சேனல் சிப்ஸ்: திருநங்கைகளுக்காக

By மகராசன் மோகன்

திருநங்கைகளுக்காக

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் திவ்யா, திருநங்கைகளின் மீது நன்மதிப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார்.

“செய்தி வாசிப்புப் பணிக்கு இடையே திருநங்கைகள் வாழ்க்கை குறித்த நிகழ்ச்சிகளில்தான் அதிக நேரம் செலவிடுகிறேன். அவர்களது வாழ்க்கை, மதிப்பு, சூழல், பாதுகாப்பு ஆகியவற்றில் இங்கே நிறைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அவர்களுக்காக மசோதா கொண்டுவருவதில்கூட இங்கே சிக்கல்கள் உள்ளன. அது குறித்த விழிப்புணர்வு சமூகத்துக்கும் தேவை. அதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி வழியாகவும் நேரடியாக மக்களிடம் சென்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்!’’ என்கிறார் திவ்யா.

நீ பாவம்மா

ஜீதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’ தொடரில் நடிக்கும் ஆனந்தி, தற்போது சன் தொலைக்காட்சியின் ‘பொன்னூஞ்சல்’ தொடரிலும் முகம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

“நானும் முழுக்க சிரிச்சிக்கிட்டே ஒரு தொடர் நடிச்சிடலாம்னு பார்க்குறேன். அதுக்கு வாய்ப்பே அமையாது போலிருக்கு. ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’ தொடரில் கணவன் கொடுமையில் இருந்து மீண்டுவந்து மாமனார், மாமியார் பாசம் மட்டும்போதும்னு நல்ல வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சிருக்கேன். அதுக்குள்ள, ‘பொன்னூஞ்சல்’ தொடரில் மாமியார் கொடுமை ஆரம்பிச்சிருக்கு. தொடர்ந்து அழுகாச்சி கதாபாத்திரமாகவே நடித்துவருவதால், வெளியே செல்லும்போது, ‘நீ ரொம்பப் பாவம்மா…’ன்னு பெண்கள் கவலையோடு விசாரிக்கறாங்க. நம்ம நடிப்பு நல்லா ரீச் ஆகியிருக் குன்னு சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் ஆனந்தி.

கடை திறக்க ஆசை

வசந்த் தொலைக்காட்சியில் ‘டாப் ஸ்டார் சிங்கர்’ ரியாலிட்டி நிகழ்ச்சியை முடித்துவிட்டு ‘பெண் ஓவியம்’, ‘கிச்சன் கில்லாடிகள்’ நிகழ்ச்சிகளில் முழு ஈடுபாடு செலுத்திவருகிறார் தேவி கிருபா.

“எப்பவுமே ரியாலிட்டி ஷோன்னா அது ஜாலிதான். புதுப் புதுத் திறமைசாலிகள், கலகலப்பான பேச்சு, ஆட்டம், பாட்டம்னு மகிழ்ச்சிக்குக் குறைவே இருக்காது. அதனால்தான் தேடித் தேடி ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஓடி வர்றேன். நானும் என் தம்பி கோகுலும் சேர்ந்து டிரெஸ்ஸஸ், அக்ஸசரீஸ் டிசைனிங்ல அதிக கவனம் செலுத்திட்டு வர்றோம். ‘தேவி கிருபா’ என்ற பெயரில் சீக்கிரம் ஒரு டிரெஸ்ஸிங் மால் கொண்டு வரணும்கிற அளவுக்கு அந்த ஐடியா போய்க்கிட்டிருக்கு’’ என்கிறார் தேவிகிருபா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்