பள்ளி முடிந்து பசியோடு வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்த நொறுவைகளைக் கொடுக்கலாம். அதையும் சிறுதானியங்களில் செய்துதருவது சிறப்பு. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பும் தினை பக்கோடா செய்யக் கற்றுத்தருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த ரேவதி.
என்னென்ன தேவை?
தினை மாவு - 1 கப்
கடலை மாவு - அரை கப்
அரிசி மாவு - கால் கப்
பெரிய வெங்காயம் - 4
கறிவேப்பிலை - 4 கொத்து
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தினையை நன்றாகப் பொடித்து, சலித்துக்கொள்ளுங்கள். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய், தினை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யைச் சுடவைத்து அதில் ஊற்றி, கரண்டியால் கிளறுங்கள். அதில் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையுங்கள். மாவு சிறிது கெட்டியாக இருக்க வேண்டும். அப்போதுதான் பக்கோடா மொறுமொறுவென்று இருக்கும். கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், மாவைக் கையால் உதிர்த்துவிடுங்கள். பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள். கறிவேப்பிலையைப் பொரித்து பக்கோடாவின் மீது தூவிப் பரிமாறுங்கள்.
சுவை புதிது
பாரம்பரியமும் புதுமையும் இணைந்த சமையலில் வல்லவரா நீங்கள்? உங்கள் சமையல் திறமைக்குக் களம் அமைத்துத் தருகிறோம். காலத்துக்கு ஏற்ற அனைவருக்கும் உகந்த சமையல் குறிப்புகளை எழுதி அனுப்புங்கள். ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
முகவரி: ‘பெண் இன்று’, இந்து தமிழ் திசை, 124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை, சென்னை-600002.
மின்னஞ்சல்: penindru@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago