இசையருவி தொலைக்காட்சியில் ‘காதலுக்காக’, ‘துள்ளிசை’ நிகழ்ச்சிகள், சன் தொலைக்காட்சியில் ‘தேவதை’ தொடர் என்று சின்னத் திரையில் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் வட்டமடித்துவரும் ஷபானா, தற்போது சீரியல் நடிப்புக்கு விடுமுறை விட்டிருக்கிறார்.
“தேவதை தொடர் முடிந்ததும் தாமரை தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொகுப்பாளினியாக இசையருவி தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கே நேரம் சரியா இருக்கு. என்னோட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு புதுமை இருக்கணும்னு நினைப்பேன். ஒரு தொகுப்பாளினியாக நம் திறமையை வெளிக்காட்ட நிறைய வாய்ப்பிருக்கு. அ
தனால்தான் கொஞ்ச நாட்களுக்கு, தொடர்களில் நடிக்க வேண்டாம்னு முடிவெடுத்திருக்கேன். நடிப்புக்குப் பதில் இப்போது என் ஆர்வமெல்லாம் ஃபேஷன் டிசைனிங் பக்கம் திரும்பியிருக்கு. என்னோட ஆடை, அணிகலன்கள் எல்லாமே என் கைவண்ணத்தில் உருவானதா இருக்கணும்னு கொஞ்ச நாட்களாவே மனதில் ஓடிக்கிட்டிருக்கு. அதையும் செய்துபார்த்துடுவோம்னு இறங்கிட்டேன். வாழ்க்கையில் மீடியா இல்லாமல் என்னால இருக்க முடியாது. அதனாலதான் மீடியாவுல இருக்குற ஒருத்தரையே திருமணம் செய்துக்கணும்னு இருக்கேன். அதுக்கு இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகும்’’ என்கிறார் ஷபானா.
ஒளிப்படக் காதலி
புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குட்மார்னிங் தமிழா’ நிகழ்ச்சியை, தொகுப்பாளர் வருணோடு சேர்ந்து அசத்தலாக வழங்கிவருகிறார் சவும்யா ரகுநாத்.
“விடியற்காலையில் எல்லோரையும் உற்சாகமாக்குகிற மாதிரியான ஒரு நிகழ்ச்சிதான் இந்த ‘குட்மார்னிங் தமிழா’. உணவு, ஆரோக்கியம், ஆலோசனை, நிகழ்வுகள்னு இந்த ஒரு மணி நேரத்துல கலவையா கொடுக்குறோம். இந்த நிகழ்ச்சியோட படப்பிடிப்புக்கு உற்சாகமா ஓடுவேன். இதைத் தவிர, அப்பா நடத்திக்கிட்டிருக்கிற ‘நிழல் ஸ்டுடியோ’ ஒளிப்பட உலகம்தான் என்னோட முழுநேர பொழுதுபோக்கு. சமீபத்தில்கூட விதவிதமான ஒர்க் ஷாப் நடத்தினோம். தொகுப்பாளினிகள் சரண்யா, வந்திதாவை கான்சப்ட் ஸ்டைலில் ஒளிப்படங்கள் எடுத்து அசத்திட்டேன். தொகுப்பாளினியாக மீடியாவில் முகம் காட்டினாலும் என்னோட தனித்துவம் ஒளிப்படக் கலையில் அதிகமா வெளிப்படும். சின்ன வயதில் இருந்தே ஒளிப்படத்துறை மீது அப்படி ஒரு காதல்!’’ என்கிறார் சவும்யா.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago