“வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்தாக வேண்டும் என்ற ஆசையிருக்கும். நான் சிறு வயதிலிருந்தே ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்று விரும்பினேன். அந்த ஆசை நிறைவேறியிருப்பதில் பெரும் மகிழ்ச்சி” என்று பேசத் தொடங்கினார் ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதா ராம்.
திரையுலகில் எப்படி நுழைந்தீர்கள்?
என் குடும்பத்தில் நிறையப் பேர் அமெரிக்காவில்தான் இருக்கிறார்கள். Costume Designing, Costume Styling துறைகளில் படித்தேன். இந்தியா வந்தவுடன் தனியாக ஆடை வடிவமைப்பு, விளம்பரங்களைச் செய்துவந்தேன். அந்த நேரத்தில் இயக்குனர் மிஷ்கின் ‘முகமூடி’ படத்துக்காகப் புதிய ஆடை வடிவமைப்பாளரைத் தேடிவருகிறார் என்று அறிந்தேன். அவரைச் சந்தித்தேன். ஒரு மணி நேரம் படக் குழுவினரிடம் பேசினேன். உடனே எனக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார். முதல் படம் இப்படி அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
ஏன் அடுத்தடுத்து படங்கள் செய்யவில்லை?
துல்கர் சல்மான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் என்று பலருக்குத் தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக இருந்தேன். அவர்கள் நிகழ்ச்சிகளுக்குச் சென்றால், ஆடை வடிவமைப்பு செய்து கொடுப்பேன். அமெரிக்காவில் தனியாக மூன்று ஃபேஷன் ஷோக்களை நடத்தினேன். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் அமெரிக்காவில் இசைப் பயணம் மேற்கொண்டபோது மொத்த நிகழ்ச்சிக்கும், அனைவருக்கும் நான் ஆடை வடிவமைப்பு செய்தேன். மிகவும் தேர்ந்தெடுத்துதான் பணியாற்றுகிறேன். திரைப்படத்தில் பணியாற்றும்போது, வேறு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது. இப்படி வெளியே வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளும்போது குறைவாகச் செய்தாலும் நிறைவாகச் செய்கிறேன்.
இதுவரை எந்தெந்த படங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள்?
‘வீர சிவாஜி’ திரைப்படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினேன். தமிழில் ஷாமிலி நாயகியாக நடிக்கும் முதல் படம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். அதில் விக்ரம் பிரபு என்னுடைய பணியைப் பார்த்துவிட்டு, ‘நெருப்புடா’ திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
‘வடசென்னை’ வெற்றி மாறனுடன் பணியாற்றிய அனுபவம் எப்படியிருந்தது?
வடசென்னையின் கதைக்களம் பற்றிக் கூறி, ஆடை வடிவமைப்பு செய்து வரச் சொன்னார் இயக்குனர் வெற்றிமாறன். நானும் செய்து கொடுத்தேன். அவர் பதில் ஒன்றும் சொல்ல வில்லை. திடீரென்று ஒருநாள் குறுந்தகவலில் வாய்ப்பை உறுதி செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள திரைப்படத்துக்கு நான் ஆடை வடிவமைப்பாளர் என்பது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.
Costume Designing, Costume Styling இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
Costume Designing என்பது நம் குழந்தை மாதிரி. சகலமும் நாமே முடிவெடுத்து, உருவாக்கிக் கொடுக்கும் விஷயமாக இருக்கும். Costume Styling என்பது ஏற்கெனவே இருக்கும் ரெடிமேட் ஆடைகளை வாங்கி, அவற்றை நமக்கு ஏற்றுவாறு மாற்றிக்கொள்வது.
துல்கர் சல்மானுடன் பணியாற்றிய அனுபவம்?
துல்கர் சல்மானுக்கு அனைத்து விதமான உடைகளைப் பற்றியும் தெரியும். ஆனால், நான் ஆடை வடிவமைப்பு செய்யும்போது எதிலுமே தலையிட மாட்டார். நீங்கள் கொடுப்பதைப் போட்டுக்கொள்கிறேன் என்பார். நான் படப்பிடிப்பு தளத்தில் இல்லாவிட்டாலும் என்னிடம் கருத்து கேட்டுக்கொள்வார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago