வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்: இணையவெளியில் வடாம் போடலாம்!

By காம்கேர் கே.புவனேஸ்வரி

வாசகர்களிடமிருந்து ஏராளமான கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறேன். ஆன்லைனில் உங்களுக்கான ஆன்லைன் ஆபீஸை உருவாக்குவதற்கு முன், அடிப்படை சந்தேகங்களைத் தீர்த்துகொள்ளுங்கள்.

1. ஆன்லைன் பிசினஸில் எப்படி ரெஜிஸ்டர் செய்வது?

ஆன்லைன் பிசினஸ் என்பது ஒரு நிறுவனமோ அமைப்போ அல்ல. நீங்கள் உருவாக்குகிற பிசினஸை, இணையம் மூலம் நீங்களே செய்வதுதான் ஆன்லைன் பிசினஸ்.

2. ஆன்லைனில் ஆபீஸ் திறக்க வேண்டும். அதில் விளம்பரம் செய்ய வேண்டும். என்ன செய்யலாம்?

இணையத்தில் உங்களுக்கான ஒரு வெப்சைட்தான் உங்கள் ஆபீஸ். அதில் ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக், யு-டியூப், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்திக்கொள்ள முடியும். கட்டணத்துடன் கூடிய விளம்பரங்கள், கட்டணம் இல்லா விளம்பரங்கள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை குறித்து பின்னர் விரிவாகச் சொல்கிறேன்.

3. என்னிடம் திறமை எதுவும் இல்லை. ஆனால் இணையத்தில் கட்டுரை, செய்தி என்று வந்தால் அதைப் பற்றி விரிவாகக் கருத்துச் சொல்ல முடிகிறது. அதில் உள்ள பிழைகளை வெளிப்படுத்த முடிகிறது. இதை வைத்து என்ன செய்யலாம்?

உங்கள் கேள்வியிலேயே பதிலும் உள்ளது. தமிழ், ஆங்கிலத்தில் பிழைதிருத்தும் பணிக்கு (புரூஃப் ரீடிங்) வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதற்கு மொழி ஆளுமையும் தேவை. பதிப்பகங்களை அணுகினால் வாய்ப்புகள் கிடைக்கும். தாளில் பிழைதிருத்தம் செய்வதோடு, எம்.எஸ்.வேர்ட், பி.டி.எஃப் ஃபைலில் நேரடியாகப் பிழை திருத்தவும் செய்கிறார்கள். கம்ப்யூட்டரில் அடிப்படை சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால், அதையே பிசினஸாக்கலாம். ஆன்லைனிலும் ஆர்டர் எடுக்கலாம்.

4. ஆன்லைனில் என்ன பிசினஸ் தொடங்கலாம்?

உங்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அந்தத் துறையைத் தேர்ந்தெடுங்கள். உதாரணத்துக்கு, நீங்கள் வெயிலை வீணாக்காமல் விதவிதமாக வடாம் போடுபவரா? அதுதான் உங்கள் திறமை. உங்கள் வீட்டுத் தேவைகளைத் தாண்டி, உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என உங்கள் பிசினஸை விரிவுபடுத்துங்கள். சுத்தமான, சுகாதாரமான உங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்துங்கள். மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள். பிறகு ஆன்லைனில் அதை பிசினஸாக்கினால், உலகமெங்கும் உள்ள இந்தியர்களுக்கு அறிமுகமாகலாம். வீட்டில் தயாரிக்கும் ஹோம்மேட் வடாம்களுக்கு உள்நாட்டில் மட்டும் அல்ல, வெளிநாட்டு இந்தியர்களிடமும் நல்ல பெயர் கிடைக்கும்.

5. ஆன்லைனில் தொழில் செய்ய, வருமானம் ஈட்ட வாய்ப்பு தரும் நல்ல நிறுவனங்கள் சிலவற்றின் இணைய முகவரிகள்?

வேறு ஒருவர் உங்களுக்கு ஆன்லைனில் வேலைகளைக் கொடுத்தால், அதைச் செய்து கொடுத்து சம்பாதிக்கலாம் என்று நினைப்பதை விடுங்கள். உங்கள் திறமைகளைச் சம்பாத்தியமாக்குங்கள். ஆன்லைனில் விரிவுபடுத்துங்கள். அதற்கான ஆலோசனைகள் வர இருக்கின்றன, காத்திருங்கள்.

6. நான் பாட்டு வகுப்பு எடுக்கிறேன். அதை ஆன்லைனில் பிசினஸாக்குவது எப்படி?

பாட்டு டியூஷன் என்றல்ல, தமிழ், ஆங்கிலம், இந்தி மொழி கற்றுக்கொடுத்தல், மிருதங்கம் சொல்லித் தருதல்... இப்படி எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் செய்யலாம். ஆன்லைனில் ஸ்கைப் போன்ற சாஃப்ட்வேர் மூலம் டியூஷன் எடுத்துச் சம்பாதிப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள இந்தியர்கள், இதுபோன்ற ஆன்லைன் டியூஷன்களையே நம்பியிருக்கிறார்கள்.

7. என் இமெயில் பாஸ்வேர்டை யாரோ ஹேக் (hack) செய்துவிட்டார்கள். என்ன ஆகும்?

‘நான் சிங்கப்பூர் வந்துள்ளேன். பர்ஸ், பாஸ்போர்ட், விசா தொலைந்துவிட்டன. உடனடியாக என் அக்கவுண்ட்டுக்குப் பணத்தை டெபாசிட் செய்தால், ஊர் திரும்பியதும் கொடுத்துவிடுகிறேன்.’ - உங்கள் பாஸ்வேர்ட் திருடப்பட்டிருந்தால், இதுபோன்ற இமெயில், உங்கள் இமெயிலிலிருந்து உங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கப்படலாம். உங்கள் நண்பர்களும் இதை நம்பி, உங்களுக்கு அனுப்புவதாக நினைத்து, பணம் அனுப்பி வைப்பார்கள். உங்கள் இமெயிலில் இருந்து நீங்கள் இமெயில் அனுப்புவதைப் போலவே ஆபாசப் படங்கள், வீடியோக்கள் அனுப்பி வைக்கப்படலாம்.

8. இமெயிலில் கவனமாக எப்படி இருக்க வேண்டும்?

உங்களில் பலர் தங்கள் வங்கி விவரங்கள், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட், டெபிட், கிரெடிட் கார்டுகளின் பின் எண் போன்றவற்றைத் தங்கள் இமெயிலுக்கே மெயிலாக அனுப்பி, பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். இமெயில் பாஸ்வேர்டைத் தன்வசப்படுத்தியவர்கள், இமெயிலில் உள்ள வங்கி விவரங்கள் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மொத்தப் பணத்தையும் தங்கள் அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்துவிடுவார்கள். எனவே, இமெயிலில் உங்கள் வங்கி விவரங்களையும் பாஸ்வேர்ட்களையும் மெயிலாக வைத்துக்கொள்ள வேண்டாம். கவனமாக இருங்கள். முக்கியமான தகவல்களை இமெயிலில் அனுப்பினாலும் பெற்றாலும் போனிலும் உறுதி செய்துகொண்டு செயல்படலாம்.

9. என் இமெயில் பாஸ்வேர்ட் மறந்துவிட்டது. வேறு பாஸ்வேர்ட் பெறுவது எப்படி?

இமெயில் பாஸ்வேர்ட் தொலைந்துவிட்டால், உடனடியாக மாற்று பாஸ்வேர்ட் பெற முடியும். இமெயில் முகவரி வைத்துள்ள வெப்சைட்டுகளில் Forget Password என்ற லிங்க் இருக்கும். அதை க்ளிக் செய்து, அதன் வழிகாட்டுதல்படி சென்றுகொண்டே இருந்தால், தொலைந்த பாஸ்வேர்டைத் திரும்பப் பெறலாம்.

(சம்பாதிப்போம்)

கட்டுரையாளர், மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி தொடர்புக்கு: compcare@hotmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்