்பரம் எத்தனை முறை க்ளிக் செய்யப்படுகிறது என்பதைக் கணக்கில் கொண்டு, அதற்கேற்ப நமக்கு வாடகை கிடைக்கும்.

ஆட்வேர்ட் (Adword) என்றால் என்ன?

ஆட்சென்ஸைப் போலவே, ஆட்வேர்டும் கூகுள் நிறுவனத்தால் கொடுக்கப்படும் விளம்பர வசதி. கூகுள் நிறுவனம், விளம்பரங்கள் கொடுக்க விரும்பும் நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களை நல்ல விலைக்குப் பெறுகிறது. பிறகு, வெப்சைட்கள் வைத்திருப்பவர்களின் தகவல்களில் உள்ள வார்த்தைகளுக்குப் பொருத்தமான விளம்பரங்களை இணைக்கிறது.

பார்வையாளர்கள் வெப்சைட்களில் உள்ள தகவல்களைப் பார்வையிடும்போது, கூகுள் நிறுவனம் இணைத்துள்ள விளம்பர வார்த்தைகளை க்ளிக் செய்தால், வெப்சைட்டின் உரிமையாளருக்கு கூகுள் நிறுவனம் உரிய தொகையைக் கொடுக்கிறது.

நம் வெப்சைட்களின் தரம்

1. கூகுள் நிறுவனம் நம் வெப்சைட்களில் விளம்பரங்களை வெளியிட, வெப்சைட்களின் தரம் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

2. நாம் வெளியிடும் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை நமக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்.

3. அதிகக் கட்டணத்தைப் பெற, நம் வெப்சைட்டில் வெளிவரும் விளம்பரங்களை நாமே அடிக்கடி க்ளிக் செய்து, க்ளிக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது. அப்படி க்ளிக் செய்தால் கூகுள் நிறுவனம் அந்த விளம்பரங்களை எடுத்துவிடுவதோடு, நமக்குத் தொடர்ச்சியாக அந்தச் சேவையை அளிக்காது.

4. நம் வெப்சைட்டில் வெளிவரும் விளம்பரங்களை, பார்வையாளர்கள் க்ளிக் செய்து பார்த்தால்தான் நம் கணக்குக்குப் பணம் கிடைக்கும். யாருமே க்ளிக் செய்து பார்க்கவில்லை என்றால், பணம் கிடைக்காது. எனவே, நம் வெப்சைட்டில் நாம் வெளியிடும் தகவல்களை அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். மேலும், நம் வெப்சைட்டை நண்பர்கள், பத்திரிகைகள், பிற வெப்சைட்டுகள் போன்றவற்றில் விளம்பரப்படுத்த வேண்டும்.

5. வன்முறை, புகையிலை, சிகரெட், மது, பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சூதாட்டம் போன்ற தகவல்கள் எந்த வடிவத்தில் நம் தளத்தில் வெளிவந்திருந்தாலும் நம் வெப்சைட்டில் கூகுள் நிறுவனம் விளம்பரங்களை வெளியிடாது.

நம் வெப்சைட்களில் கூகுள் விளம்பரங்கள்

உங்கள் வெப்சைட்டில் கூகுள் நிறுவனத்தின் விளம்பரச் சேவையைப் பயன்படுத்த விரும்பினால், கீழ்காணும் வெப்சைட் முகவரி மூலம் அவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் வழிமுறைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றி, அவர்கள் சேவையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

https://www.google.com/adsense/g-app-single-1

கூகுள் நிறுவனம் கொடுக்கும் விளம்பரங்களின் வகைகள்

கூகுள் நிறுவனம், எழுத்து, படம், வீடியோ, லிங்குகள் எனப் பல்வேறு வடிவங்களில் நம் வெப்சைட்டில் விளம்பரங்களை வெளியிட்டு, அதற்கேற்ப கட்டணங்களை நமக்குக் கொடுக்கிறது.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்