உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் பிரதான உணவு வகைகள் என்று குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் இருக்கும். ஆனால், உலகம் முழுவதும் பொதுவாக ஏற்று கொள்ளப்பட்ட ஒரு திரவ உணவு என்று சொன்னால், அது பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் தேவையானது இது. குறிப்பாகப் பெண்களுக்கு பால் மிகவும் அவசியம்.
பொதுவாக வெள்ளை உணவுப் பொருட்களான அரிசி, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் வரிசையில் பாலையும் சேர்த்துக்கொண்டு, அதைக் குடிக்க சிலர் யோசிப்பார்கள். ஆனால், கால்சியம், கொழுப்பு, மக்னீசியம், புரதம், கார்போஹைட்ரேட் என ஏராளமான சத்துகள் பாலில் உள்ளன. மற்ற உணவுப் பொருட்களைவிட கால்சியச் சத்து பாலில் மிகவும் அதிகம்.
எலும்பின் வளர்ச்சி உறுதியாக இருக்க சிறு வயது முதலே கால்சியச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாகப் பாலை தினசரி குடிக்க வேண்டும். கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு மூட்டு வலி உள்பட எலும்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் வரும். குறிப்பாகப் பெண்களுக்கு மூட்டு வலி பிரச்சினை அதிகமாகவே வரும். 30 வயதைக் கடந்த பெண்கள், மாதவிடாய் முற்றுப்பெறும் நிலையில் உள்ள பெண்களுக்குக் கால்சியச் சத்துக் குறைபாடு ஏற்படும். அசைவ உணவு வகைகளில் கால்சியச் சத்து அதிகம் இருந்தாலும், அதைச் சாப்பிட விரும்பாதவர்களும் உண்டு. ஆனால், பால் அப்படியில்லை. சகல தரப்பினரும் ஏற்றுகொண்ட பரிபூரண உணவு என்பதால், இதைத் தினமும் அருந்தினால் போதுமான கால்சியச் சத்தைப் பெற முடியும்.
பால் தரும் நன்மைகள்
கர்ப்பிணிகள் குறிப்பிட்ட அளவில் பால் குடிக்க வேண்டும். ஏனெனில், குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு அது முக்கியம். இளம் பருவத்தினருக்கு எலும்பு முறிவு வராமல் குறைக்கும் ஆற்றல் கால்சியச் சத்துக்கு உண்டு. அதே போல மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாகத் தினமும் பால் குடிக்க வேண்டும். பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத் துக்கும் பால் மிக முக்கியம்.
கர்ப்பிணிகள் குறிப்பிட்ட அளவில் பால் குடிக்க வேண்டும். ஏனெனில், குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு அது முக்கியம். இளம் பருவத்தினருக்கு எலும்பு முறிவு வராமல் குறைக்கும் ஆற்றல் கால்சியச் சத்துக்கு உண்டு. அதே போல மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாகத் தினமும் பால் குடிக்க வேண்டும். பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத் துக்கும் பால் மிக முக்கியம்.
இவை தவிர ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், உடல் பருமனைக் குறைப்பதற்கும், இதய நோய்க்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் கொழுப்பு குறைந்த பாலைக் குடிக்கலாம் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
"பாலைத் தொடர்ந்து பெண்கள் குடிப்பதால் புரதம், கால்சியச் சத்துகளைப் பெற முடியும். பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளில் புரதம், கால்சியச் சத்துகள் முக்கிய மானவை. கால்சியச் சத்து குறைபாடு ஏற்பட்டால் எலும்பு அடர்த்தி குறைந்துவிடும். இது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். பாலில் இந்தச் சத்துகள் இருப்பதால் இதைக் குடிப்பது நல்லது. அசைவ உணவு வகைகளைச் சாப்பிடாதவர் களுக்குப் பாலில் உள்ள புரதச் சத்து நிச்சயம் பயனளிக்கும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் மல்லிகா திருவதனன்.
அப்புறமென்ன, ஆரோக்கியமாக வாழப் பாலைத் தினமும் குடிக்க வேண்டியதுதானே?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago