ஆன்லைன் அலுவலகம் தொடர்பாக வாசகர்களிடமிருந்து ஏராளமான இமெயில்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் மிக சுவாரசியமான ஒரு கேள்விக்குப் பதில் அளிப்பதன் மூலம் அனைவரின் சந்தேகங்களுக்கும் பதில் கொடுத்துவிட முடியும்.
“இணையத்தில் இடம் வாங்கிப் போடுவதால் என்ன பயன்? குறைந்த விலைக்கு வாங்கிப் போட்டு, பின்னாளில் அதிக விலைக்கு விற்க முடியுமா?” என்பதுதான் அந்தக் கேள்வி.
இந்த இடம் விற்பனைக்கல்ல
இணையத்தில் இடம் வாங்கிப் போடலாம் என்றால் நீங்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலுக்கு ஆன்லைனில் வெப்சைட் உருவாக்குவது. ஆன்லைனில் உங்கள் அலுவலகம் போலச் செயல்படும் வெப்சைட்டை உருவாக்க வேண்டும் என்றால் முதலில் வெப்சைட் பெயரை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் (Domain Name Registration). அடுத்து உங்கள் வெப்சைட்டுக்குத் தேவையான இடத்தை வாங்க வேண்டும் (Web Hosting Space).
இறுதியாக உங்கள் பிசினஸுக்கு ஏற்ப அதை வடிவமைக்க வேண்டும் (Web Design). இதுதான் வழிமுறை. இவை அத்தனைக்கும் வெப்சர்வீஸ் புரொவைடர்களிடம் ( >www.godaddy.com, >www.bluehost.in) வருடாந்திரக் கட்டணம் செலுத்த வேண்டும். உங்களுக்கே வெப்சைட் டிஸைன் செய்யத் தெரிந்திருந்தால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. உங்கள் வெப்சைட்டுக்குத் தவறாமல் கட்டணம் செலுத்திக்கொண்டிருக்கும் வரை உங்கள் வெப்சைட் இயங்கிக்கொண்டிருக்கும்.
அதேநேரத்தில் உங்கள் வெப்சைட்டில் கூகுளுக்கு இடம் அளித்து, அவர்கள் விளம்பரங்களை வெளியிட அனுமதி கொடுத்துப் பணம் சம்பாதிக்கவும் முடியும். அதற்கு உங்கள் வெப்சைட்டில் பதிவு செய்யப்படும் தகவல்கள் உயர்தரமாக இருக்க வேண்டும். உங்கள் வெப்சைட்டுக்கான இடத்தை நீங்களே வாடகை கொடுத்துதான் பயன்படுத்திக்கொண்டிருப்பதால், அதை நீங்கள் வேறொருவருக்கு விற்க முடியாது.
சமூக வலைதளங்களையே இலவச விளம்பரமாகப் பயன்படுத்தலாம்
உங்கள் ஆன்லைன் அலுவலகத்தில் நீங்கள் செய்கிற தொழிலை ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், யூ-டியூப், சவுண்ட் கிளவுட் போன்ற சமூக வலைத்தளங்களில் இலவசமாகவே விளம்பரப்படுத்த முடியும். பின்னர் அந்த விளம்பரங்களுக்கான லிங்க்கை உங்கள் வெப்சைட்டில் இணைத்துக்கொள்வதன் மூலம் உங்கள் வெப்சைட்டில் பிசினஸும் அதற்கான விளம்பரங்களும் உங்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடையும்.
பிளாக்: உங்கள் தொழில் குறித்துப் பக்கம் பக்கமாகப் படங்கள், எழுத்து மூலம் தகவல்களை வடிவமைத்து வெளியிட முடியும். www.blogger.com, www.wordpress.com போன்ற வெப்சைட்கள் மூலம் உங்களுக்கான பிளாகை வடிவமைத்துக் கொள்ளலாம். இவை பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பதற்குச் சமம்.
சவுண்ட் கிளவுட்: உங்கள் தொழில் பற்றிய செய்திகளைப் பேசி ரெகார்ட் செய்து, அவற்றை ஆன்லைனில் வெளியிட www.soundcloud.com என்ற வெப்சைட் உதவுகிறது. இது வானொலியில் வெளிவரும் விளம்பரங்களுக்குச் சமமானது.
யூடியூப்: உங்கள் தொழில் மற்றும் தயாரிப்புகளை வீடியோ எடுத்து அதை ஆன்லைனில் வெளியிட www.yoytube.com என்ற வெப்சைட் உதவுகிறது. இது தொலைக் காட்சியில் வெளிவரும் விளம்பரங் களுக்கு நிகரானது. யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்து கொள்ளும் வசதிகளும் உள்ளன.
ஃபேஸ்புக்: உங்கள் தொழிலுக்கு பிசினஸ் பக்கம் உருவாக்கிக் கொள்ளவும், வாடிக்கையாளர் வட்டத்தை அதி கரித்துக் கொள்ளவும், லைவ் வீடியோ காட்சிகளை வெளியிடவும், அதன் மூலம் உங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் www.facebook.com என்ற வெப்சைட் உதவுகிறது. உங்கள் தயாரிப்புகள் தரமானதாக இருந்தால் லைக்குகளும் ஷேர்களும் பெற்று, சங்கிலித் தொடர் போலப் பலதரப்பட்ட மக்களுக்குச் சென்றடையும். ஒருவர் உங்கள் பதிவைப் பகிர்ந்துகொண்டால் அது அவருடைய நட்பு வட்டத்தில் உள்ள அனைவரையும் சென்றடையும்.
டிவிட்டர்: உங்கள் தொழில் குறித்து சுருக்கமாக, குறுந்தகவல்கள் மூலம் வெளியிட www.twitter.com என்ற வெப்சைட் உதவுகிறது.
ஸ்கைப்: ஸ்கைப் மூலம் தேவையான வர்களுடன் ஆன்லைனில் நேரில் பார்த்துக்கொண்டே பேச முடியும். இதற்கு www.skype.com என்ற வெப்சைட் உதவுகிறது. உங்கள் வாடிக்கையாளர் களுடன் நேரடியாகப் பேச வேண்டும் என்றால் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வசதி உங்கள் ஆன்லைன் அலுவலக கஸ்டமர் கேர் பிரிவைப்போலச் செயல்படும். வாடிக்கை யாளர்களது குறை, நிறைகளைப் பூர்த்தி செய்ய இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
அந்தந்த வெப்சைட்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உங்கள் தொழிலுக்கான விளம்பரங்களை இந்த வசதிகள் மூலம் தயாரித்து, ஆன்லைனில் வெளியிட்டு, உங்கள் பிசினஸ் வெப்சைட்டில் லிங்க் கொடுக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் விளம்பரம் கொடுக்கும் முறை
ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், யூ-டியூப் இவற்றை உங்கள் பிசினஸுக்கு இலவச விளம்பர மாகப் பயன்படுத்துவதைப் போல, தேவைப்பட்டால் அவற்றில் நீங்கள் கட்டணம் செலுத்தியும் விளம்பரம் செய்ய முடியும். அதன் மூலம் இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற முடியும்.
பணம் வரும் வழி
சமூக வலைதளங்களை உங்கள் பிசினஸை விரிவுபடுத்தப் பயன்படுத்தும் அதே நேரத்தில், அவற்றில் நீங்கள் பதிவு செய்கிற தகவல்களுக்கு ஏற்ப, அவர்களே உங்களுக்குப் பணமும் கொடுக்கும் வாய்ப்புகளும் உண்டு. அதாவது, சமூக வலைதளங்களிடம் இருந்தே நீங்கள் சம்பாத்தியம் பெற முடியும்.
திறமைகளைத் தொழிலாக்கலாம்
யூடியூப் மூலம் நீங்களே சொந்தமாக உங்கள் பெயரில் டிவி நடத்தலாம். பிளாக், வெப்சைட்கள் மூலம் பத்திரிகை நடத்தலாம். சவுண்ட் கிளவுட் மூலம் சொந்தமாக வானொலி நிகழ்ச்சிகள் நடத்தலாம். இப்படிச் சமூக வலைதளங்கள் மூலம் நம் திறமைகளைத் தொழிலாக்கலாம்.
இனி சமூக வலைதளங்களில் உங்கள் தொழிலை விளம்பரப்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்.
(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago